Apple நிறுவனத்தோட நேற்று நடைபெற்ற Event, முன்னாள் CEO Tim Cook-ஓட ஒரு சின்ன Hello-வோட ஆரம்பித்து, புதிய CEO John Ternus-ஐ அறிமுகப்படுத்தி Event-ஐ தொடங்குனாங்க. நான் எப்போதும் சொல்வது போல Apple-ஓட Video Presentation பயங்கரமா இருக்கும், அதுவும் இந்த முறை கொஞ்சம் கூட Miss ஆகவே இல்லை.
Tim Cook-ஓட அந்த சின்ன அறிமுகத்துக்கு பிறகு John Ternus Stage-க்கு வந்து இந்த Event-ஐ ஆரம்பிச்சாரு. புதிய CEO பொறுப்பேற்ற பிறகு அவர் கலந்து கொண்ட முதல் பெரிய Apple Event என்பதால் ஆரம்பத்தில் இருந்தே இந்த Event மீது எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
அதிலும் பல மாதங்களாக பேசப்பட்டு வந்த Foldable iPhone உண்மையிலேயே அறிமுகமாகி இருக்கிறது. அதோட புதிய iPhone 18 Pro, Apple Watch Series 12, Apple Watch Ultra 4 மற்றும் AirPods 5 ஆகியவற்றையும் Apple அறிமுகப்படுத்தி இருக்கிறது.
iPhone Duo
இந்த Event-ல் எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்தது Apple அறிமுகப்படுத்திய முதல் Foldable iPhone தான். இதற்கு iPhone Duo என்று பெயர் வைத்திருக்காங்க. வழக்கமான Smartphone போல வெளியில் 5.4-inch Display இருக்கும். அதை Open பண்ணும்போது உள்ளே 7.6-inch Display கிடைக்கும். இதனால் ஒரு பெரிய Display-ல் ஒரே நேரத்தில் இரண்டு Apps பயன்படுத்துவது போன்ற Multitasking வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதில் புதிய A20 Pro Chip பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதோட Apple Pencil Support, Touch ID போன்ற சில புதிய விஷயங்களும் இருக்கிறது. Storage அதிகபட்சமாக 2TB வரை செல்லும். இதனுடைய ஆரம்ப விலை அமெரிக்காவில் $1,999. இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ₹2,99,900. Pre-order அக்டோபர் 16 முதல் தொடங்கும் என்றும் அக்டோபர் 23 முதல் விற்பனைக்கு வரும் என்றும் Apple அறிவித்து இருக்கிறது.
iPhone 18 Pro மற்றும் Pro Max
அடுத்ததாக iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max அறிமுகமாகி இருக்கிறது. இந்த இரண்டு மாடல்களிலும் புதிய A20 Pro Chip பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. Camera பக்கத்திலும் முக்கியமான Upgrade கொடுக்கப்பட்டு இருக்கிறது. Variable Aperture Camera, மேம்படுத்தப்பட்ட Camera Processing மற்றும் Apple Intelligence தொடர்பான புதிய Features இதில் இருக்கிறது.

iPhone 18 Pro-வின் இந்திய விலை ₹1,64,900 முதல் தொடங்குகிறது. iPhone 18 Pro Max-ன் விலை ₹1,79,900 முதல் தொடங்குகிறது. இரண்டு மாடல்களுக்கும் 256GB Storage-ல் இருந்து Options கிடைக்கும். இந்தியாவில் Pre-order செப்டம்பர் 12 முதல் தொடங்கி, செப்டம்பர் 18 முதல் விற்பனைக்கு வருகிறது.
இங்க ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த Event-ல் வழக்கமான iPhone 18 அறிமுகமாகவில்லை. Apple இந்த முறை Pro Models மற்றும் Foldable iPhone மீது தான் முக்கிய கவனம் செலுத்தி இருக்கிறது.
Apple Watch Series 12
Apple Watch Series 12-லும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வந்து இருக்காங்க. புதிய S11 Chip, மேம்படுத்தப்பட்ட Health Sensors மற்றும் புதிய Health Tracking Features இதில் இருக்கிறது. அதோட Readiness Score என்ற புதிய Feature மூலமாக நம்முடைய உடல் நிலை மற்றும் Activity-க்கு ஏற்ப அந்த நாளில் நம்முடைய Readiness எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். இதில் இன்னொரு சுவாரஸ்யமான Feature என்ன அப்டினு பார்த்தோம்னா Audio Intelligence.

Watch-ல் இருக்கும் Microphone மூலமாக நம்மை சுற்றி நடக்கும் Conversation-ல் Miss ஆன விஷயங்களை Audio Intelligence Features மூலம் கண்டுபிடிக்க முடியும். அதோட கடந்த சில விநாடிகளில் நடந்த Conversation-ஐ Transcript ஆக பார்க்கும் வசதியும் இருக்கிறது.
இதை கேட்ட உடனே “அப்போ Apple Watch எப்போதும் நம்மை Record பண்ணிக்கிட்டு இருக்குமா?” என்ற கேள்வி வரலாம். அதற்காக Apple Privacy-க்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறது. Audio Processing Watch-ன் Secure hardware-ல் நடக்கும் என்றும் Audio Recordings நிரந்தரமாக Store செய்யப்படாது என்றும் Apple தெரிவித்திருக்கிறது. இந்த Apple Watch Series 12 இந்தியாவில் ₹56,900 முதல் தொடங்குகிறது.

அதேபோல அதிகமாக Fitness மற்றும் Outdoor Activities பயன்படுத்துபவர்களுக்காக Apple Watch Ultra 4 அறிமுகமாகி இருக்கிறது. இதன் இந்திய விலை ₹1,09,900 முதல் தொடங்குகிறது. இரண்டு Watch-களுமே செப்டம்பர் 18 முதல் கிடைக்கும்.
AirPods 5
AirPods-லும் புதிய Generation வந்திருக்கிறது. AirPods 5-ல் Open-ear Design-லேயே Active Noise Cancellation கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதோட Sound Quality மேம்படுத்தப்பட்டு இருப்பதுடன் Siri AI மற்றும் Live Translation போன்ற Features-ம் இதில் கிடைக்கும். AirPods 5-ன் இந்திய விலை ₹14,900 முதல் தொடங்குகிறது. Wireless Charging Case உடன் வாங்கினால் ₹17,900 ஆகும். இதன் விற்பனை செப்டம்பர் 18 முதல் தொடங்குகிறது.

இந்த Apple Event-ல் பெரிய Highlight Foldable iPhone தான். பல வருடங்களாக Samsung உள்ளிட்ட நிறுவனங்கள் Foldable Phone கொண்டு வந்த பிறகு Apple எப்போது இந்த Market-க்குள் வரும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், இப்போது Apple-ம் அதில் நுழைந்து இருக்கிறது.
அதோட iPhone 18 Pro Series-ல் Performance, Camera மற்றும் AI Features-க்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்காங்க. Apple Watch-ல் AI மற்றும் Health Tracking பக்கம் அதிக கவனம் செலுத்தி இருக்காங்க. AirPods-லேயும் ANC மற்றும் AI Features கொண்டு வந்து இருக்காங்க.
ஆனால் இவை எல்லாவற்றையும் விட கவனிக்க வேண்டிய விஷயம் Pricing தான். குறிப்பாக ₹2,99,900 முதல் தொடங்கும் iPhone Duo இந்தியாவில் எவ்வளவு பேரை வாங்க வைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.