ஜெர்மனி அரசியல்வாதிகளின் iPhone-களை குறிவைத்த Spyware Attack!

நாம ஒரு iPhone பயன்படுத்துகிறோம் என்றால் அதில் நம்முடைய தனிப்பட்ட தகவல்கள் எல்லாம் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைப்போம். ஆனால் எவ்வளவு பாதுகாப்பான போனாக இருந்தாலும், சில நேரங்களில் அதில் இருக்கும் Security குறைபாடுகளை பயன்படுத்தி Hackers நம்முடைய தகவல்களை திருட முடியும். இப்போது ஜெர்மனியில் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பயன்படுத்தும் iPhone-கள் Spyware Attack-க்கு குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த விஷயத்தை ஜெர்மனி அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டு இருக்கிறது. அதோடு, Apple நிறுவனமும் சில பயனாளர்களுக்கு அவர்களுடைய iPhone-கள் Spyware Attack-க்கு குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்று Security Alert அனுப்பி இருக்கிறது.

என்ன நடந்தது?

ஜெர்மனியில் இருக்கும் Bundestag என்ற நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் சிலருக்கு Apple நிறுவனத்திடம் இருந்து Threat Notification வந்திருக்கிறது. அதாவது, அவர்களுடைய iPhone-கள் Spyware மூலம் தாக்கப்பட்டிருக்கலாம் என்று Apple எச்சரித்திருக்கிறது.

இந்த எச்சரிக்கைகள் அக்டோபர் 29 முதல் வரத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து ஜெர்மனியின் Federal Office for Information Security (BSI) என்ற Cybersecurity அமைப்பு, எச்சரிக்கை கிடைத்தவர்களை தொடர்புகொண்டு அவர்களுடைய சாதனங்கள் பாதுகாப்பாக இல்லை என்று கருதி செயல்படுமாறு அறிவுறுத்தி இருக்கிறது.

ஆனால் இதில் யாருடைய போன்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன, மொத்தமாக எத்தனை பேர் குறிவைக்கப்பட்டிருக்கிறார்கள், இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து இதுவரைக்கும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. அதேபோல, எச்சரிக்கை வந்த எல்லா போன்களும் Hack செய்யப்பட்டுவிட்டன என்றும் சொல்ல முடியாது.

Spyware என்றால் என்ன?

சரி, முதலில் Spyware என்றால் என்ன என்று பார்ப்போம். Spyware என்பது நமக்குத் தெரியாமலேயே நம்முடைய போனில் இருக்கும் தகவல்களை கண்காணிக்கவும், திருடவும் பயன்படுத்தப்படும் ஒரு வகையான Software. இது ஒரு போனில் Install ஆகிவிட்டால், அதில் இருக்கும் Messages, Contacts, Location போன்ற தகவல்களை Attack செய்பவர்களால் அணுக முடியும்.

சில Advanced Spyware-களால் Encrypted Messaging Apps-ல் இருக்கும் Messages-ஐ கூட படிக்க முடியும். அதோடு, போனில் இருக்கும் Camera மற்றும் Microphone-ஐ பயன்படுத்தி ஒருவரை கண்காணிக்கவும் முடியும்.

இதற்கு ஒரு உதாரணமாக Pegasus என்ற Spyware-ஐ சொல்லலாம். இதை உருவாக்கிய NSO Group என்ற நிறுவனம் குறித்து ஏற்கனவே பல சர்ச்சைகள் இருக்கின்றன. ஆனால் இந்த முறை ஜெர்மனி அரசியல்வாதிகளின் போன்களை குறிவைத்த Attack-ல் Pegasus தான் பயன்படுத்தப்பட்டது என்று உறுதிப்படுத்தப்படவில்லை.

Zero-click Attack என்றால் என்ன?

இந்தச் செய்தியில் முக்கியமாக கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் Zero-click Attack. பொதுவாக நம்முடைய போனில் ஒரு Malicious Link வரும். அதை நாம் Click செய்தாலோ அல்லது ஏதாவது ஒரு File-ஐ Download செய்து Open செய்தாலோதான் சில வகையான Cyber Attack நடைபெறும்.

ஆனால் Zero-click Attack என்பது இதிலிருந்து வேறுபட்டது. இதில் பயனாளர்கள் எந்த Link-ஐயும் Click செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சில நேரங்களில் ஒரு Message-ஐ Open செய்யக்கூட வேண்டியதில்லை. போனில் இருக்கும் Security Vulnerability-ஐ பயன்படுத்தியே Attack செய்ய முடியும்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியான Financial Times தகவலின்படி, Attack செய்பவர்களுக்கு குறிவைக்கப்பட்டவர்களின் Phone Number மட்டும் தெரிந்திருந்தாலே போதும் என்ற வகையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்கலாம். இதுபோன்ற Attack-கள் மிகவும் ஆபத்தானவை. ஏனென்றால், நாம் எந்தத் தவறும் செய்யாமல் இருந்தாலும், போனில் இருக்கும் ஒரு Security குறைபாட்டை பயன்படுத்தி நம்மை குறிவைக்க முடியும்.

Apple Security Alert வந்தால் என்ன செய்ய வேண்டும்?

Apple அவ்வப்போது குறிப்பிட்ட பயனாளர்கள் Spyware Attack-க்கு குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்று கண்டறிந்தால் அவர்களுக்கு Threat Notification அனுப்பும். இதுபோன்ற எச்சரிக்கைகள் சாதாரண Security Notifications-ஐ விட மிகவும் முக்கியமானவை.

ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். Apple-லிருந்து Alert வந்துவிட்டது என்பதற்காக போன் நிச்சயமாக Hack செய்யப்பட்டுவிட்டது என்று அர்த்தம் கிடையாது. அந்த சாதனம் தாக்குதலுக்கு குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்பதைத்தான் அது தெரிவிக்கிறது.

இந்தச் சம்பவத்தில், Apple-லிருந்து எச்சரிக்கை பெற்றவர்கள் தங்களுடைய சாதனம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதி செயல்பட வேண்டும் என்று ஜெர்மனியின் BSI அறிவுறுத்தி இருக்கிறது.

நீங்களும் இதுபோன்ற Security Alert ஒன்றைப் பெற்றால், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் Apple நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது நல்லது. தேவையில்லாத Link-களை Click செய்வதைத் தவிர்ப்பது, Software Update-களை முறையாக Install செய்வது போன்ற அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

TWICE WEEKLY

Tech Updates, Twice a Week

Get our latest tech reviews, guides, and industry news — delivered twice a week, straight to your inbox.

2 emails a week. Unsubscribe anytime.

Leave a comment