இனி WhatsApp மூலமாகவே PF Balance பார்க்கலாம்! EPFO அறிமுகப்படுத்திய புதிய வசதி

நீங்க ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறீங்க அப்டினா உங்களோட Salaryல இருந்து PF (Provident Fund) என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அதோட உங்களுடைய நிறுவனமும் ஒரு குறிப்பிட்ட தொகையை உங்களுடைய PF Accountக்கு செலுத்தும். இப்படி சேரும் பணம் எவ்வளவு இருக்கிறது, நிறுவனத்திலிருந்து பணம் முறையாக செலுத்தப்படுகிறதா அப்டினு தெரிஞ்சுக்க நாம EPFO Website அல்லது UMANG App பயன்படுத்த வேண்டியிருக்கும்.

ஆனால் இனிமேல் இதற்காக தனியாக Websiteக்கு போக வேண்டிய அவசியம் இல்லாமல் WhatsApp மூலமாகவே PF Balance மற்றும் அதற்கான விவரங்களை தெரிந்துகொள்ளும் வசதியை EPFO அறிமுகப்படுத்தி இருக்காங்க.

என்னென்ன விவரங்களை WhatsAppல் பார்க்கலாம்?

இந்தியாவின் Employees’ Provident Fund Organisation (EPFO) நவம்பர் 1, 2026 அன்று இந்த புதிய WhatsApp Serviceஐ அறிமுகப்படுத்தி இருக்காங்க. இதன் மூலமாக உங்களுடைய PF Account தொடர்பான முக்கியமான விவரங்களை எளிமையாக தெரிந்துகொள்ள முடியும்.

அதாவது,

  • PF Balance: உங்களுடைய PF Accountல் தற்போது எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
  • Last 5 Transactions: உங்களுடைய PF Accountல் கடைசியாக நடந்த 5 Transactions பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
  • Passbook Details: உங்களுடைய PF Passbook விவரங்களை அணுகலாம்.
  • PMVBRY Scheme: Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana (PMVBRY) தொடர்பான வழிகாட்டுதல்களையும் உதவிகளையும் பெறலாம்.

இதன் மூலமாக ஒவ்வொரு முறையும் EPFO Websiteக்கு சென்று Login செய்வதற்கு பதிலாக, நாம தினமும் பயன்படுத்தும் WhatsAppலேயே இந்த விவரங்களை எளிமையாக தெரிந்துகொள்ள முடியும்.

WhatsAppல் PF Balance எப்படி Check செய்வது?

இந்த புதிய வசதியை பயன்படுத்துவதற்கு WhatsAppல் EPFOவின் Verified Numberக்கு Message அனுப்ப வேண்டும்.

  1. முதலில் WhatsAppல் EPFOவின் அதிகாரப்பூர்வ எண் 8796441800 பயன்படுத்தி Chat தொடங்க வேண்டும்.
  2. அதன் பிறகு உங்களுக்கு விருப்பமான Languageஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
  3. PF Balance, Last 5 Transactions அல்லது Passbook Details போன்ற Optionsல் தேவையானதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  4. உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த OTP Verification கேட்கப்பட்டால் அதை முடிக்க வேண்டும்.
  5. அதன் பிறகு உங்களுடைய PF Account விவரங்களை பார்க்க முடியும்.

இந்த வசதியில் ஒரு சிக்கலும் இருக்கிறது!

இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே சில பயனாளர்கள் WhatsApp Service சரியாக வேலை செய்யவில்லை என்று புகார் தெரிவித்து இருக்காங்க. PF Balance அல்லது Passbook போன்ற Optionsஐ தேர்ந்தெடுக்கும்போது Error Message வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இதனால் இந்த Service அனைவருக்கும் தற்போது சீராக வேலை செய்கிறது என்று சொல்ல முடியாது. உங்களுக்கும் இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டால் சிறிது நேரம் கழித்து மீண்டும் முயற்சி செய்யலாம். அதுவரை வழக்கம்போல EPFO Website அல்லது UMANG App மூலமாகவும் PF விவரங்களை பார்க்கலாம்.

மேலும், WhatsAppல் வரும் எந்தவொரு Messageஐயும் நம்பி உங்களுடைய OTP, UAN Password அல்லது Bank Details போன்றவற்றை தெரியாத நபர்களிடம் பகிர வேண்டாம்.

PF Account விவரங்களை தெரிந்துகொள்வது இனி இன்னும் எளிதாகும்!

EPFOவில் கோடிக்கணக்கான மக்கள் தங்களுடைய PF பணத்தை சேமித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் போது, தங்களுடைய Accountல் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்கே Websiteல் Login செய்வது அல்லது சில நேரங்களில் Server பிரச்சனைகளை எதிர்கொள்வது பலருக்கும் சிரமமாக இருக்கும்.

அந்த வகையில் WhatsApp மூலமாகவே இந்த விவரங்களை தெரிந்துகொள்ளும் வசதி பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, Technology பயன்படுத்துவதில் அதிகம் பரிச்சயம் இல்லாதவர்களுக்கும் இந்த வசதி உதவியாக இருக்கும்.

ஆனால், இந்த Service அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே சில Technical Issues இருப்பதாக புகார்கள் வந்திருப்பதால், அவற்றை சரிசெய்து அனைவரும் சீராக பயன்படுத்தும் வகையில் EPFO மேம்படுத்துகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

TWICE WEEKLY

Tech Updates, Twice a Week

Get our latest tech reviews, guides, and industry news — delivered twice a week, straight to your inbox.

2 emails a week. Unsubscribe anytime.

Leave a comment