நாம ஒரு Video Edit பண்ணணும் அப்டினா Computerல Adobe Premiere Pro பயன்படுத்தி இருப்போம், குறிப்பாக Professional Video Editors மத்தியில் Adobe Premiere Pro ரொம்ப பிரபலமான ஒரு Video Editing Software. ஆனால் இப்ப நாம Phoneலேயே அதே Premiere Experience-ஐ பயன்படுத்திக்கொள்ளலாம். அதுவும் இப்போது Android Phone பயன்படுத்துறவங்களும் பயன்படுத்தலாம்.

இதுக்கு முன்னாடியே Premiere-ஐ iPhone பயன்படுத்துறவங்களுக்கு அறிமுகம் பண்ணி இருந்தாங்க. அதாவது கடந்த வருடம் September மாதம் iPhoneக்கான Premiere App வெளியானது. அப்ப Android Version எப்ப வரும் என்று பலரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், இப்போது கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு Android Version வெளியாகி இருக்கிறது. சரி இந்த Premiere Mobile Appல அப்படி என்ன இருக்கு என்று பார்த்தோம்னா, நாம சாதாரணமாக ஒரு Video Editing Appல எதிர்பார்க்குற எல்லா முக்கியமான Features-ம் இதில் இருக்கிறது. Multi-track Timeline மூலமாக Video, Music, Voiceover, Effects என எல்லாவற்றையும் ஒரே Timelineல வைத்து Edit பண்ணிக்கொள்ளலாம்.
அதோட Frame-accurate Editing இருப்பதால் நமக்கு தேவையான இடத்தில் Videoவை ரொம்ப துல்லியமாக Cut பண்ணிக்கொள்ள முடியும். அதுமட்டுமில்லாமல் Background Noise-ஐ குறைத்து Audioவை இன்னும் தெளிவாக மாற்றுவதற்கு Enhance Audio என்ற Featureம் கொடுத்து இருக்காங்க.

நாம Edit பண்ணிய Videoவை 4K வரைக்கும் Export பண்ணிக்கொள்ள முடியும். Adobe Stockல இருக்குற Music, Effects மற்றும் மற்ற Creative Assets-ஐயும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதோட Adobe-வுடைய Firefly AI மூலமாக Generative Fill, Image-to-Video, Generate Sound Effects போன்ற சில AI Features-ம் இதில் இருக்கிறது.
இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்று பார்த்தோம்னா, இதை பயன்படுத்த Adobe Account கட்டாயம் கிடையாது. அதாவது App-ஐ Install பண்ணிட்டு Login அல்லது Subscription எதுவுமே இல்லாமல் Editing ஆரம்பிக்கலாம். Projects-ஐ Localஆக Save பண்ணிக்கொள்ளவும், Videoவை Export பண்ணிக்கொள்ளவும் முடியும். சில குறிப்பிட்ட Features மற்றும் Assets-க்கு மட்டும் Sign in தேவைப்படலாம். இது ஒரு Free App தான். ஆனால் கூடுதலாக Generative AI Credits அல்லது Storage தேவைப்பட்டால் அதற்கு Upgrade செய்ய வேண்டி இருக்கும். அதாவது சாதாரணமாக Video Edit பண்ணுவதற்கு தேவையான முக்கியமான Features எல்லாமே Freeஆக கிடைக்கிறது.
இப்ப இந்த Appஐ யார் பயன்படுத்தலாம் அப்டினு பார்த்தோம்னா, Social Mediaக்காக Video Edit பண்ணுறவர்கள், YouTube Videos உருவாக்குறவர்கள், Short Videos பண்ணுறவர்கள் என யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். Professional Video Editor ஆக இருந்தாலும் Phoneல ஒரு Quick Edit பண்ணுவதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆனால் Desktop Premiere Proல இருக்குற எல்லா Features-ம் Mobile Appல இப்பவே இருக்கிறது என்று சொல்ல முடியாது. Adobe Fonts, Keyframes, Cropping, Beat Detection மற்றும் Mobileல ஆரம்பித்த Editஐ Desktopல தொடர்ந்து Edit பண்ணுற Continue Editing போன்ற சில Features இன்னும் வர வேண்டி இருக்கிறது.
இதற்கு முன்னாடி Adobe Premiere Rush என்ற Mobile Editing App இருந்தது. இப்போது Premiere Mobile தான் அந்த இடத்தை எடுத்துக்கொள்ள போகிறது, Premiere Rushக்கு September 30, 2026 முதல் Support நிறுத்தப்பட இருக்கிறது.