Linked Devices-ல் குறிப்பிட்ட Chats வராமல் தடுக்க புதிய Privacy Feature அறிமுகப்படுத்தும் WhatsApp

நாம WhatsApp-ஐ Phone-ல மட்டும் பயன்படுத்துறது இல்ல. இப்ப WhatsApp Web, Desktop, Tablet என பல Device-களிலும் நம்முடைய WhatsApp Account-ஐ Link பண்ணி பயன்படுத்திக்கிட்டு இருக்கோம். இது ரொம்பவே வசதியான விஷயம் தான். ஆனால் நம்முடைய எல்லா Chats-ம் Linked Devices-லயும் வருவது சில நேரங்களில் Privacy பிரச்சனையாக இருக்கலாம்.

இதை சரி செய்யும் விதமாக WhatsApp இப்போது ஒரு புதிய Restricted Chat என்ற Privacy Feature-ஐ சோதனை செய்து வருகிறது. இந்த Feature மூலமாக நமக்கு முக்கியமான அல்லது தனிப்பட்ட ஒரு Chat-ஐ Primary Phone-ல் மட்டும் வைத்துக்கொள்ள முடியும்.

WhatsApp Restricted Chat என்றால் என்ன?

சாதாரணமாக நாம WhatsApp Account-ஐ Laptop அல்லது வேறு ஒரு Phone-ல் Link பண்ணினால், நம்முடைய Chats-ம் அந்த Device-க்கு Sync ஆகும். WhatsApp-ன் புதிய Restricted Chat Feature-ஐ பயன்படுத்தினால் குறிப்பிட்ட ஒரு Chat-ஐ மட்டும் Linked Devices-ல் காட்டாமல் தடுக்க முடியும்.

privacy restriction on whatsapp

Credits : WABETAINFO

அதாவது அந்த Chat நம்முடைய Main Phone-ல் மட்டுமே இருக்கும். WhatsApp Web, Desktop அல்லது இன்னொரு Linked Phone-ல் அந்த Chat வராது. உதாரணத்திற்கு நம்முடைய Personal Chat ஒன்று இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதே WhatsApp-ஐ நாம Office Laptop-லயும் பயன்படுத்துறோம். அந்த Personal Chat Laptop-ல் தெரியக்கூடாது என்று நினைத்தால் இந்த Feature பயன்படும்.

Chat-ஐ மட்டும் Restrict பண்ணலாம்

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நம்முடைய முழு WhatsApp Account-ஐ Restrict பண்ண வேண்டியதில்லை. நமக்கு தேவையான Individual Chat-ஐ மட்டும் Restricted Chat ஆக மாற்றிக்கொள்ளலாம். அதனால் மற்ற Chats வழக்கம் போல Linked Devices-ல் இருக்கும்.

இதன் மூலம் Privacy தேவைப்படும் சில Chats-க்கு மட்டும் கூடுதல் பாதுகாப்பை கொடுக்க முடியும்.

ஏற்கனவே இருந்த Privacy Features-ம் இதில் இருக்கிறது

இந்த Restricted Chat Feature என்பது புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு தனி Feature மட்டும் கிடையாது. ஏற்கனவே WhatsApp-ல் இருந்த Advanced Chat Privacy Feature-ஐ Upgrade செய்து இதை கொண்டு வருகிறார்கள்.இதனால் Restricted Chat-ல் சில கூடுதல் Privacy Controls-ம் இருக்கும்.

உதாரணத்திற்கு அந்த Chat-ல் வரும் Media தானாகவே Phone Gallery-ல் Save ஆகாது. அதேபோல அந்த Chat-ஐ முழுமையாக Export செய்யவும் முடியாது. அந்த Conversation-ல் Meta AI-ஐ பயன்படுத்துவதற்கும் கட்டுப்பாடு இருக்கும்.

Linked Devices-க்கு இது ஏன் முக்கியம்?

நாம ஒரு WhatsApp Account-ஐ Laptop அல்லது இன்னொரு Device-ல் Link பண்ணிவிட்டோம் என்றால் அந்த Device-லும் நம்முடைய Messages கிடைக்கும்.

WhatsApp-ன் Linked Devices வசதி பாதுகாப்பானதாகவும் End-to-End Encryption-ஐ பயன்படுத்துவதாகவும் WhatsApp சொல்கிறது. ஆனால் சில குறிப்பிட்ட Chats-ஐ எந்த Linked Device-லும் வைத்திருக்க வேண்டாம் என்று நினைக்கிறவர்களுக்கு இந்த புதிய Feature இன்னும் ஒரு Privacy Layer-ஐ கொடுக்கிறது.

குறிப்பாக Linked Devices மூலமாக WhatsApp Messages-ஐ Access செய்யும் சில Third-party Clients அல்லது AI Agents-க்கும் இந்த Restricted Chat கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது எல்லாருக்கும் கிடைக்கும்?

இப்போதைக்கு இந்த Feature Beta Testing-ல் தான் இருக்கிறது.

Android-ல் WhatsApp Beta version 2.26.39.11 பயன்படுத்தும் சில Beta Testers-க்கு இது கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. iPhone-ல் 26.39.10.20 Beta version பயன்படுத்தும் சில TestFlight users-க்கும் இந்த Feature கிடைக்கிறது. ஆனால் சாதாரண WhatsApp Users அனைவருக்கும் இந்த Feature எப்போது வரும் என்பது குறித்து WhatsApp இன்னும் எந்த ஒரு குறிப்பிட்ட தேதியையும் அறிவிக்கவில்லை. இதனால் தற்போது Beta version பயன்படுத்தினாலும் எல்லாருக்கும் இந்த Feature கிடைக்கும் என்று சொல்ல முடியாது.

TWICE WEEKLY

Tech Updates, Twice a Week

Get our latest tech reviews, guides, and industry news — delivered twice a week, straight to your inbox.

2 emails a week. Unsubscribe anytime.

Leave a comment