டிசம்பர் முதல் Remove.bg இணையதளம் இயங்காது!

நாம ஏதாவது ஒரு Photoல இருக்குற Background-ஐ Remove பண்ணணும் அப்டினா முன்னாடி என்ன பண்ணுவோம், Photoshop போய் அதுக்குள்ள இருக்குற Tools எல்லாம் பயன்படுத்தி Background Remove பண்ணுவோம். Photoshop தெரியாதவங்களுக்கு இது கொஞ்சம் கஷ்டமான வேலைதான்.

ஆனால் ஒரு காலத்துல இந்த வேலையை ரொம்ப சுலபமாக்கிய ஒரு Website இருந்தது அப்டினா அது remove.bg தான். AI எல்லாம் இப்போ இருக்குற மாதிரி  இந்தளவுக்கு வந்திராத காலத்துல, நாம ஒரு Photoல இருக்குற Background-ஐ Remove பண்ணணும் அப்டினா remove.bg Websiteக்கு போய் அந்த Photoவை Upload பண்ணினால் போதும். சில Secondsல Background-ஐ Remove பண்ணி Transparent Image கொடுத்துடும்.

அதுவும் எந்த பெரிய Editing Knowledge-ம் தேவையில்லை. Photo Upload பண்ணுங்க, Background Remove ஆகிடும், Download பண்ணிக்கோங்க. அவ்ளோதான். அதனாலதான் ஒரு காலத்துல Background Remove பண்ணுவதற்கு ரொம்ப பிரபலமான Websiteஆ இது இருந்தது. குறிப்பாக Photoshop போன்ற Software பயன்படுத்த தெரியாதவங்களுக்கு இது ரொம்பவே Usefulஆ இருந்தது.

remove.bg தற்போது Canva நிறுவனத்தோட part ஆக இருக்கு. Canva 2021-ல் remove.bg-க்கு பின்னாடி இருந்த Kaleido நிறுவனத்தை Acquire பண்ணி இருந்தது. இத்தனை வருடங்களாக remove.bg தனியாக இயங்கி வந்த நிலையில், இப்போது இதோட Background Removal Technology-ஐ Canva Platformக்குள்ளேயே கொண்டு வர முடிவு பண்ணி இருக்காங்க. அதாவது வரும் December 1, 2026 முதல் remove.bg-வோட standalone Website இயங்காது என்று அந்த நிறுவனமே அறிவித்து இருக்கிறது. Background Removal Feature இனிமேல் Canva-க்குள்ளேயே கிடைக்கும்.

நீங்க Canva பயன்படுத்துறீங்க அப்டினா இதனால் பெரிய பிரச்சனை இருக்காது. Canvaவிலேயே Photo Upload பண்ணி Background Remove பண்ணிக்கொள்ளலாம். Canva ஏற்கனவே Background Remover Feature-ஐ வழங்கி வருகிறது.

ஆனால் remove.bg-ஐ தனியாக ஒரு Simple Tool மாதிரி பயன்படுத்திட்டு இருந்தவங்களுக்கு இந்த மாற்றம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். நாம ஒரு Photoவோட Background மட்டும் Remove பண்ணணும் அப்டினா remove.bg Websiteக்கு போய் Upload பண்ணி Download பண்ணிடுவோம். ஆனால் இனிமேல் அந்த standalone Website இருக்காது. Background Removal functionality Canva Platformக்குள் move ஆகப்போகிறது.

இப்ப நாம எந்த AI Image Editor அல்லது Design Tool எடுத்தாலும் Background Remove, Background Replace, Object Remove இதெல்லாம் சாதாரண Feature ஆகவே இருக்கு. அதனால ஒரு காலத்துல ஒரு குறிப்பிட்ட வேலைக்காக மட்டும் மிகவும் பிரபலமாக இருந்த remove.bg மாதிரியான ஒரு Website, இப்போது அந்த Feature ஒரு பெரிய Platformக்குள்ளேயே போயிடுறது கொஞ்சம் ஆச்சரியமா தான் இருக்கு.

ஆனால் remove.bg முழுமையாக மறைந்து போகுது என்று சொல்ல முடியாது. இதோட Technology Canvaவுக்குள் தொடர்ந்து இருக்கும். அதோட API பயன்படுத்துற Developersக்கு Background Removal service Leonardo.Ai பக்கம் move ஆகிறது என்று remove.bg-வோட API documentationல குறிப்பிடப்பட்டு இருக்கு.

ஒரு காலத்துல “Background Remove பண்ணணுமா? remove.bg போங்க” என்று சொல்லும் அளவுக்கு ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த இணையத்தளம்.

TWICE WEEKLY

Tech Updates, Twice a Week

Get our latest tech reviews, guides, and industry news — delivered twice a week, straight to your inbox.

2 emails a week. Unsubscribe anytime.

Leave a comment