Salesforce அப்டினு ஒரு பெயரை கேட்டால் பல பேருக்கு அது என்ன Software அப்டினு தெரியாம இருக்கலாம். ஆனால் உலகம் முழுக்க பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களுடைய Customers மற்றும் Sales சம்மந்தமான வேலைகளை Manage பண்ணுவதற்கு Salesforce-ஐ பயன்படுத்தி வருகிறார்கள்.
சரி Salesforce என்றால் என்ன?
இன்னும் சுலபமாக சொல்லணும் அப்டினா ஒரு நிறுவனத்துக்கு ஆயிரக்கணக்கான Customers இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். யார் என்ன Product வாங்கினார்கள், யாரிடம் Sales Team பேசிக்கொண்டு இருக்கிறது, எந்த Customer-க்கு என்ன பிரச்சனை இருக்கிறது, அடுத்து யாரை Contact பண்ண வேண்டும் என்று இவ்வளவு தகவல்களையும் தனித்தனியாக Excel அல்லது வேறு வேறு இடங்களில் வைத்திருந்தால் Manage பண்ணுவது ரொம்ப கஷ்டம்.
இதையெல்லாம் ஒரே இடத்தில் வைத்து Manage பண்ணுவதற்கான ஒரு பெரிய Platform தான் Salesforce. குறிப்பாக CRM (Customer Relationship Management) வேலைகளுக்காக இது பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஒரு நிறுவனத்துக்கும் அதன் Customers-க்கும் இடையே நடக்கும் தொடர்புகளை Manage செய்வதற்கு Salesforce பயன்படுத்தப்படுகிறது.
இப்போது இந்த Salesforce நிறுவனமும் Anthropic நிறுவனமும் சேர்ந்து ஒரு புதிய Partnership அறிவித்து இருக்கிறார்கள். இதற்கு Claudeforce என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் முக்கியமான விஷயம் என்ன அப்டினு பார்த்தோம்னா Salesforce-ஐ Claude-க்குள்ளேயே பயன்படுத்தும் வசதியை கொண்டு வருகிறார்கள்.
அதாவது Salesforce-ல் இருக்கும் Business Data-வை Claude புரிந்து கொண்டு அதைப் பயன்படுத்தி வேலை செய்ய முடியும். இதற்காக Salesforce in Claude என்ற Plugin-ஐ கொண்டு வந்திருக்கிறார்கள். இதில் Sales Team-க்கு தேவையான 37 pre-built Skills இருக்கிறது.உதாரணத்துக்கு ஒரு Sales Person ஒரு Customer-ஐ சந்திக்கப் போகிறார் என்று வைத்துக்கொள்வோம்.
அந்த Customer-ஓட பழைய தகவல்கள் என்ன, இதுவரை அவர்களிடம் என்னென்ன பேசப்பட்டு இருக்கிறது, தற்போதைய Deal எந்த நிலையில் இருக்கிறது போன்ற தகவல்களை Salesforce-ல் தேடி எடுத்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் Claude மூலமாகவே அந்த தகவல்களை கேட்க முடியும்.
அதோட Meeting Preparation, Deal-ஐ Review செய்வது, Sales Pipeline-ஐ Update செய்வது போன்ற வேலைகளையும் Claude மூலமாக செய்ய முடியும் என்று Salesforce மற்றும் Anthropic தெரிவித்து இருக்கிறார்கள். இதுதான் இந்த Partnership-ல் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் Claude-யும் Salesforce-க்குள் கொண்டு வருகிறார்கள். அதாவது Salesforce-ன் Agentforce போன்ற Products-ல் Claude-ன் AI reasoning capabilities பயன்படுத்தப்பட இருக்கிறது. அதோட Salesforce-க்கு சொந்தமான Slack-லயும் Claude-ஐ பயன்படுத்தும் வகையில் இந்த Partnership விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
சரி இதையெல்லாம் ஏன் செய்ய வேண்டும்?
ஒரு நிறுவனத்திடம் Data இருக்கிறது. இன்னொரு பக்கம் அந்த Data-வை புரிந்து கொண்டு அதில் இருந்து தேவையான information-ஐ எடுத்து வேலை செய்யக்கூடிய AI இருக்கிறது. இந்த இரண்டையும் ஒன்றாக இணைத்தால் Business-ல் AI செய்யக்கூடிய வேலைகள் இன்னும் அதிகமாகும்.
இதுதான் Salesforce-க்கும் Anthropic-க்கும் முக்கியமானதாக இருக்கிறது. Salesforce-ஐ பயன்படுத்தும் ஒரு Employee ஒரு வேலையை செய்வதற்கு முதலில் Salesforce-க்குள் சென்று Data எடுத்து, அதன் பிறகு அதை Claude-ல் போட்டு கேள்வி கேட்பதற்கு பதிலாக, நேரடியாக Claude-லேயே அந்த Business Data-வை பயன்படுத்தி வேலை செய்ய முடியும்.
அதுவும் முக்கியமாக இந்த Data-வுக்கு Salesforce-ல் ஏற்கனவே இருக்கும் Permissions மற்றும் Business Rules-ஐ வைத்து Access கொடுக்கப்படும் என்று Salesforce தெரிவித்து இருக்கிறது. இப்போது Salesforce in Claude Select Pilot Customers-க்கு கிடைக்கிறது. September 2026-ல் Open Beta வர திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் Claude ஒரு சாதாரண AI Chatbot-ஆக மட்டும் இல்லாமல், நிறுவனங்கள் தினமும் பயன்படுத்தும் Business Software-களோடும் நேரடியாக வேலை செய்யக்கூடிய ஒரு AI Assistant-ஆக மாறிக்கொண்டு வருகிறது என்று சொல்லலாம்.
இது Salesforce மற்றும் Anthropic இணைந்த ஒரு Partnership மட்டும் கிடையாது. ஒரு நிறுவனத்தின் Data, Workflow மற்றும் AI மூன்றும் ஒன்றாக வேலை செய்யும் விதத்தில் Software எப்படி மாறப்போகிறது என்பதற்கான இன்னொரு example-ஆகவும் இதைப் பார்க்கலாம்.