FBI-யின் Data திருடப்பட்டது உண்மையா?

நாம ஒரு சாதாரண Website பயன்படுத்துகிறோம் அப்டினா கூட நம்மளோட Personal Data, Email, Phone Number என நிறைய தகவல்கள் அதுல இருக்கும். அப்படி இருக்கும்போது அமெரிக்காவின் Federal Bureau of Investigation அதாவது FBI-யோட Data Hack செய்யப்பட்டதாக ஒரு Hacker Group Claim பண்ணி இருப்பது தான் இப்ப Cybersecurity உலகத்தில் பேசுபொருளாகி இருக்கு.

சரி என்ன நடந்தது அப்டினு பார்த்தோம்னா ShinyHunters என்ற Hacker Group தான் FBI-யை Hack செய்ததாக சொல்லி இருக்காங்க. அதுமட்டுமில்லாமல் FBI-யில் வேலை பார்க்கும் Agents மற்றும் FBI-க்கு வேலைக்கு Apply செய்த Applicants என பல பேருடைய Data-வை திருடி இருப்பதாகவும் அந்த Group Claim பண்ணி இருக்கு.

என்ன Data திருடப்பட்டதாக சொல்கிறார்கள்?

இந்த Hacker Group வெளியிட்ட தகவல்படி FBI Employees மற்றும் Applicants தொடர்பான Personal Information தான் அவர்களிடம் இருப்பதாக சொல்லி இருக்காங்க. அதாவது FBI Agents-களுடைய Name, Phone Number, Home Address போன்ற Sensitive Information இதில் இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கு. ShinyHunters தரப்பில் ஒரு Data Sample-ம் வெளியே கொடுக்கப்பட்டதாகவும், அதில் சுமார் 5,000 FBI Employees தொடர்பான தகவல்கள் இருந்ததாகவும் 404 Media தெரிவித்துள்ளது.

இதில் சில தகவல்கள் வெளிப்புற Data Sources மூலமாக சரிபார்க்கப்பட்டதாகவும் அந்த Report சொல்கிறது. ஆனால் இவை எல்லாமே Hacker Group வழங்கிய Data மற்றும் அதைப் பற்றிய Reporting அடிப்படையிலான தகவல்கள் தான். முழுமையான Data எவ்வளவு திருடப்பட்டது என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

FBI என்ன சொல்கிறது?

இந்த சம்பவம் குறித்து FBI investigation நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கு. ஆனால் இந்த Data முழுமையாக Hack செய்யப்பட்டதா, ShinyHunters சொல்வது போல் எவ்வளவு Data அவர்களிடம் இருக்கிறது என்பது போன்ற விஷயங்கள் இன்னும் தெளிவாகவில்லை.

ShinyHunters யார்?

ShinyHunters என்பது ஏற்கனவே பல பெரிய நிறுவனங்களுடைய Data Breach சம்பவங்களுடன் தொடர்புபடுத்தப்பட்ட ஒரு Cybercrime Group. இவர்கள் நிறுவனங்களுடைய Systems-க்குள் Unauthorized Access பெற்று Data-வை திருடி, அந்த Data-வை வெளியிடுவதாக மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக Cybersecurity Reports-ல் தொடர்ந்து குறிப்பிடப்பட்டு வந்திருக்கிறது.

இப்ப FBI போன்ற ஒரு முக்கியமான Government Agency-யின் Employees மற்றும் Applicants Data தங்களிடம் இருப்பதாக Claim பண்ணி இருப்பது தான் இந்த சம்பவத்தை இன்னும் கவனிக்க வைத்திருக்கிறது. ஆனால் மீண்டும் சொல்ல வேண்டியது என்னவென்றால், ShinyHunters வெளியிட்ட Claim-ன் முழு அளவும் இன்னும் Independent-ஆக உறுதி செய்யப்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து FBI-யின் Investigation முடிந்த பிறகு தான் உண்மையில் எந்த System பாதிக்கப்பட்டது, என்ன Data Access செய்யப்பட்டது, எவ்வளவு Data வெளியே சென்றிருக்கிறது போன்ற விஷயங்கள் முழுமையாக தெரியவரும். பொறுத்திருந்து பார்ப்போம்.

TWICE WEEKLY

Tech Updates, Twice a Week

Get our latest tech reviews, guides, and industry news — delivered twice a week, straight to your inbox.

2 emails a week. Unsubscribe anytime.

Leave a comment