நாம ஒரு Game விளையாடணும் அப்டினா முதல்ல என்ன பண்ணுவோம்? அந்த Game-ஐ Download பண்ணி Install பண்ணுவோம், அதுவும் GTA V மாதிரி ஒரு Game அப்டினா பல GB Storage தேவைப்படும். அதுக்கேத்த மாதிரி ஒரு Gaming PC அல்லது Console இருந்தாதான் நல்லா விளையாட முடியும். ஆனால் அதெல்லாம் எதுவுமே இல்லாமல் வெறும் Browser-ஐ Open பண்ணி GTA V-ஐ விளையாட முடியும் அப்டினு சொன்னா எப்படி இருக்கும்?
ஒரு Gamer-ஆ இதை கேக்கும்போதே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கும். அப்படித்தான் சமீபத்தில் GTA V-ஐ Browser-க்குள்ளேயே Run பண்ணும் ஒரு Project இணையத்தில் வந்தது. அதுவும் வந்த சில மணி நேரத்திலேயே காணாமல் போயிடுச்சு.
Browser-லேயே GTA V-ஆ?
சமீபத்தில் PlayGTA5.com என்ற Website வந்தது. அதில் GTA V-ஐ நேரடியாக Browser-லேயே Load பண்ணி விளையாட முடிந்தது. அதாவது வழக்கமாக நாம GTA V-ஐ Computer-ல் Install பண்ணி, Game Launcher Open பண்ணி விளையாடுவோம் இல்லையா, இங்கே அதெல்லாம் தேவையே இல்லை. Browser-ஐ Open பண்ணி Game-ஐ Load பண்ணினால் போதும்.
இதைப் பார்த்த உடனே எனக்கு வந்த முதல் கேள்வி “இது Cloud Gaming-ஆ?” என்பது தான். ஆனால் இல்லை. Cloud Gaming-ல் Game வேறு ஒரு powerful Server-ல் Run ஆகும். நாம நம்ம Computer-ல் Internet மூலமாக அந்த Game-ஐ Stream பண்ணி விளையாடுவோம். ஆனால் இந்த Project-ல் GTA V-ஐ Browser-க்குள்ளேயே Run செய்யும் வகையில் Port செய்திருக்கிறார்கள்.
இதற்கு WebAssembly போன்ற Browser Technologies பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் GTA V-யே Browser-ல் எப்படி Run ஆகும்?
இதுதான் இந்த முழு விஷயத்துல எனக்கு Interesting-ஆ இருந்த Part. GTA V ஒரு சாதாரண Game கிடையாது. நாம பல வருடங்களுக்கு முன்னாடி வாங்கி விளையாடிய Game என்றாலும், இன்றைக்கும் ஒரு பெரிய AAA Game தான். அப்படி இருக்கும்போது அதை Browser-க்குள் கொண்டு வந்து Run பண்ணியிருக்காங்க.
சில Gameplay Tests-ல் Browser முதலில் சுமார் 700 MB அளவுக்கு Data Download செய்த பிறகு Game Start ஆனதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதுக்குப் பிறகும் Game விளையாடும்போது தேவையான சில Assets Download ஆகியிருக்கலாம். இது Full GTA V-ஐ 700 MB-க்குள் அடக்கிட்டாங்க என்று அர்த்தம் கிடையாது. Game-ஐ Browser எப்படி Load பண்ணுகிறது, தேவையான Assets எப்படி பயன்படுத்துகிறது என்பதுதான் இங்கே முக்கியம்.
இதில் AI-க்கும் ஒரு வேலை இருக்கு
இந்த Project-ஐ WebAssembly-க்கு Port செய்ய AI பயன்படுத்தப்பட்டதாக Wonder Interactive Founder Alex St. Louis தெரிவித்திருக்கிறார். இதை படிக்கும்போது இன்னொரு விஷயம் தான் யோசிக்க வைக்கிறது.
ஒரு Game-ஐ உருவாக்குவதற்கும், அதை வேறு ஒரு Platform-க்கு Port செய்வதற்கும் முன்னாடி எவ்வளவு பெரிய Development Work தேவைப்பட்டிருக்கும். ஆனால் இப்போது AI அந்த Development Process-ல் ஒரு Tool-ஆக பயன்படுத்தப்படும் அளவுக்கு வந்திருக்கிறது. அதனால்தான் AI பற்றி நாம அடிக்கடி பேசும்போது இது வெறும் Chatbot அல்லது Image Generate பண்ணுற விஷயம் மட்டும் இல்லை என்று சொல்ல வேண்டியிருக்கிறது.
வந்த வேகத்திலேயே போயிடுச்சு
இந்த Project Online வந்ததும் Gamer-கள் சும்மா இருப்பாங்களா? Gameplay Videos, Screenshots என்று Social Media முழுக்க Share பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. நீங்க GTA V-ஐ Browser-ல் விளையாடலாம் என்று கேள்விப்பட்ட உடனே நீங்களும் அந்த Website-க்கு போய் Try பண்ணுவீங்க இல்லையா? அதனால் Website-க்கு Traffic கூட அதிகமாகியிருக்கிறது.
ஆனால் அதற்கு முன்னாடியே இன்னொரு பிரச்சனை வந்துடுச்சு. சில மணி நேரங்களிலேயே அந்த Website வேலை செய்யாமல் போய்விட்டது. முதலில் Cloudflare Error வந்திருக்கிறது. அதன்பிறகு அந்த Website வேறு ஒரு Page-க்கு Redirect ஆகியிருக்கிறது. அதாவது GTA V Browser-ல் வந்த செய்தியை பார்த்து “நாமளும் போய் விளையாடிப் பார்ப்போம்” என்று போகும் நேரத்துக்குள்ளேயே Game அங்க இல்ல.
இதுதான் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்திருக்கும்.
ஏன் Remove பண்ணினாங்க?
இங்க தான் முக்கியமான விஷயம். இந்த Project-ஐ Rockstar அல்லது Take-Two தான் நேரடியாக Remove செய்தார்கள் என்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்ட தகவல் இல்லை. ஆனால் GTA V என்பது Take-Two-க்கு சொந்தமான Copyrighted Game. அதனால் இப்படியொரு Unofficial Port Online வந்தால் Copyright தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
இதற்கு முன்னாடியும் GTA Vice City போன்ற Games-ஐ Browser-ல் Run செய்யும் முயற்சிகள் வந்திருக்கின்றன. அவற்றில் சில Take-Two-வின் DMCA நடவடிக்கைகளுக்குப் பிறகு Remove செய்யப்பட்டிருக்கின்றன.
அதனால் இந்த GTA V Project-க்கும் நீண்ட காலம் Online-ல் இருக்க முடியாமல் போனது பெரிய ஆச்சரியம் இல்லை.