WhatsApp வரப்போகும் Guest Calling மற்றும் Message Scheduling

நாம எல்லாரும் தினமும் பயன்படுத்தும் ஒரு Application அப்டினு பார்த்தால் அது WhatsApp தான். நண்பர்களுக்கு Message அனுப்புவது, Office Work, Video Call என்று பல தேவைகளுக்கு WhatsApp பயன்படுத்திட்டு இருக்கோம். இப்ப அந்த WhatsApp-ல் இரண்டு பயனுள்ள Features குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஒன்று WhatsApp Account இல்லாதவர்களையும் Call-ல் இணைத்துக் கொள்வது, மற்றொன்று நாம அனுப்ப வேண்டிய Messages-ஐ முன்கூட்டியே Schedule செய்து வைப்பது.

WhatsApp Guest Calling என்றால் என்ன?

முதலில் Guest Calling பற்றி பார்ப்போம். பொதுவாக நாம WhatsApp-ல் ஒருவருக்கு Call செய்ய வேண்டும் என்றால் அவர்களிடமும் WhatsApp இருக்க வேண்டும். ஆனால் இனிமேல் WhatsApp Account இல்லாதவர்களையும் நம்முடைய Call-ல் இணைத்துக் கொள்ள முடியும்.

Whatsapp_guest_calling

அதாவது நாம யாருக்காவது WhatsApp Call செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் அவர்களிடம் WhatsApp இல்லை என்றால் என்ன செய்வது? இதற்காகத்தான் Guest Calling Feature அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில் WhatsApp-ல் உள்ள Calls Tab-க்கு சென்று ‘+’ என்பதை Click செய்து ஒரு Call Link உருவாக்கி அதை மற்றவர்களுக்கு அனுப்பலாம். அந்த Link-ஐ அவர்கள் தங்களுடைய Computer Browser-ல் Open செய்து, பெயரைக் கொடுத்து Call-ல் Join செய்ய முடியும். இதற்கு அவர்களிடம் WhatsApp Account இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த Call-ல் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 32 பேர் வரை இணைய முடியும். Screen Sharing, Emoji Reactions, Hand Raising போன்ற வசதிகளும் இதில் இருக்கிறது. இதன் மூலம் Office Meeting, Online Classes அல்லது நண்பர்களுடன் Group Call செய்வது போன்ற தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆனால் இதில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. WhatsApp Account வைத்திருப்பவர்கள் மட்டுமே Call Link உருவாக்க முடியும். அதேபோல Link மூலம் Join செய்பவர்கள் நேரடியாக Call-ல் இணைய முடியாது. Call நடத்துபவர் அனுமதி கொடுத்த பிறகுதான் இணைய முடியும். Guest-ஆக Join செய்பவர்களால் மற்றவர்களின் Phone Number-ஐ பார்க்கவோ, Message அனுப்பவோ அல்லது வேறு நபர்களை Call-ல் இணைக்கவோ முடியாது.

இந்த Calls End-to-End Encryption பாதுகாப்புடனும், எந்த Time Limit-மும் இல்லாமலும் செயல்படும் என்று WhatsApp நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதுமட்டுமில்லாமல் Google Calendar மற்றும் Outlook Calendar மூலமாகவே WhatsApp Call உருவாக்கி Invite அனுப்பும் வசதியையும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் கொண்டுவர இருப்பதாக அறிவித்து இருக்காங்க.

WhatsApp-ல் Message Schedule செய்யும் வசதி!

அடுத்ததாக பல பேர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு Feature தான் Message Scheduling. அதாவது நாம அனுப்ப வேண்டிய Message-ஐ இப்பவே Type செய்து வைத்து, அது எந்த தேதி மற்றும் எந்த நேரத்தில் மற்றவர்களுக்கு செல்ல வேண்டும் என்பதை நாமே தேர்வு செய்து கொள்ள முடியும்.

whatsapp_schedule

Credits: Wabetainfo

உதாரணத்திற்கு உங்களுடைய நண்பருக்கு Birthday Wish செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஆனால் சரியாக 12 மணிக்கு Message அனுப்ப வேண்டும். அந்த நேரத்தில் நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கலாம் அல்லது வேறு ஏதாவது வேலையில் இருக்கலாம். இதற்காக முன்கூட்டியே Message Type செய்து வைத்து, சரியான நேரத்தில் அது தானாகவே Send ஆகும்படி Schedule செய்து வைக்கலாம்.

இதேபோல Office தொடர்பான Messages, Reminders போன்றவற்றுக்கும் இந்த Feature பயனுள்ளதாக இருக்கும். இந்த Feature எப்படி வேலை செய்யும் அப்டினு பார்த்தால், Message Type செய்த பிறகு Send Button-ஐ Long Press செய்து, எந்த தேதி மற்றும் நேரத்தில் Message செல்ல வேண்டும் என்பதை தேர்வு செய்யலாம். அதோடு ஏற்கனவே Schedule செய்த Messages-ஐ தனியாக பார்த்து Manage செய்யும் வசதியும் இருக்கிறது.

Text Messages மட்டுமில்லாமல் Links, Photos, Videos போன்றவற்றையும் Schedule செய்ய முடியும் என்றும், Individual Chat மற்றும் Group Chat இரண்டிலும் இந்த வசதி செயல்படும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், Message Send ஆக வேண்டிய நேரத்தில் உங்களுடைய Phone Offline-ல் இருந்தாலும் Message தானாகவே Send ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த Feature தற்போது சில Android Beta பயனாளர்களுக்கு மட்டும் கிடைத்து வருகிறது. எனவே எல்லாரும் இப்போதே இதைப் பயன்படுத்த முடியும் என்று சொல்ல முடியாது. மற்ற பயனாளர்களுக்கு எப்போது முழுமையாக கிடைக்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

TWICE WEEKLY

Tech Updates, Twice a Week

Get our latest tech reviews, guides, and industry news — delivered twice a week, straight to your inbox.

2 emails a week. Unsubscribe anytime.

Leave a comment