நாம ஏதாவது ஒரு விஷயம் குறித்து Googleல Search பண்ணும்போது, அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்றால் கடைசியாக Redditல போய் பார்க்கலாம் என்று நினைப்போம். ஏனென்றால் Redditல நம்மைப் போலவே பல பேர் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து இருப்பாங்க. ஒரு Product வாங்கலாமா, ஒரு Software எப்படி இருக்கு, ஏதாவது ஒரு பிரச்சனைக்கு என்ன தீர்வு என்று பல விஷயங்களுக்கு Redditல் பதில் கிடைக்கும்.
அதிலும் Reddit பயன்படுத்துவதற்கு நமக்கு ஒரு Account கூட தேவையில்லை. Googleல Search செய்து Redditல இருக்கிற ஒரு Postஐ Open செய்து படித்துவிட்டு அப்படியே வந்துவிடலாம். ஆனால் இனி இதுபோல Reddit பயன்படுத்த முடியாத நிலை வரலாம். Reddit நிறுவனம் தங்களுடைய Websiteஐ பெரும்பாலும் Login செய்த பிறகு மட்டுமே பயன்படுத்தக்கூடிய வகையில் மாற்றப்போவதாக அறிவித்து இருக்காங்க.
இதற்கான முக்கியமான காரணம் என்ன, இதனால் Reddit பயன்படுத்துபவர்களுக்கு என்ன பாதிப்பு, அதைவிட முக்கியமாக நாம் இதுவரைக்கும் பார்த்து வந்த உண்மையான Reddit Experience இனி இருக்குமா என்பதைப் பற்றி பார்க்கலாம்.
ஏன் Reddit இந்த முடிவை எடுத்திருக்காங்க?
முதலில் Redditக்கு இப்போது என்ன பிரச்சனை என்று பார்த்தால், அவங்களுடைய Websiteக்கு Google Search மூலமாக வரும் Traffic குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று AI Search. முன்பெல்லாம் நாம Googleல் ஏதாவது ஒரு கேள்வியை Search செய்தால், அதற்கான பதிலை தெரிந்துகொள்ள ஒரு Websiteக்கு சென்று தான் படிக்க வேண்டும். ஆனால் இப்போது Google AI மூலமாகவே பல கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிடுகிறது. இதனால் பயனாளர்கள் அந்த Websiteக்கு சென்று படிப்பது குறைகிறது.
Redditக்கும் இதே பிரச்சனைதான். அக்டோபர் மாதத்தில் மட்டும் Google உள்ளிட்ட Search Engines மூலமாக Redditக்கு வரும் Traffic, வாரத்திற்கு சராசரியாக 10 லட்சத்திற்கும் அதிகமான Referrals குறைந்திருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இதனால் Redditக்கு புதிய பயனாளர்கள் வருவதும் பாதிக்கப்படலாம். அதோடு AI நிறுவனங்கள் Redditல் இருக்கும் Posts மற்றும் Commentsஐ தங்களுடைய AI Modelகளுக்கு பயன்படுத்துவதற்காக சேகரிப்பதும் இன்னொரு பிரச்சனையாக இருக்கிறது.
Redditல் இருக்கும் தகவல்களை பயன்படுத்துவதற்காக சில நிறுவனங்களுடன் Licensing Agreement மூலமாக ஒப்பந்தம் செய்து இருக்காங்க. ஆனால் அனுமதி இல்லாமல் Data சேகரிப்பதை கட்டுப்படுத்தவும் Reddit விரும்புகிறது.
இந்த இரண்டு விஷயங்களையும் கருத்தில் கொண்டுதான் பெரும்பாலும் Login செய்த பயனாளர்களை மையமாக வைத்து Redditஐ மாற்றப்போவதாக அறிவித்து இருக்காங்க.
இனி Reddit பயன்படுத்த Account தேவையா?
இதுதான் இப்போது பலருக்கும் இருக்கும் கேள்வி. Reddit அறிவித்திருப்பது என்னவென்றால், Websiteஐ பெரும்பாலும் Logged-in Experience ஆக மாற்றுவதுதான்.
அதாவது, Redditல் இருக்கிற ஒரு Postஐ Google Search மூலமாக கண்டுபிடித்து Open செய்தால், அதை அப்படியே படிப்பதற்கு பதிலாக Login செய்யச் சொல்லலாம். எந்தெந்த Contentகளை Login செய்யாமல் பார்க்க முடியும், எந்த இடத்தில் Login செய்ய வேண்டும் என்பது இன்னும் முழுமையாக தெளிவாகவில்லை.
இந்த மாற்றத்தை முதலில் 2026ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் அமெரிக்காவிற்கு வெளியே தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளில் Test செய்யப்போவதாக அறிவித்து இருக்காங்க. அதன் முடிவுகளை வைத்து மற்ற நாடுகளுக்கும் எப்படி கொண்டுவருவது என்று முடிவு செய்வார்கள். உலகம் முழுவதும் எப்போது இந்த மாற்றம் அமலுக்கு வரும் என்பதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அதே நேரத்தில், Login செய்யாமல் Redditன் முகப்புப் பக்கத்தை அணுகுவது முக்கியமானது என்றும் நிறுவனம் குறிப்பிட்டு இருக்கிறது. அதனால் Login இல்லாமல் Redditல் எதையுமே பார்க்க முடியாது என்று இப்போதே முடிவு செய்ய முடியாது.
இதனால் Redditன் உண்மையான Experience மாறிவிடுமா?
என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த மாற்றத்தில் கவலைப்பட வேண்டிய விஷயம் இதுதான். Reddit மற்ற Social Media Platforms போலவே இருந்தாலும், அதில் இருக்கும் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், நமக்கு தேவையான தகவலை தேடிப் படித்துவிட்டு வெளியே வந்துவிடலாம். அதற்காக ஒரு Account Create செய்ய வேண்டும், நம்முடைய Feedஐ அமைத்துக்கொள்ள வேண்டும், தொடர்ந்து அந்த Platformஐ பயன்படுத்த வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இதுவரைக்கும் இல்லை.
உதாரணத்திற்கு, ஒரு புதிய Phone வாங்கலாமா என்று யோசிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். Googleல் அந்த Phone பெயருடன் Reddit என்று சேர்த்து Search செய்தால், ஏற்கனவே அந்த Phone பயன்படுத்துபவர்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்திருப்பதைப் படிக்கலாம். சில நேரங்களில் YouTube Reviewsல் கிடைக்காத தகவல்கள்கூட Redditல் கிடைக்கும்.
அதுவும் எல்லாவற்றையும் படிக்க Login செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் அதன் சிறப்பு.
ஆனால் இனி இதற்கெல்லாம் Login செய்ய வேண்டிய நிலை வந்தால், ஒரு குறிப்பிட்ட தகவலைத் தேடி வருபவர்கள் எல்லோரும் Account Create செய்து பயன்படுத்துவார்களா என்பது சந்தேகம்தான். சில பேர் Login செய்து தொடர்ந்து பயன்படுத்தலாம். இன்னும் சில பேர் அந்தப் பக்கத்தை மூடிவிட்டு வேறு Websiteக்கு சென்றுவிடலாம்.
இதனால் Redditல் இருக்கும் தகவல்களை புதிய பயனாளர்கள் கண்டுபிடிப்பதும், Redditல் புதிதாக இணைவதும் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
இன்னொரு விஷயம், Redditல் பல பேர் தங்களுடைய தனிப்பட்ட அனுபவங்களை பகிர்வதற்குக் காரணம், அவர்கள் ஒரு பெரிய Social Media Platformல் இருப்பது போன்ற உணர்வு இல்லாமல், ஒரு குறிப்பிட்ட Communityல் தங்களுக்குத் தெரிந்த விஷயங்களை பகிர முடிவதுதான்.
Login செய்வது மட்டுமே அந்தத் தன்மையை முழுமையாக மாற்றிவிடும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒவ்வொரு முறையும் Login செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு வந்தால், இதுவரைக்கும் Redditஐ பயன்படுத்தி வந்த விதம் நிச்சயமாக மாறும். அதனால் தான் இந்த மாற்றம் Redditன் உண்மையான Experienceஐ கொஞ்சம் கொஞ்சமாக மறைத்துவிடுமோ என்ற கேள்வி எழுகிறது.
என்னைப் பொறுத்தவரைக்கும் Redditன் இந்த முடிவு Open Internetக்கு ஒரு முக்கியமான மாற்றம். இதுவரைக்கும் ஒரு Websiteல் இருக்கும் தகவலை யார் வேண்டுமானாலும் எளிமையாக அணுக முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் இனி அந்தத் தகவல்களைப் பார்க்கக்கூட ஒரு Account தேவைப்படும் என்ற நிலை அதிகரித்தால், Internetல் நாம் தகவல்களை தேடிப் பயன்படுத்தும் முறையே மாறலாம்.
AI Search காரணமாக Websitesக்கு வரும் Traffic குறைகிறது. அதே நேரத்தில் அந்த Websitesல் இருக்கும் தகவல்களை AI நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. இதை கட்டுப்படுத்துவதற்காக Websites தங்களுடைய Contentஐ Login பின்னால் வைக்க ஆரம்பித்தால், நமக்கு தேவையான தகவல்களை சுதந்திரமாக அணுகுவது இன்னும் கடினமாகலாம்.