நாம ஏற்கனவே ChatGPT பயன்படுத்தி நமக்கு தேவையான Images எல்லாம் Generate பண்ணிக்கிட்டு இருக்கோம். அதுவும் நாம கொடுக்கிற Prompt-க்கு ஏற்ற மாதிரி ஒரு Image உருவாக்குவது மட்டுமில்லாமல், ஏற்கனவே இருக்கும் Image-ஐ நமக்கு தேவையான மாதிரி Edit செய்துகொள்ளவும் முடியும். இப்பொழுது இதையெல்லாம் இன்னும் எளிமையாக்கும் விதமாக OpenAI புதிய ChatGPT Images 2.6-ஐ அறிமுகப்படுத்தி இருக்காங்க.
இதில் என்ன புதுசா இருக்கிறது என்று பார்த்தோம்னா, Image Generate செய்யும் வேகம் அதிகரித்து இருப்பதோடு, Animated GIF உருவாக்குவது, Image-ஐ இன்னும் துல்லியமாக Edit செய்வது என பல புதிய வசதிகளை கொண்டு வந்திருக்காங்க.
ChatGPT Images 2.6-ல் என்னென்ன புதிய வசதிகள் இருக்கு?
1. 50% வேகமாக Image Generate செய்யலாம்
முதலில் Image Generate செய்யும் வேகத்தை பற்றி பார்க்கலாம். இதற்கு முன்னர் நாம் கொடுக்கிற Prompt-க்கு ஏற்ற மாதிரி ஒரு Image உருவாகும் வரை கொஞ்சம் நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். இப்பொழுது Images 2.6 முந்தைய Version-ஐ விட 50% வேகமாக Images Generate செய்யும் என்று OpenAI அறிவித்து இருக்காங்க.
அதிலும் குறிப்பாக Developers பயன்படுத்துவதற்காக GPT-Image-2.6 Flare மற்றும் GPT-Image-2.6 Sunburst என இரண்டு Model-களை அறிமுகப்படுத்தி இருக்காங்க. இதில் Flare Model வேகமாக Images Generate செய்வதற்காக உருவாக்கப்பட்டு இருக்கு. Low Quality Setting-ல் சில Images-ஐ வெறும் 6 விநாடிகளிலேயே Generate செய்ய முடியும் என்று OpenAI குறிப்பிட்டு இருக்காங்க.
அதேபோல Sunburst Model அதிக Detail மற்றும் Quality தேவைப்படும் வேலைகளுக்கு பயன்படும். குறிப்பாக ஒரு Image-ஐ தொடர்ந்து Edit செய்யும்போது அதில் இருக்கும் Character, Product மற்றும் Brand Details போன்றவை மாறாமல் இருப்பதற்கு இது உதவியாக இருக்கும்.
Credits : Open AI
2. இனி ChatGPT மூலமாக Animated GIF உருவாக்கலாம்
இதில் எனக்கு முக்கியமான Feature-ஆக தெரிவது Animated GIF உருவாக்கும் வசதி தான். நாம Social Media-வில் பயன்படுத்துவதற்காக Memes, Reaction GIFs அல்லது ஒரு Character அசைவது போன்ற Animation உருவாக்க வேண்டும் என்றால், இதற்கு முன்னர் தனியாக ஒரு Tool அல்லது Software-ஐ பயன்படுத்த வேண்டியிருக்கும்.
ஆனால் இப்பொழுது ChatGPT-யில் நமக்கு தேவையான Animation பற்றி ஒரு Prompt கொடுத்தாலே போதும். அதேபோல ஏற்கனவே நம்மிடம் இருக்கும் ஒரு Image அல்லது Sketch-ஐ கொடுத்தும் அதை Animated GIF-ஆக மாற்றிக்கொள்ளலாம்.
உதாரணத்திற்கு, நாம வரைந்து வைத்திருக்கும் ஒரு Cartoon Character-ஐ கை அசைப்பது போலவோ அல்லது ஒரு Character சிரிப்பது, நடப்பது போன்ற அசைவுகளுடனோ உருவாக்கச் சொல்லலாம்.
இதில் உருவாகும் GIF-களின் Playback Speed-ஐ மாற்றவும், தனித்தனி Frames-ஐ Edit செய்யவும் முடியும். இதனால் Content Creators, Designers மற்றும் Social Media-விற்காக Content உருவாக்குபவர்களுக்கு இந்த Feature பயனுள்ளதாக இருக்கும்.
Credits : Open AI
3. Image Edit செய்வது இன்னும் எளிதாகிறது
நாம ஒரு Image Generate செய்த பிறகு அதில் ஏதாவது ஒரு சிறிய மாற்றம் செய்ய வேண்டும் என்று நினைப்போம். உதாரணத்திற்கு, அந்த Image-ல் இருக்கும் Character-ன் உடையை மாற்ற வேண்டும் அல்லது Background-ஐ மட்டும் மாற்ற வேண்டும் என்று சொல்வோம்.
அப்படி Edit செய்யும்போது சில நேரங்களில் நாம் மாற்றச் சொல்லாத விஷயங்களும் மாறிவிடும். குறிப்பாக Character-ன் முகம், உடை அல்லது Image-ல் இருக்கும் சில முக்கியமான Details மாறிவிடலாம்.
இந்தப் பிரச்சனையை குறைக்கும் விதமாக Images 2.6-ல் Editing Consistency-ஐ மேம்படுத்தி இருக்காங்க. அதாவது நாம் குறிப்பிட்டு மாற்றச் சொல்லும் விஷயங்களை மாற்றுவதோடு, மற்ற Details-ஐ முடிந்தவரை அதே மாதிரி வைத்திருக்க உதவும்.
மேலும், ஒரு Image-ல் எந்த இடத்தில் என்ன மாற்றம் வேண்டும் என்பதை Mark செய்து குறிப்பிட்டு Edit செய்யும் வசதியும் API-ல் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கு. இதனால் ஒரு பெரிய Image-ஐ முழுவதுமாக மறுபடியும் Generate செய்யாமல், நமக்கு தேவையான பகுதியை மட்டும் மாற்றுவதற்கான வேலைகள் இன்னும் எளிதாகலாம்.
4. Website மற்றும் Design வேலைகளுக்கு புதிய வசதிகள்
இந்த Update சாதாரணமாக Image Generate செய்பவர்களுக்கு மட்டுமில்லாமல், Developers மற்றும் Designers-க்கும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக API பயன்படுத்துபவர்களுக்கு SVG Export வசதியை அறிமுகப்படுத்தி இருக்காங்க. SVG என்பது Quality குறையாமல் அளவை மாற்றிக்கொள்ளக்கூடிய ஒரு Vector Image Format.
Website, App மற்றும் Print Design போன்ற வேலைகளில் SVG பயன்படும் என்பதால், அந்த மாதிரியான வேலைகளை செய்பவர்களுக்கு இந்த வசதி உதவியாக இருக்கும்.
அதேபோல Image Quality மற்றும் Complexity-ஐ தனித்தனியாக கட்டுப்படுத்த முடியும். அதாவது ஒரு சின்ன Edit மட்டும் செய்ய வேண்டும் என்றால் குறைந்த Complexity-ஐ தேர்வு செய்து வேகமாக முடித்துக்கொள்ளலாம். பல விஷயங்கள் அடங்கிய சிக்கலான Image உருவாக்க வேண்டும் என்றால் அதிக Complexity-ஐ பயன்படுத்தலாம்.இதன் மூலம் Developers தங்களுடைய தேவைக்கு ஏற்ற மாதிரி Image Generation மற்றும் Editing வேலைகளை அமைத்துக்கொள்ள முடியும்.
ChatGPT Images 2.6 யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
OpenAI-யின் அறிவிப்பின்படி, ChatGPT Images 2.6 உலகம் முழுவதும் ChatGPT மற்றும் Codex-ல் அனைத்து Subscription Tiers-க்கும் Web, Desktop மற்றும் Mobile வழியாக கிடைக்கிறது.
அதேபோல Developers தங்களுடைய Application அல்லது Website-ல் Image Generation வசதிகளை இணைத்துக்கொள்ள GPT-Image-2.6 Flare மற்றும் GPT-Image-2.6 Sunburst Model-களை API மூலமாகவும் பயன்படுத்தலாம்.
ஆனால் API பயன்படுத்துவது ChatGPT-யில் Image உருவாக்குவதைப் போலவே இலவசம் என்று நினைத்துவிட வேண்டாம். API பயன்பாட்டிற்கு தனியாக Pricing இருக்கும். அதற்கான விவரங்களை OpenAI-யின் அதிகாரப்பூர்வ Pricing Page-ல் பார்த்துக்கொள்ளலாம்.