அடுத்து அடுத்து புதிய Modelகள் அசத்தும் Google

Google இப்போ AI Model விஷயத்துல அடுத்தடுத்து Updates கொடுத்துக்கிட்டே இருக்காங்க. Gemini 3.7 Flash வெளிவந்து மூன்று வாரங்கள் கூட ஆகாத நிலையில் இப்ப Gemini 3.8 Flash மற்றும் அதோட Cybersecurityக்காக தனியாக Gemini 3.8 Flash Cyber என்ற Model-ஐ அறிமுகப்படுத்தி இருக்காங்க.

Gemini 3.8 Flash – என்ன புதுசு?

முதலில் Gemini 3.8 Flash பற்றி பார்த்தோம்னா இது ஒரு General Purpose AI Model. அதாவது நாம சாதாரணமாக Geminiல கேட்குற கேள்விகள், Coding, Software Development, Reasoning, அதோட AI Agents மாதிரியான வேலைகளுக்கு இதை பயன்படுத்த முடியும். Google இதை ஒரு Workhorse Model என்று குறிப்பிடுறாங்க. குறிப்பாக Software Engineering மற்றும் பல Step-களைக் கொண்ட complex tasksல முந்தைய 3.7 Flash-ஐ விட இதோட Performance அதிகமாக இருக்கும் என்று சொல்லி இருக்காங்க.

இங்க கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்ன அப்டினா Google Flash Model-களை தொடர்ந்து வேகமாக Update பண்ணிக்கிட்டு இருக்காங்க. Gemini 3.7 Flash வெளிவந்த மூன்று வாரங்களிலேயே இந்த 3.8 Flash வந்திருக்கு. அதோட கடந்த ஆறு வாரங்களில் இது மூன்றாவது Flash Model Update.

அதாவது Google பெரிய Model ஒன்றை மட்டும் வைத்து எல்லா வேலைகளையும் செய்ய வைப்பதற்கு பதிலாக, வேகமாகவும் குறைந்த Costலவும் இயங்கக்கூடிய Flash Models மீது அதிக கவனம் செலுத்துறாங்க. இதனால் Developer-களுக்கு குறிப்பாக AI Agent, Coding Tool போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துவதற்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

அப்ப Cyber Model எதுக்கு?

இதுலதான் Google வெளியிட்ட இன்னொரு முக்கியமான விஷயம் Gemini 3.8 Flash Cyber. பெயரை வைத்தே இது Cybersecurity சம்மந்தமான வேலைகளுக்காக உருவாக்கப்பட்ட Model என்று புரியும். ஆனால் இது சாதாரணமாக நாம Geminiயை பயன்படுத்துவது போல யார் வேணும்னாலும் பயன்படுத்தக்கூடிய Model கிடையாது. Google இதை முக்கியமாக Cybersecurity Defenders அதாவது நிறுவனங்கள், Government மற்றும் Security Teams பயன்படுத்துவதற்காக கொண்டு வந்து இருக்காங்க. இதற்காக Fairwind Program என்ற Limited Access Program-ஐயும் அறிமுகப்படுத்தி இருக்காங்க.

இந்த Model என்ன செய்யும் அப்டினு பார்த்தோம்னா ஒரு Software அல்லது Codebaseல இருக்குற Security Vulnerability-யை தானாக கண்டுபிடிக்க முடியும். அதாவது ஒரு பெரிய Software Project இருக்கு அப்டினா அதுல எந்த இடத்துல Security Problem இருக்கு, Hacker அதை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கா போன்ற விஷயங்களை AI மூலமாக கண்டுபிடிக்க முடியும்.

அதோட முக்கியமான விஷயம் Vulnerability கண்டுபிடிச்சதோட நிற்காமல் அதை எப்படி Fix பண்ணுவது என்பதற்கான Patch-ஐயும் உருவாக்க முடியும். Google வெளியிட்ட Test Resultsல CyberGym என்ற Vulnerability Detection Benchmarkல் Gemini 3.8 Flash Cyber Frontier-level Performance கொடுத்து இருக்கிறது. அதோட 20 Programming Languages பயன்படுத்தப்பட்ட ஒரு Internal Testல 70%க்கும் அதிகமான Success Rate கிடைத்ததாக Google சொல்லி இருக்காங்க.

Leave a comment