X Money launch ஆனதுக்கு பிறகு X பயன்படுத்துற பல பேருக்கு திடீர்னு Password Reset Email எல்லாம் வர ஆரம்பிச்சு இருக்கு. அதுவும் நாம Password Reset கேட்காமலேயே இந்த Email வருது அப்டினு பல பேர் Report பண்ண ஆரம்பிச்சாங்க. இதை தொடர்ந்து X நிறுவனமும் இதை Investigate பண்ணிட்டு இருக்கோம் அப்டினு சொல்லி இருக்காங்க. முக்கியமா இதுவரைக்கும் எந்த ஒரு Account Breach அல்லது பெரிய Hack நடந்ததற்கான Evidence கிடைக்கவில்லை என்றும் X சொல்லி இருக்கிறது.
சரி ஏன் திடீர்னு X Accounts-ஐ Hack பண்ண முயற்சி பண்றாங்க அப்டினு பார்த்தோம்னா அதற்கு முக்கிய காரணமா இருக்கிறது X Money. இது என்ன புதுசா வந்திருக்குற ஒரு Feature அப்டினு பார்த்தோம்னா, X Platformக்குள்ளேயே Money தொடர்பான பல விஷயங்களை செய்யக்கூடிய ஒரு Payment Service தான் X Money.
அதாவது நாம ஒரு X Account வைத்திருக்கிறோம் பார்த்திங்களா, அதையே பயன்படுத்தி Money Send பண்ணலாம், Receive பண்ணலாம், Direct Deposit மூலமாக பணம் வாங்கலாம், Bills Pay பண்ணலாம். அதோட X Money மூலமாக ஒரு Visa Debit Card கூட கிடைக்கும். அந்த Card மூலமாக எங்கெல்லாம் Visa Accept ஆகுதோ அங்கெல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதோட இதுல இன்னொரு விஷயம் என்ன அப்டினு பார்த்தோம்னா X Money மூலமாக வைத்திருக்கும் பணத்திற்கு குறிப்பிட்ட Usersக்கு 6% வரைக்கும் APY கிடைக்கும் என்றும், Eligible Purchasesக்கு 3% Cashback கிடைக்கும் என்றும் X சொல்லி இருக்காங்க. தற்போது இது Select Usersக்கு United Statesல தான் கிடைக்கிறது.
இப்படி பார்த்தோம்னா இதுவரைக்கும் நாம Social Media பயன்படுத்துவதற்கு ஒரு Account வைத்திருந்தோம். ஆனால் X Money வந்ததுக்கு பிறகு அதே Account மூலமாக பணம் Send பண்ணுவது, Receive பண்ணுவது, Card மூலமாக பணம் செலவு செய்வது என்று Financial விஷயங்களும் வரப்போகுது. இதுதான் இப்ப Cyber Attackersக்கு இந்த Accounts மேல Interest வருவதற்கான முக்கியமான காரணம்.
ஏன்னா ஒரு சாதாரண Social Media Account Hack ஆகுது அப்டினா அதிகபட்சம் அந்த Accountல Post போடலாம், Username Change பண்ணலாம், Followersகிட்ட Scam பண்ணலாம். ஆனால் அதே Accountக்குள்ள Money தொடர்பான வசதிகள் இருக்கிறது அப்டினா அந்த Accountக்கான Access கிடைத்தால் அதிலிருந்து பணம் சம்பந்தமான விஷயங்களை செய்ய முடியுமா என்று Attackers முயற்சி பண்ண ஆரம்பிப்பாங்க.
இதனால தான் X Product Engineer Mridul Singhai கூட Attackers, X Money இப்ப பரவலாக கிடைக்க ஆரம்பிச்சிருப்பதால் Accountsக்குள் Unauthorized Access பெற முயற்சி பண்ணுறாங்க என்று நினைக்கிறோம் அப்டினு சொல்லி இருக்காரு. அதே நேரத்தில் இதுவரைக்கும் எந்த ஒரு Breach நடந்ததற்கான Evidence கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டு இருக்காரு.
X தற்போது சொல்லியிருக்குற தகவல்படி Password Reset Requestகள் Trigger செய்யப்பட்டு இருக்கிறது, ஆனால் Successful Account Takeover அல்லது X Systemல ஒரு பெரிய Breach நடந்ததற்கான Confirmation எதுவும் இல்லை.
ஆனால் இதுபோன்ற Password Reset Emailகளை பயன்படுத்தி Phishing Attack கூட செய்ய வாய்ப்பு இருக்கு. அதனால Emailல வரும் Link எதையும் அவசரப்பட்டு Click பண்ணாமல், நேரடியாக X App அல்லது Website மூலமாகவே Account Security Settingsக்கு சென்று பார்க்கிறது நல்லது.
அதோட X Accountக்கு Two Factor Authentication Enable பண்ணி வைக்கிறது இன்னும் பாதுகாப்பாக இருக்கும். குறிப்பாக இப்ப X Money மாதிரியான Financial Services ஒரு Social Media Platformக்குள்ள வர ஆரம்பிச்சிருக்கும் நிலையில், நம்முடைய X Account இனிமேல் வெறும் Social Media Account மாதிரி மட்டும் இல்லாமல் Money தொடர்பான விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படலாம்.
இப்பதான் X ஒரு Social Media Platformல இருந்து கொஞ்சம் கொஞ்சமாக Everything App ஆக மாறுவதற்கான முயற்சியில் இருக்கிறது என்பது புரியும். X Money அதுல ஒரு முக்கியமான பகுதியாக இருக்கிறது. ஆனால் Money இருக்கும் இடத்துல Attackers வருவது புதுசான விஷயம் கிடையாது. அதனால X Money வளர வளர, X Accounts மீது வரும் Security Attacks கூட அதிகமாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.