7 பில்லியன் டவுன்லோட்களை கடந்த VLC

VLC Media Player 7 Billion Downloads Cross பண்ணி இருக்கு. இந்த Number பார்க்கும்போது அடேங்கப்பா 7 Billion Downloadsஆ என்று ஆச்சரியமா இருக்கலாம், ஆனால் இதைவிட முக்கியமான விஷயம் என்னவென்று பார்த்தோம்னா இத்தனை பெரிய User Base இருக்குற ஒரு Software இன்னும் Open Source ஆகவும் Free ஆகவும் இயங்கிக்கிட்டு இருக்கு என்பது தான்.

நாம புதுசா ஒரு Computer வாங்கினாலும் சரி, ஏற்கனவே இருக்குற Computerல ஏதாவது ஒரு Video File Open பண்ணணும்னாலும் சரி முதல்ல நம்ம நினைவுக்கு வர்ற Application VLC தான். காரணம் VLCல நமக்கு தேவையான பெரும்பாலான Video மற்றும் Audio Format எல்லாமே Play ஆகும். அதோட Windows, macOS, Linux, Android, iOS என்று பல Platformலயும் இதை பயன்படுத்த முடியும்.

VLC ஒரு Volunteer Community மூலமா Maintain பண்ணப்படும் Open Source Project. Developers மட்டும் இல்லாமல் Coding, Packaging, Design, Documentation, Support என்று பல விஷயங்களில் Communityல இருக்குறவங்க contribute பண்ணிட்டு இருக்காங்க. இதுதான் இந்த 7 Billion Downloads Number Open Source Communityக்கு முக்கியமானதாக இருக்குறதுக்கு ஒரு காரணம்.

நாம பொதுவாக ஒரு Software நல்லா இருக்கணும்னா அதுக்கு பின்னாடி ஒரு பெரிய Company இருக்கணும், நிறைய பணம் இருக்கணும், அதோட ஒரு பெரிய Marketing Team இருக்கணும் என்று தான் நினைப்போம். ஆனால் VLC மாதிரியான Projects அந்த எண்ணத்தையே மாற்றி காட்டுது.

அதாவது ஒரு Software Freeஆ இருக்கலாம், அதன் Source Code எல்லாருக்கும் Openஆ இருக்கலாம், அதே நேரத்தில் அது Commercial Softwareகளுக்கு போட்டியாக பல வருடங்கள் தொடர்ந்து survive ஆகவும் முடியும் என்பதற்கு VLC ஒரு நல்ல Example.

அதோட இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் VLC இன்னும் பழைய Technologyயிலேயே நின்றுடல. கடந்த வருடம் 6 Billion Downloads Cross பண்ணும்போது Local AI Model பயன்படுத்தி Offlineஆ Subtitle Generate பண்ணுற Featureஐ VideoLAN Demo பண்ணி இருந்தாங்க. அதாவது AI Feature கொண்டு வர்றாங்க என்றாலும் Cloudக்கு நம்ம Videoவை Upload பண்ண வேண்டிய அவசியம் இல்லாமல் Deviceலேயே அதை Process பண்ணுற மாதிரி உருவாக்கி இருந்தாங்க.

ஒரு Projectஐ Freeஆ வெளியிட்டு, Community மூலமாக அதை தொடர்ந்து Develop பண்ணி, உலகம் முழுக்க Billions கணக்கான Downloads வரைக்கும் கொண்டு போக முடியும் என்பதையே VLC இன்னொரு முறை நிரூபிச்சு இருக்கு.

Leave a comment