File Tranferக்கு ஒரே Tool அசத்தும் LocalSend

நாம ஒரு Phoneல இருந்து இன்னொரு Phoneக்கு அல்லது Phoneல இருந்து Laptopக்கு ஏதாவது ஒரு File Transfer பண்ணணும்னா உடனே WhatsApp, Telegram, Google Drive இது போல ஏதாவது ஒரு Service தான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால் ஒரு சில GB அளவுக்கு பெரிய File என்றால் Upload பண்ணி, பிறகு Download பண்ண வேண்டியிருக்கும். இதற்கெல்லாம் ஒரு சிம்பிளான Solution தான் LocalSend.

LocalSend ஒரு Free மற்றும் Open Source Application. இதன் முக்கியமான விஷயம் என்னவென்று பார்த்தோம்னா நமக்கு Files Transfer பண்ண Internet Connection கூட தேவையில்லை. உங்களோட Phone மற்றும் Laptop ஒரே WiFi Networkல இருந்தாலே போதும்.

இன்னும் புரியும் வகையில் சொல்லணும் அப்டினா, உங்க Phoneல இருக்குற ஒரு பெரிய Videoவை Laptopக்கு அனுப்பணும் என்று வைங்க. இரண்டு Devicesலயும் LocalSend Install பண்ணி Open பண்ணுங்க. அதன்பிறகு Phoneல இருந்து அந்த Videoவை Select பண்ணி, அருகில் இருக்கும் Laptopஐ Select பண்ணி Send கொடுத்தால் போதும். File நேரடியாக அந்த இரண்டு Devicesக்கு இடையிலேயே Transfer ஆகிவிடும்.

இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதற்கு Account, Login என்று எதுவுமே தேவையில்லை. அதோட File எந்த Cloud Serverக்கும் போகாது. Local Networkக்குள்ளேயே Transfer ஆகும். அதனால் ஒரு File Transfer பண்ணுவதற்காக முதலில் அதை ஒரு Serverக்கு Upload பண்ணி, அதன்பிறகு Download பண்ண வேண்டிய அவசியமும் இல்லை.

சரி இது Androidக்கு மட்டும் தானா அப்டினு பார்த்தோம்னா அதுவும் இல்லை. Windows, macOS, Linux, Android, iOS என பல Platformகளிலும் LocalSend பயன்படுத்த முடியும். அதனால் Android Phoneல இருந்து Windows Laptopக்கோ, iPhoneல இருந்து Macக்கோ, ஒரு Laptopல இருந்து இன்னொரு Laptopக்கோ Files Transfer பண்ணிக்கொள்ளலாம்.

இதுல கூடுதல் சிறப்பு என்னவென்று பார்த்தோம்னா இது ஒரு Open Source Application. அதாவது இதோட Source Code பொதுவாக கிடைக்கிறது, Communityல இருக்குற Developers இதை பார்க்கவும், Contribute பண்ணவும் முடியும். LocalSend-ன் GitHub Repositoryயும் Publicஆக இருக்கிறது.

Securityயும் இதில் கவனிக்கப்பட்டு இருக்கிறது. LocalSend Files Transferக்கு HTTPS Encryption பயன்படுத்துகிறது.  இதெல்லாம் பார்த்தால் Apple Devicesக்கு இருக்கும் AirDrop மாதிரி தான் இது என்று சொல்லலாம். ஆனால் LocalSend-ன் முக்கியமான Advantage என்னவென்றால் இது ஒரே ஒரு Ecosystemக்குள் மட்டும் இருக்காமல் Windows, Android, iOS, macOS, Linux என பல Platformகளில் வேலை செய்கிறது.

ஒரு Fileஐ Transfer பண்ணுவதற்காக அதை முதலில் Internetல Upload பண்ணி, பிறகு Download பண்ணிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமே இல்லை.

Google Play Store – Link

App Store Link – Link

TWICE WEEKLY

Tech Updates, Twice a Week

Get our latest tech reviews, guides, and industry news — delivered twice a week, straight to your inbox.

2 emails a week. Unsubscribe anytime.

Leave a comment