Open Sourceக்கு மாறும் ஐரோப்பிய நாடுகள் காரணம் என்ன?

Microsoft 365 நாம தினசரி பயன்படுத்துற ஒரு முக்கியமான Software Suite. குறிப்பாக Office, Email, Calendar, Teams போன்ற விஷயங்களுக்கு பல நிறுவனங்களும் அரசாங்கங்களும் Microsoft-ஐ சார்ந்து இருக்காங்க. அப்படி இருக்கும் போது Switzerland அரசாங்கம் இப்போது Microsoft 365-க்கு மாற்றாக Open Source Software-ஐ பயன்படுத்த ஒரு Pilot Program-ஐ ஆரம்பித்து இருக்காங்க.

முதலில் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லிடலாம். Switzerland அரசாங்கம் உடனடியாக எல்லா Computersல இருந்தும் Microsoft-ஐ Remove பண்ணப்போறாங்க என்று அர்த்தம் கிடையாது. இப்போதைக்கு சுமார் 3,000 Government Computersல இந்த புதிய Open Source Workplace-ஐ Test பண்ணப்போறாங்க. Switzerland Federal Administrationல மொத்தமாக 54,000-க்கும் அதிகமான Computers இருக்கிறது.

இந்த Pilot Program-க்கு சுமார் 9 Million Swiss Francs செலவு செய்ய திட்டமிட்டு இருக்காங்க. 2027 ஆம் ஆண்டு முடிவில் இந்த 3,000 Employees புதிய system-ஐ பயன்படுத்தும் வகையில் கொண்டு வருவது தான் இப்போதைய திட்டம். அதுவும் Microsoft 365-க்கு பதிலாக ஒரே நாளில் மாற்றாமல், இரண்டு system-களையும் Parallelஆக இயக்கப்போறாங்க.

சரி ஏன் Switzerland இப்படியொரு முடிவை எடுத்திருக்காங்க அப்டினு பார்த்தோம்னா முக்கியமான காரணம் Digital Sovereignty. அதாவது ஒரு நாட்டோட முக்கியமான Government Data மற்றும் அதோட Digital Infrastructure எல்லாமே வேறு ஒரு நாட்டை சேர்ந்த ஒரு Company அல்லது Service Provider மேல முழுமையாக சார்ந்து இருக்கக்கூடாது என்பதுதான் இதோட முக்கியமான idea.

குறிப்பாக Government Data அமெரிக்க சட்டங்களின் காரணமாக Foreign Government-களால் Access செய்யப்படும் வாய்ப்பு இருப்பது Switzerlandக்கு ஒரு கவலையாக இருக்கிறது. அதோட ஒரு குறிப்பிட்ட Company-யை மட்டுமே முழுமையாக சார்ந்து இருப்பது Service பிரச்சனை ஏற்பட்டாலும் Risk. இதற்கு மேல Proprietary Software-க்கான Licensing Cost-ம் தொடர்ந்து அதிகரித்து வருவது இன்னொரு காரணமாக சொல்லப்படுகிறது.

இந்த புதிய systemல Open Source Software-ஐ அடிப்படையாக கொண்ட ஒரு Workplace Platform உருவாக்கப்பட இருக்கிறது. இதில் நமக்கு தேவையான Email, Calendar, Documents, Presentations, Telephone, Audio மற்றும் Video Conference போன்ற Office வேலைகளுக்கு தேவையான முக்கியமான Features இருக்கும்.

இதற்கு முன்னாடியே Switzerland 172 Government Employees வைத்து ஒரு Proof of Concept Test-ஐ நடத்தியிருக்காங்க. அதில் Documents மற்றும் Email போன்ற சாதாரண Office வேலைகளுக்கு நல்ல Feedback கிடைத்திருக்கிறது. ஆனால் பெரிய அளவிலான Video Conferencingல இன்னும் சில Technical Limitations இருந்ததாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த Test வெற்றிகரமாக முடிந்ததற்கு பிறகு தான் இப்போது 3,000 Employees கொண்ட Pilot Program ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்ன அப்டினு பார்த்தோம்னா Switzerland Military ஏற்கனவே இதே மாதிரியான மாற்றத்தை வேகமாக செய்து கொண்டு இருக்கிறது. Military Cyber Command, Microsoft 365-ஐ Open Source based openDesk Software கொண்டு replace செய்யும் பணியில் இருக்கிறது.

இது Switzerland மட்டும் எடுக்குற முடிவும் கிடையாது. Europeல பல நாடுகள் Government Software மற்றும் Data விஷயத்தில் Digital Sovereigntyக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சு இருக்காங்க.

TWICE WEEKLY

Tech Updates, Twice a Week

Get our latest tech reviews, guides, and industry news — delivered twice a week, straight to your inbox.

2 emails a week. Unsubscribe anytime.

Leave a comment