நாம Android Phone பயன்படுத்துறோம் அப்டினா ஏதாவது ஒரு Application Download பண்ண வேண்டும் என்றால் உடனே Google Play Store தான் போவோம். ஆனால் Google Play Storeக்கு மாற்றாக இன்னொரு App Store இருக்கு என்று சொன்னால் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? அதுதான் F-Droid.
சரி இது என்ன, இதை ஏன் பயன்படுத்த வேண்டும், இது Safe-ஆ, அதோட இப்ப F-Droidக்கு என்ன Update வந்திருக்கு அப்டினு சுருக்கமாக பார்க்கலாம்.
முதலில் F-Droid என்றால் என்ன?


F-Droid என்பது Androidக்கான ஒரு App Store மாதிரி தான். ஆனால் Google Play Storeக்கும் இதுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கு. F-Droidல கிடைக்குற Apps எல்லாமே Free and Open Source Software, அதாவது FOSS Apps. ஒரு Application Open Sourceல இருக்கிறது அப்டினா அந்த Application எப்படி உருவாக்கப்பட்டிருக்கு என்பதற்கான Source Code பொதுவாக மற்றவர்கள் பார்க்கவும், ஆய்வு செய்யவும், தேவையான மாற்றங்களை செய்யவும் available-ஆ இருக்கும்.
அதனால F-Droidல் சாதாரணமாக நாம Play Storeல் பார்க்குற மாதிரி எல்லா வகையான Apps-ம் இருக்காது. அதற்கு பதிலாக Open Source Apps தான் முக்கியமாக இருக்கும். உதாரணத்திற்கு Browser, Password Manager, File Manager, VPN, Firewall என்று நிறைய Categoryல Apps இருக்கிறது. இவைகளை F-Droid மூலமாக Download பண்ணிக்கலாம்.
இது ஒரு புதிய விஷயம் கிடையாது. F-Droid பல வருடங்களாகவே இயங்கிக்கிட்டு இருக்கு. ஆனால் இத்தனை வருடங்களாக இருந்த F-Droid App-க்கு இப்பதான் ஒரு பெரிய மாற்றம் வந்திருக்கு.
F-Droid 2.0
F-Droid இதுவரைக்கும் பார்த்திராத அளவுக்கு பெரிய Update ஒன்றை இப்போது வெளியிட்டு இருக்காங்க. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு F-Droid-ன் Official App முழுவதுமாக Redesign செய்யப்பட்டு F-Droid 2.0 ஆக வருகிறது. இந்த புதிய Versionல UI-ஐ முழுவதுமாக புதிதாக உருவாக்கி இருக்காங்க. Kotlin Compose பயன்படுத்தி இந்த App Rewrite செய்யப்பட்டிருக்கிறது.
அதோட Apps Search பண்ணுவது இன்னும் easy ஆகி இருக்கு. முன்னாடி App Name வைத்து Search பண்ணுவது முக்கியமாக இருந்தது என்றால் இப்போது அந்த App Description மற்றும் Translationsல இருக்கும் வார்த்தைகளையும் வைத்து Search செய்ய முடியும். அதுமட்டுமில்லாமல் Apps-ஐ Category அடிப்படையிலும் கண்டுபிடிக்க முடியும். அதிகமாக Download செய்யப்பட்ட Apps-ஐயும் எளிதாக பார்க்க முடியும்.
App Install பண்ணுவதும் இப்போது Easy
F-Droid பயன்படுத்துறவங்களுக்கு முன்னாடி இருக்கும் ஒரு சின்ன பிரச்சனை App Installation தான். F-Droid என்பது Google Play Store இல்லாததால், Apps-ஐ APK மூலமாக Install செய்ய வேண்டிய நிலை இருந்தது. அதனால் Download பண்ணிட்டு, APK Open பண்ணி, Install permission கொடுக்க வேண்டி இருக்கும். இப்போது F-Droid 2.0ல Installation process கொஞ்சம் Easy ஆகி இருக்கு.
நாம F-Droidல Install கொடுத்த பிறகு Systemல வரும் Confirmationல இன்னொரு முறை Install கொடுத்தால் போதும். அதோட ஒரே நேரத்தில் பல Apps-ஐ Download மற்றும் Update செய்யும் வசதியும் கொண்டு வந்திருக்காங்க. App Updates-ஐ Automatic-ஆ Check பண்ணி Install செய்யும் வசதியும் இருக்கிறது.
சரி, F-Droid Safe-ஆ?
இதுதான் முக்கியமான கேள்வி. Google Play Storeக்கு வெளியே இருந்து ஒரு Application Download பண்ணுறோம் என்றாலே கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் Internetல கிடைக்குற எல்லா APK-களும் Safe என்று சொல்ல முடியாது.
ஆனால் F-Droid-ஐ வெறும் ஒரு Random APK Website மாதிரி பார்க்க முடியாது. F-Droidல உள்ள Apps Open Source என்பதால் Source Code public-ஆ இருக்கிறது. அதோட F-Droid தன்னுடைய Repositoryக்கு வரும் Apps-ஐ Check செய்து, APK Hash மற்றும் Repository signatures போன்றவற்றை பயன்படுத்தி package சரியாக இருக்கிறதா என்பதையும் verify செய்கிறது என்று F-Droid தெரிவிக்கிறது.
அதனால் F-Droid-ல் இருக்கிறது என்பதற்காக அந்த Application எந்த Risk-உம் இல்லாதது என்று சொல்ல முடியாது. Open Source என்பது ஒரு Software எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை பார்க்கும் வாய்ப்பை கொடுக்கிறது; அது மட்டும் 100% Safe என்பதற்கான Guarantee கிடையாது. அதனால்தான் எந்த App-ஐ Install பண்ணினாலும் அது கேட்கும் Permissions என்ன, அந்த App என்ன வேலை செய்கிறது என்பதை பார்த்து பயன்படுத்துவது நல்லது.
Open Source ஏன் முக்கியம்?
நாம VLC பற்றி முன்னாடி பார்த்தது போல, Open Source Softwareக்கு அதன் Source Code public-ஆ இருக்கும். அதனால் ஒரே ஒரு நிறுவனத்தை மட்டும் நம்பி அந்த Software எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.
அதே மாதிரி தான் F-Droid-ன் முக்கியமான விஷயமும். F-Droid ஒரு Company மட்டும் Apps எல்லாம் தேர்ந்தெடுத்து கொடுக்குற Store கிடையாது. இது Community-driven project. Volunteers சேர்ந்து இதை Develop பண்ணிக்கிட்டு இருக்காங்க.
நாம முன்னாடி Omnivore பற்றி பார்த்தப்போதும் Open Source என்பது ஒரு முக்கியமான விஷயம் என்று பார்த்தோம். அதன் Code 100% Open Sourceல இருந்ததால், வேறு யாராவது அந்த Code-ஐ பயன்படுத்தி புதிய Application உருவாக்க முடியும். அதே Open Source concept தான் F-Droid-ல இன்னும் பெரிய அளவில் பார்க்க முடிகிறது.
இந்த F-Droid 2.0 Update இப்போது gradual-ஆ Rollout ஆகிக்கிட்டு இருக்கு. உடனடியாக பயன்படுத்த வேண்டும் என்றால் அதன் latest version-ஐ F-Droid-ன் official versions page மூலமாக பெற முடியும்.