நீங்க ஒரு Developer ஆக இருந்தா Tailwind CSS என்ற பெயரை கண்டிப்பா கேள்விப்பட்டு இருப்பீங்க. குறிப்பாக இப்ப AI மூலமாக Website மற்றும் Application எல்லாம் உருவாக்குறது அதிகமாகி இருக்கும் நிலையில் Tailwind CSS-ம் ரொம்ப முக்கியமான ஒரு Tool ஆக மாறி இருக்கு.
அப்படி இருக்கும்போது Tailwind CSS-க்கு பின்னாடி இருக்குற Tailwind Labs நிறுவனத்தை Shopify Acquire பண்ணி இருக்காங்க. சரி Shopify எதுக்கு ஒரு CSS Framework-ஐ வாங்கணும், இதனால் நாம பயன்படுத்துற Tailwind CSS-க்கு என்ன ஆகும், இதுதான் இப்ப முக்கியமான கேள்வி.
முதலில் Tailwind CSS என்றால் என்ன என்பதை சுருக்கமாக பார்த்துவிடலாம். நாம ஒரு Website உருவாக்கும்போது அதுல இருக்குற Button எப்படி இருக்கணும், Text எந்த அளவுல இருக்கணும், எந்த இடத்துல இருக்கணும், Background என்ன நிறத்தில் இருக்கணும் அப்டினு எல்லாத்தையும் Design பண்ண CSS பயன்படுத்துவோம்.
Tailwind CSS அதற்கு ஒரு கொஞ்சம் different ஆன approach கொடுக்கிறது. நிறைய CSS Code தனியாக எழுதுவதற்கு பதிலாக, HTMLக்குள்ளேயே predefined Utility Classes பயன்படுத்தி Website-ஐ Design பண்ண முடியும்.
இதனால் Developersக்கு Website உருவாக்குறது ரொம்ப easy ஆகும். அதனால தான் Tailwind CSS இப்ப உலகம் முழுக்க ரொம்ப அதிகமாக பயன்படுத்தப்படும் CSS Framework-களில் ஒன்றாக இருக்கிறது.
இப்ப இந்த Tailwind Labs நிறுவனத்தை தான் Shopify வாங்கி இருக்காங்க. அதுவும் நேற்று முன்தினம் அதாவது September 9, 2026 அன்று இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கு. Tailwind CSS-ஐ உருவாக்கிய Adam Wathan தான் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்காரு.
சரி Shopify எதுக்கு Tailwind-ஐ வாங்கணும்?
இதற்கு முக்கியமான காரணம் Shopify-க்கும் Tailwind CSS-க்கும் ஏற்கனவே ஒரு தொடர்பு இருக்கு. Shopify ஆரம்பத்திலேயே Tailwind CSS-ஐ பெரிய அளவில் பயன்படுத்திய நிறுவனங்களில் ஒன்று. குறிப்பாக Shopify-யுடைய Hydrogen frameworkல Tailwind CSS பயன்படுத்துவதற்கான Support ஏற்கனவே இருக்கு.
அதுமட்டுமில்லாமல் Shopify-யுடைய Storefront, Admin, Shopping மற்றும் Checkout போன்ற பகுதிகளில் தொடர்ந்து நல்ல User Interface உருவாக்க வேண்டிய தேவை இருக்கு. அதனால் Tailwind-ஐ வெளியில இருக்குற ஒரு தனி நிறுவனமாக support பண்ணுவதற்கு பதிலாக, அந்த நிறுவனத்தையே Shopifyக்குள்ள கொண்டு வருவது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இங்க தான் இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கு.
Tailwind CSS மட்டும் இல்லாமல் Tailwind Labs உருவாக்கிய மற்ற Open Source Projects-ம் இனிமேல் Shopify-க்கு கீழ் வரும். ஆனால் Tailwind CSS-க்கு License மாற்றப்படாது என்று Tailwind Labs தெளிவாக சொல்லி இருக்காங்க. அதாவது Tailwind CSS தொடர்ந்து MIT Licenseல தான் இருக்கும்.
இதனால் இப்போ Tailwind CSS பயன்படுத்துற Developersக்கு பெரிய அளவில் எந்த மாற்றமும் கிடையாது. அது தொடர்ந்து Free ஆகவும் Open Source ஆகவும் இருக்கும். அதோட அதே Team தான் இதை தொடர்ந்து Maintain பண்ணப்போறாங்க.
ஆனால் Tailwind Labs-க்கு இருந்த Commercial Products பக்கம் தான் ஒரு பெரிய மாற்றம் வந்திருக்கு. Tailwind Plus மற்றும் ui.sh போன்ற Paid Productsக்கு இனிமேல் புதிய Customers Sign up பண்ண முடியாது. ஏற்கனவே இதை வாங்கி பயன்படுத்துற Customers தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சொல்லி இருக்காங்க.
இதன் மூலம் Tailwind Labs இனிமேல் அந்த Paid Products-ஐ வைத்து ஒரு தனி Business வளர்ப்பதை விட, Tailwind CSS-ஐ Shopifyக்குள் வைத்து தொடர்ந்து Develop பண்ணப்போகிறது.
இங்க இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் Tailwind CSS இப்ப ஒரு வாரத்திற்கு 110 Million-க்கும் அதிகமான முறை Install செய்யப்படுகிறது என்று Adam Wathan சொல்லி இருக்காரு. ChatGPT, X, Cloudflare, Reddit போன்ற பெரிய நிறுவனங்களும் Tailwind CSS பயன்படுத்துகின்றன.
அதாவது ஒரு பெரிய நிறுவனத்தால் பயன்படுத்தப்படும் ஒரு சாதாரண CSS Framework-ஐ Shopify வாங்கவில்லை. Web Developmentல ஏற்கனவே ரொம்ப முக்கியமான இடத்தில் இருக்கும் ஒரு Open Source Project-ஐ அதுக்கு பின்னாடி இருக்குற Team-ஐ சேர்த்து வாங்கி இருக்காங்க.
இப்ப நாம AI Coding Tools மூலமாக Website அல்லது Application உருவாக்கும்போது AI நிறைய நேரம் Tailwind CSS பயன்படுத்தி Code Generate பண்ணுது. அதனால் Developers Tailwind CSS-ஐ பயன்படுத்துறது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆனால் இதே AI காரணமாக Tailwind Labs-ன் Business Model-க்கும் பிரச்சனை ஏற்பட்டதாக அதன் Founder Adam Wathan முன்னதாக தெரிவித்திருந்தார். Revenue மற்றும் Documentation Traffic குறைந்தது போன்ற பிரச்சனைகள் இருந்ததாகவும், அதனால் நிறுவனத்தின் Team-ல் Layoffs நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
முக்கியமாக Tailwind CSS தொடர்ந்து MIT Licenseல இருக்கும் என்று உறுதி செய்திருப்பதால், இப்ப அதை பயன்படுத்துற Developersக்கு உடனடியாக எந்த மாற்றமும் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் Shopify-யுடைய தேவைகளுக்கு ஏற்ற மாதிரி Tailwind CSS-ல் புதிய Features வருமா, Shopify Products மற்றும் AI Development உடன் இன்னும் நெருக்கமாக Integrate ஆகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.