நேற்றைய தினம் பல்வேறு நிகழ்வுகள் AI உலகத்துல நடந்தது. ஒரே நேரத்தில் ChatGPT, Claude, Grok போன்ற பெரிய AI servicesல Outage ஏற்பட்டு பல பேர் பயன்படுத்த முடியாமல் இருந்தாங்க. அதே நேரத்துல NVIDIA நிறுவனம் Hugging Face-ஐ கிட்டத்தட்ட $12.9 Billionக்கு Acquire செய்யப்போவதாக அறிவித்து இருக்காங்க.
முதலில் Hugging Face என்ன என்று தெரிந்துகொள்வோம்
நாம AI Model Download பண்ணுறது, அதோட Code, Dataset எல்லாம் பயன்படுத்துறது அப்டினா GitHub பற்றி கேள்விப்பட்டு இருப்போம். அதே மாதிரி AI உலகத்துக்கான ஒரு மிகப்பெரிய Platform தான் Hugging Face. இங்க பல்வேறு Open Source மற்றும் Open-Weight AI Models, Datasets, AI Applications எல்லாம் Developers மற்றும் Researchers மூலமாக Share பண்ணப்பட்டு இருக்கும்.

அதனால Open Source AI வளர்ச்சியில் Hugging Face-க்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. உலகம் முழுக்க Developers இதை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான AI Model-ஐ Download பண்ணி, அதை Modify பண்ணி, தங்களுடைய Applicationல பயன்படுத்திக்கொள்ள முடியும். தற்போது இந்த Platform-ஐ 18 Millionக்கும் அதிகமான Developers மற்றும் 200,000 நிறுவனங்கள் பயன்படுத்துவதாக NVIDIA தெரிவித்து இருக்கிறது. இப்ப இப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தை NVIDIA ஏன் $12.9 Billion கொடுத்து வாங்குது அப்டினு பார்த்தோம்னா அதுக்கு முக்கிய காரணம் Open Source AI தான்.
இப்ப AI உலகத்துல OpenAI, Anthropic போன்ற நிறுவனங்கள் தங்களுடைய Closed AI Models மூலமாக பெரிய அளவில் வளர்ந்து வராங்க. ஆனால் இன்னொரு பக்கம் Open Source மற்றும் Open-Weight Models வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது. Developers மற்றும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான Model-ஐ எடுத்துக்கொண்டு அதை Customize பண்ணிக்கொள்ள முடிவது இதற்கு ஒரு முக்கியமான காரணம்.
இதுல NVIDIA-க்கும் ஒரு பெரிய Advantage இருக்கு. AI Model எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதை Run பண்ண Hardware தேவைப்படும். அந்த இடத்துல NVIDIA-வோட GPUs முக்கியமானதாக இருக்கிறது. அதனால Hugging Face மாதிரியான ஒரு மிகப்பெரிய Open Source AI Platform NVIDIA-வோட கைக்கு வந்தால், AI Models உருவாக்குறது முதல் அதை Run பண்ணுவது வரைக்கும் NVIDIA-வோட Ecosystem இன்னும் பெரியதாக மாறும்.
ஆனால் இங்க தான் Open Source Communityக்கு ஒரு கேள்வி வருகிறது. Hugging Face இதுவரைக்கும் பல Hardware மற்றும் Cloud providersக்கு Neutral Platform ஆக இருந்து வந்திருக்கிறது. NVIDIA வாங்கிய பிறகு அந்த Neutrality எப்படி இருக்கும் என்பது தான் பல பேருடைய கவலை. NVIDIA CEO Jensen Huang, Hugging Face தொடர்ந்து Open Platform ஆக இருக்கும் என்றும், பல்வேறு Hardware மற்றும் Cloud Servicesக்கு Support தொடரும் என்றும் தெரிவித்து இருக்கிறார்.
அதனால இப்போதைக்கு Open Source Communityக்கு இது நல்லதா கெட்டதா என்று உடனடியாக சொல்ல முடியாது.ஒரு பக்கம் NVIDIA கொடுக்கப்போகும் Money மற்றும் Infrastructure மூலமாக Hugging Face இன்னும் பெரிய அளவில் வளர வாய்ப்பு இருக்கு.
இன்னொரு பக்கம் Open Source AI உலகத்துல முக்கியமான ஒரு Platform இப்போது உலகின் மிகப்பெரிய AI Hardware நிறுவனங்களில் ஒன்றான NVIDIA-வின் கட்டுப்பாட்டுக்குள் வரப்போகிறது. நேற்று ஒரே நேரத்தில் ChatGPT, Claude, Grok போன்ற AI Services down ஆகி AI உலகமே கொஞ்ச நேரம் திணறிக்கொண்டிருந்த நேரத்துல, இன்னொரு பக்கம் NVIDIA Open Source AI உலகத்துல தன்னுடைய இருப்பை இன்னும் பெரியதாக மாற்றி இருக்கிறது.
இது வெறும் ஒரு Company Acquisition இல்லை. அடுத்த சில வருடங்களில் Open Source AI எப்படிப்பட்ட இடத்தை அடையப்போகிறது என்பதற்கான ஒரு முக்கியமான Signal என்று கூட சொல்லலாம்.
பொறுத்து இருந்து பார்ப்போம், NVIDIA Hugging Face-ஐ எப்படி பயன்படுத்தப்போகிறது என்று.