AI சம்மந்தமாக இந்த வாரம் நிறைய முக்கியமான விஷயங்கள் நடந்திருக்கிறது. குறிப்பாக OpenAI, Google, Anthropic, Meta என பெரிய நிறுவனங்கள் அடுத்தடுத்து புதிய AI Models வெளியிட்டு இருக்காங்க. அதுல OpenAI வெளியிட்ட GPT-6 Astra தான் இப்ப முக்கியமாக பேசப்பட்டு வருகிறது.
GPT-6 Astraவை OpenAI தங்களுடைய மிகவும் capable Model என்று சொல்லி இருக்காங்க. குறிப்பாக Coding, Research, Computer Use, Browsing மற்றும் Complex Multi-Step Tasks போன்ற வேலைகளில் இது அதிக திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஒரு மனிதர் Computer பயன்படுத்தி பல Step ஆக செய்யும் வேலைகளை AI மூலமாக செய்யும் வகையில் Astra உருவாக்கப்பட்டு இருக்கிறது.
அதோட Cybersecurity சம்மந்தமாகவும் இந்த Model அதிகமான திறன் கொண்டிருக்கிறது. OpenAIயின் testingபடி, சரியான Tools மற்றும் Access கொடுக்கப்பட்டால் Previously Unknown Security Vulnerabilitiesஐ கண்டுபிடித்து, அதை பயன்படுத்துவதற்கான வழிகளையும் உருவாக்கும் அளவுக்கு Astra capable ஆக இருக்கிறது. அதனால் இதற்கு கூடுதல் Safety மற்றும் Monitoring systems வைத்திருக்காங்க.
OpenAI முதலில் Astraவை limited organizationsக்கு rollout செய்து இருக்காங்க. அதன்பிறகு ChatGPT Plus, Pro, Business மற்றும் Enterprise usersக்கு கொண்டு வரப்படும் என்று சொல்லி இருக்காங்க. ஆனால் தற்போதைய ChatGPT availability தகவல்படி ChatGPTல் Astra, GPT-6 Pro ஆக Pro $100, Pro $200, Business மற்றும் Enterprise plansக்கு rollout ஆகிறது. Free மற்றும் Go usersக்கு இது கிடையாது. Plus usersக்கும் ChatGPTல் Astra தற்போது included இல்லை.
இதோடு OpenAI மட்டும் இந்த வாரம் புதிய Model வெளியிடவில்லை. Google தங்களுடைய Gemini 3.8 Flash மற்றும் Cybersecurityக்காக Gemini 3.8 Flash Cyber போன்ற Modelsஐ அறிமுகப்படுத்தி இருக்காங்க. Anthropic புதிய Claude Fable 5.1 Modelஐ கொண்டு வந்து இருக்காங்க. Metaவும் Muse Spark 1.3 என்ற புதிய Modelஐ வெளியிட்டு இருக்காங்க.
இப்படி ஒவ்வொரு நிறுவனமும் Coding, Cybersecurity, Computer Use, Research என தனித்தனி பகுதிகளில் AI Modelsஐ இன்னும் powerful ஆக்கிக்கொண்டு இருக்காங்க. ஆனால் இதையெல்லாம் விட நேற்று நடந்த இன்னொரு விஷயம் கவனிக்க வேண்டியது. இந்த புதிய AI Models பற்றிய செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த அதே நேரத்தில் ChatGPT, Claude மற்றும் Grok போன்ற AI Servicesல் Outage ஏற்பட்டது.
ஒரு பக்கம் AI Models நாளுக்கு நாள் powerful ஆகிக்கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் இந்த Services நம்முடைய Daily Workல் முக்கியமானதாக மாறிக்கொண்டு இருப்பதால், சில மணி நேரம் Outage ஏற்பட்டாலே நிறைய users பாதிக்கப்படுறாங்க. அதனால் AI Competition மட்டும் இல்லாமல், இந்த Models எவ்வளவு Reliable மற்றும் Safeஆ இருக்கிறது என்பதும் இனிமேல் முக்கியமான விஷயமாக இருக்கும்.