Apple Pay உலகம் முழுக்க பல நாடுகளில் ரொம்ப வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு Payment Service. ஆனால் உலகத்திலேயே Digital Payment அதிகமாக பயன்படுத்தப்படும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் மட்டும் இத்தனை வருடங்களாக Apple Pay கிடைக்காமல் இருந்தது.
Bloomberg-ன் Mark Gurman வெளியிட்ட தகவலின்படி Apple அடுத்த மாதம், அதாவது October 2026-ல் Apple Pay-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகி வருவதாக சொல்லி இருக்காரு.
சரி முதலில் Apple Pay என்றால் என்ன?
நாம பொதுவாக கடைகளில் Credit அல்லது Debit Card பயன்படுத்தும்போது Card-ஐ POS Machine-ல் Tap பண்ணி Payment செய்வோம் இல்லையா, அதே வேலையை நம்மளோட iPhone அல்லது Apple Watch மூலமாக செய்வதற்கான வசதி தான் Apple Pay. உங்களுடைய Supported Card-ஐ Apple Wallet-ல் Add பண்ணிவிட்டால் போதும். அதன்பிறகு Payment செய்யும்போது Card எடுத்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. iPhone அல்லது Apple Watch-ஐ NFC Support இருக்குற Payment Terminal அருகில் கொண்டு சென்று Face ID அல்லது Touch ID மூலமாக Authenticate செய்து Payment செய்யலாம்.
Apple Pay-ல் நம்முடைய உண்மையான Card Number நேரடியாக Merchant-க்கு கொடுக்கப்படுவதில்லை. அதற்கு பதிலாக Tokenized Card Details பயன்படுத்தப்படுவதால் Security விஷயத்திலும் இது பயனுள்ளதாக இருக்கும்.
இப்ப இந்தியாவிற்கு வரப்போகும் Apple Pay முதலில் Axis Bank Credit Cards உடன் ஆரம்பிக்கலாம் என்று Reuters Report செய்திருக்கிறது. Apple நிறுவனம் HDFC Bank மற்றும் ICICI Bank உடனும் பேச்சுவார்த்தையில் இருக்கிறது. ஆனால் அந்த Banks உடன் Commercial Terms இன்னும் Final ஆகவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதனால் எல்லா Bank Cards-ம் முதல் நாளில் இருந்தே Apple Pay Support செய்யும் என்று எதிர்பார்க்க முடியாது. இதுல இன்னொரு முக்கியமான விஷயம் UPI Support.
Times of India வெளியிட்ட Report-ல் Mark Gurman தகவலின்படி Apple Pay Card Payments உடன் UPI-யையும் Support செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் Reuters மற்றும் இதற்கு முன்னர் வெளிவந்த Reports வேறு ஒரு தகவலை சொல்கிறது. அதாவது ஆரம்பத்தில் Visa மற்றும் Mastercard Credit Cards மட்டும் Support செய்யப்பட்டு, UPI பின்னர் வரலாம் என்பதுதான். UPI Support கொண்டுவர Apple-க்கு NPCI Approval மற்றும் Sponsor Bank Partnership போன்றவை தேவைப்படும். அதனால் Apple Pay Launch ஆகும்போதே UPI Support இருக்கும் என்பது இப்போதைக்கு Confirm ஆகவில்லை.
இது முக்கியமான விஷயம். ஏன்னா இந்தியாவில் Digital Payment என்று வந்துவிட்டால் Google Pay, PhonePe, Paytm என்று பெரும்பாலான Payments UPI மூலமாக தான் நடக்கிறது. UPI இந்தியாவின் Digital Payment Transaction Volume-ல் சுமார் 84% அளவுக்கு இருக்கிறது என்று Reuters குறிப்பிடுகிறது. அதனால் வெறும் Credit Card Tap-to-Pay மட்டும் கொண்டு வந்தால் Apple Pay இந்தியாவில் மற்ற நாடுகளில் கிடைக்கும் அளவுக்கு முக்கியமான Payment Option ஆகுமா என்பது ஒரு கேள்வி.
அதே நேரத்தில் NPCI சமீபத்தில் UPI Tap & Pay வசதியையும் அறிமுகம் செய்திருக்கிறது. NFC Support இருக்கும் Phone மற்றும் POS Terminal பயன்படுத்தி Tap செய்து UPI Payment செய்யக்கூடிய வசதி இது. ₹5,000 வரை PIN இல்லாமல் Payment செய்யலாம் என்றும், அதற்கு அதிகமான Payment-க்கு UPI PIN தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Apple Pay முதன்முதலில் 2014-ல் அமெரிக்காவில் அறிமுகமானது. கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு தான் இந்தியாவிற்கு வருவதற்கான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
October மாதம் Apple Pay இந்தியாவில் உண்மையாகவே Launch ஆகிறதா, அதைவிட முக்கியமாக UPI Support உடன் வருகிறதா இல்லையா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.