Apple ஒரு புதிய iPhone launch பண்ணுனாங்க அப்டினா, ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பழைய iPhone-களோட விலை குறையும் என்று தான் நாம எதிர்பார்ப்போம். ஆனால் இந்த முறை Apple அதற்கு நேர்மாறாக இருக்கு. நேற்று Apple நிறுவனத்தின் புதிய iPhone 18 Pro, iPhone 18 Pro Max மற்றும் முதல் Foldable iPhone ஆன iPhone Duo அறிமுகமானதை தொடர்ந்து, இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருந்த iPhone 16, iPhone 17, iPhone 17e மற்றும் iPhone Air ஆகியவற்றின் விலையை Apple அதிகரித்து இருக்காங்க.
இதுல முக்கியமான விஷயம் என்ன அப்டினா, சில iPhone models-க்கு ஆயிரக்கணக்கில் மட்டும் இல்லாமல் ₹65,000 வரைக்கும் விலை அதிகரித்து இருக்கு. அதுவும் புதிய iPhone வந்ததும் பழைய iPhone விலை குறையும் என்று எதிர்பார்த்த நேரத்தில் இப்படி ஒரு Price Hike வந்திருப்பது தான் பலருக்கும் ஆச்சரியம்.
சரி எந்த iPhone-க்கு எவ்வளவு விலை அதிகரித்து இருக்கு என்று பார்க்கலாம்.
iPhone-களின் பழைய விலை மற்றும் புதிய விலை
| iPhone | இந்தியாவில் விலை மாற்றம் |
|---|---|
| iPhone 17 256GB | ₹82,900 → ₹99,900 — ₹17,000 அதிகரிப்பு |
| iPhone 17 512GB | ₹1,02,900 → ₹1,24,900 — ₹22,000 அதிகரிப்பு |
| iPhone 16 128GB | ₹69,900 → ₹89,900 — ₹20,000 அதிகரிப்பு |
| iPhone 17e 256GB | ₹64,900 → ₹79,900 — ₹15,000 அதிகரிப்பு |
| iPhone Air 1TB | ₹1,59,900 → ₹2,24,900 — ₹65,000 அதிகரிப்பு |
இதுல iPhone Air 1TB தான் மிகப்பெரிய Price Hike-ஐ சந்தித்து இருக்கு. ஒரே phone-க்கு ₹65,000 அதிகம் கொடுக்க வேண்டிய நிலை வந்திருக்கு. Reuters கணக்குப்படி இதன் புதிய இந்திய விலை $2,359 அளவுக்கு வருகிறது. Apple India-வின் தற்போதைய lineup-ல் iPhone 16 ₹89,900-ல் இருந்தும், iPhone 17 ₹99,900-ல் இருந்தும், iPhone 17e ₹79,900-ல் இருந்தும், iPhone Air ₹1,49,900-ல் இருந்தும் தொடங்குகிறது.
புதிய iPhone 18 Pro விலை எவ்வளவு?
சரி பழைய iPhone-களுக்கே இவ்வளவு விலை அதிகரித்து இருக்கு. அப்ப புதிதாக வந்த iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max விலை எப்படி இருக்கு என்று பார்த்தால் அதுவும் முந்தைய generation-ஐ விட அதிகமாகத்தான் இருக்கு.
அமெரிக்காவில் இவங்களோட Starting Price முறையே $1,199 மற்றும் $1,299.
| iPhone | US Price | India Price |
|---|---|---|
| iPhone 18 Pro 256GB | $1,199 | ₹1,64,900 |
| iPhone 18 Pro Max 256GB | $1,299 | ₹1,79,900 |
முதல் Foldable iPhone-ன் விலை?
இதை தனியாக சொல்லியே ஆக வேண்டும். Apple முதல் முறையாக Foldable iPhone-ஐ அறிமுகப்படுத்தி இருக்காங்க. இதற்கு iPhone Duo என்று பெயர் வைத்திருக்காங்க.
அமெரிக்காவில் Starting Price $1,999.
| iPhone | US Price | India Price |
|---|---|---|
| iPhone Duo 256GB | $1,999 | ₹2,99,900 |
Apple India-வின் current store listing-லும் iPhone Duo ₹2,99,900-ல் தொடங்குகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் Apple-ன் புதிய Foldable iPhone இந்தியாவில் ஒரு சாதாரண Premium Smartphone விலையை தாண்டி இன்னும் அதிகமான Price Segment-க்குள் போயிருக்கு.
ஏன் இந்த விலை அதிகரிப்பு?
இதுக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று Memory Chip விலை அதிகரிப்பு. இதை வெறும் RAM விலை அதிகரிப்பு என்று மட்டும் சொல்ல முடியாது. Smartphones-ல் பயன்படுத்தப்படும் DRAM மற்றும் NAND Flash memory இரண்டுடைய விலையும் அதிகரித்து இருக்கு.
இதுக்கு முக்கியமான காரணம் AI. இப்ப AI Data Centers உலகம் முழுக்க வேகமாக அதிகரித்து வருது. இந்த Data Centers-க்கு மிகப்பெரிய அளவில் Memory தேவைப்படுகிறது. குறிப்பாக AI Servers அதிக அளவில் DRAM மற்றும் NAND memory பயன்படுத்துவதால், Memory manufacturers-ன் supply அந்த பக்கம் அதிகமாக போயிட்டு இருக்கு.
இதன் காரணமாக Smartphone manufacturers-க்கும் Memory components வாங்குவதற்கான செலவு அதிகரித்து இருக்கு. Counterpoint Research-ன் தகவல்படி, 2026-ம் ஆண்டின் Q2-ல் Smartphone Memory prices ஒரு Quarter-க்கு மற்றொரு Quarter compare பண்ணும்போது 80%க்கும் மேல் அதிகரித்து இருக்கிறது.
இந்தியாவில் மட்டும் ஏன் இவ்வளவு அதிகமாக தெரிகிறது?
சரி Memory cost அதிகரிப்பது உலகம் முழுக்க நடக்கிறது என்றால், இந்தியாவில் மட்டும் ஏன் இவ்வளவு பெரிய Price Hike என்று கேள்வி வரலாம்.அதற்கு இந்தியாவின் Import Duties மற்றும் 18% GST போன்ற காரணிகளும் இருக்கிறது. Apple இந்தியாவிலேயே iPhone-களை manufacture மற்றும் assemble செய்து வந்தாலும், அனைத்து components-மும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவது கிடையாது. அதனால் Supply Chain cost, Import Duties, GST மற்றும் மற்ற செலவுகள் எல்லாமே final price-ல் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதன் காரணமாக US Price-ஐ compare பண்ணும்போது இந்தியாவில் iPhone-ன் விலை அதிகமாக தெரிகிறது. Reuters-ம் இந்தியாவில் இந்த முறை ஏற்பட்ட Price Hike உலகின் மற்ற சில முக்கிய சந்தைகளை விட அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது.
இனி வரும் காலத்தில் Memory prices எப்படி போகிறது என்பதை பொறுத்து Smartphone prices இன்னும் எவ்வளவு மாறும் என்பதை தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.