நாம True caller-ஐ எதற்காக பயன்படுத்துறோம் அப்டினு கேட்டா பெரும்பாலும் தெரியாத ஒரு Phone Number யாருடையது, அது Spam Call-ஆ, இல்லையா என்பதை தெரிஞ்சுக்க தான் பயன்படுத்துவோம். இத்தனை வருடமாக Truecaller-க்கு முக்கியமான அடையாளமாக இருந்ததே இந்த Caller ID மற்றும் Spam Protection தான். ஆனால் இப்போது Scammers Phone Call மூலமாக மட்டும் நம்மள ஏமாற்றுவது இல்லை. WhatsApp Message, SMS, Email, அதுல வரக்கூடிய Link என்று பல வழிகளில் Scam நடக்குது. அதனால் Truecaller-ம் Caller ID-யை தாண்டி இப்போது Scam-களை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்காங்க.

அதற்காகத்தான் True caller இப்போது Scam Checker என்ற ஒரு புதிய Service-ஐ அறிமுகப்படுத்தி இருக்காங்க. இதுல என்ன செய்யலாம் அப்டினு பார்த்தோம்னா, உங்களுக்கு சந்தேகமாக இருக்குற ஒரு Phone Number, Link அல்லது Message-ஐ இதில் கொடுத்து அது Scam-ஆ இல்லையா என்று Check பண்ணிக்கலாம்.
உதாரணத்திற்கு உங்களுக்கு WhatsApp-ல ஒரு Link வருகிறது என்று வைத்துக்கொள்வோம். அது உண்மையான Website Link-ஆ அல்லது ஏதாவது Scam Website-க்கு கொண்டு போகும் Link-ஆ என்று தெரியவில்லை என்றால் அந்த Link-ஐ Scam Checker-ல் கொடுத்து Check பண்ணிக்கலாம்.
இந்த Service அந்த Link-ஐ வெறுமனே பார்த்துட்டு Result கொடுக்காது. Shortened URL இருந்தால் அதை Expand பண்ணி, Redirect ஆகி கடைசியாக எந்த Website-க்கு செல்கிறது என்பதையும் Check பண்ணும். அதன் பிறகு Truecaller-ஓட Risk Database மற்றும் வேறு சில Fraud Signals-ஐ வைத்து அந்த Link குறித்து தகவல் கொடுக்கும்.
அதேபோல உங்களுக்கு ஒரு Suspicious Message வந்திருந்தால் அந்த முழு Message-ஐயும் Paste பண்ணலாம். அதில் இருக்கும் Phone Number அல்லது Link-ஐ கண்டுபிடித்து, அது தொடர்பாக Truecaller Community-ல் ஏற்கனவே ஏதாவது Reports இருக்கிறதா என்பதையும் பார்க்கும்.
இதை படிக்கும் போது ஒரு கேள்வி உங்களுக்கு வரலாம். “இதையே VirusTotal கூட பண்ணுமே, அப்ப Truecaller-க்கு என்ன புதுசு?” ஆமாம், VirusTotal-லும் ஒரு URL-ஐ கொடுத்து அது Malicious-ஆ, Phishing Website-ஆ, Suspicious-ஆ இருக்கிறதா என்று Check பண்ணிக்கலாம். VirusTotal ஒரு URL-ஐ பல Antivirus Engines, URL Scanners, Blocklists மற்றும் வேறு Security Tools மூலமாக Analyze பண்ணுகிறது.
ஆனால் இங்க தான் Truecaller-க்கும் VirusTotal-க்கும் ஒரு முக்கியமான Difference இருக்கு. VirusTotal-ஐ ரொம்ப சுருக்கமாக சொல்லணும்னா “இந்த URL Security Threat-ஆ?” என்ற angle-ல பார்க்கிறது. Truecaller-ன் focus “இந்த Link Scam அல்லது Fraud-க்கு பயன்படுத்தப்படுகிறதா?” என்பதிலும் இருக்கு. அதற்காக Truecaller Community-ல் வந்த Scam Reports, Phishing மற்றும் Scam Databases, Domain Signals போன்றவற்றையும் பயன்படுத்துகிறது.
இதை இன்னும் புரியும் வகையில் ஒரு Scenario வைத்து பார்க்கலாம். நீங்க ஒரு Website உருவாக்குறீங்க என்று வைத்துக்கொள்வோம். அந்த Website-ல் எந்த Malware-மும் இல்லை. Computer-க்குள் Virus install பண்ணும் எந்த Code-மும் இல்லை. ஆனால் அது ஒரு Fake Shopping Website. அதுல “iPhone ₹999-க்கு கிடைக்கும், இப்பவே Order பண்ணுங்க” என்று Advertisement கொடுத்து, Payment Details மற்றும் Card Information வாங்குறீங்க என்று வைத்துக்கொள்வோம்.
இது ஒரு Scam Website ஆக இருக்கலாம். ஆனால் அந்த Website-ல் Malware இல்லாததால் ஒரு Security Scanner-க்கு பெருசாக எந்த Threat-உம் தெரியாமல் இருக்கலாம். உண்மையில் VirusTotal-ன் documentation-லும் ஒரு Phishing Website-ல் இருக்கும் Webpage தானாகவே Malware ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிடுகிறது.
அதே Website-ஐ Truecaller பார்க்கும்போது Scam Reports, Domain Information, Known Scam அல்லது Phishing Databases மற்றும் வேறு Fraud Signals ஆகியவற்றையும் பார்க்க முடியும். அதனால் “இந்த Website-ல் Virus இருக்கிறதா?” என்பதைத் தாண்டி “இந்த Website மூலமாக மக்கள் ஏமாற்றப்படுகிறார்களா?” என்பதையும் பார்க்கும் முயற்சி இது.
அதனால இதை VirusTotal-க்கு ஒரு Replacement என்று சொல்ல முடியாது. இரண்டுமே ஒரே வேலையை செய்கிறது என்று சொல்வதும் சரியாக இருக்காது. ஒரு பக்கம் VirusTotal பல Security Engines-ஐ ஒன்று சேர்த்து ஒரு URL-ன் Security Threat-ஐ Analyse பண்ணுகிறது. இன்னொரு பக்கம் Truecaller தன்னுடைய பல வருட Scam Detection மற்றும் Community Reports-ஐ பயன்படுத்தி Fraud-ஐ கண்டுபிடிக்க முயற்சி செய்கிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இதை பயன்படுத்த Truecaller App Install பண்ண வேண்டிய அவசியம் இல்லை. Login கூட தேவையில்லை. இப்போதைக்கு இந்தியாவில் மட்டும் கொண்டு வந்து இருக்காங்க. அதன்பிறகு Latin America, Middle East and Africa மற்றும் Southeast Asia பகுதிகளுக்கும் கொண்டு வரப்போறாங்க.
இதற்காக Truecaller-க்கு ஏற்கனவே இருக்கும் ஒரு பெரிய advantage அவங்களோட Community தான். இந்த Community மூலமாக மக்கள் Scam Numbers மற்றும் Scam குறித்து Reports கொடுத்துக்கிட்டு இருக்காங்க. ScamFeed-ல் மக்கள் தங்களுக்கு வந்த Scam-களை Report பண்ணுவதோடு, அது எப்படி நடந்தது என்பதையும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியும். அதாவது நமக்கு ஒரு Scam Message வருது, அதை Truecaller-ல் Report பண்ணுறோம். அதே மாதிரி வேறொருவருக்கும் அதே Scam வந்திருக்கலாம். இப்படி பல பேருடைய Reports சேரும்போது அந்த Scam குறித்து மற்றவர்களுக்கும் முன்கூட்டியே தெரிய வாய்ப்பு கிடைக்கிறது.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் Truecaller இனிமேல் Screenshot-களையும் Upload பண்ணி Scam-ஐ Analyse செய்யும் வசதியை கொண்டு வரப்போறாங்க. அதாவது ஒரு Scam Message-ஐ Screenshot எடுத்துட்டு அதை Check பண்ணிக்கிற மாதிரி ஒரு வசதியும் எதிர்காலத்தில் வரலாம்.
இதற்கு ஒரு முக்கியமான காரணமும் இருக்கு.முன்னாடி Scam Call என்றாலே Phone Call தான் நமக்கு ஞாபகம் வரும். ஆனால் இப்போது Scams ரொம்பவே Multi-channel ஆக மாறி இருக்கு. Message, WhatsApp, Link என்று பல வழிகளில் வருது. அதனால் Caller ID மட்டும் வைத்து எல்லா Scam-களையும் தடுக்க முடியாது.
அதனால் தான் Truecaller தன்னுடைய Scam Intelligence-ஐ Phone Calls-ல் இருந்து Open Web வரைக்கும் கொண்டு வர ஆரம்பிச்சு இருக்காங்க.Truecaller சொல்ற தகவல்படி September 14 முதல் 20 வரையிலான ஒரு வாரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 12.9 Billion Messages-ஐ அவர்கள் Evaluate பண்ணி இருக்காங்க. அதில் 20.3 Million Messages Fraudulent என்று Flag செய்யப்பட்டிருக்கிறது.
அதோட Truecaller-க்கு இது ஒரு புதிய direction-ம் கூட. ஏனென்றால் India-வில் Caller ID Apps தொடர்பாக புதிய Regulation-களும் வந்திருக்கிறது. அதனால் Truecaller தங்களுடைய Caller ID Service-ஐ தாண்டி Scam Protection-க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சு இருக்காங்க. இதுவரைக்கும் Truecaller என்றாலே Caller ID என்று தான் நமக்கு தெரியும். ஆனால் இனிமேல் நமக்கு வரும் ஒரு Phone Number மட்டுமில்லாமல், ஒரு Message அல்லது ஒரு Link கூட Scam-ஆ என்று Check பண்ணுவதற்கான ஒரு Tool-ஆ Truecaller மாறப்போகிறது.