AI இப்போ நம்மளோட அன்றாட வாழ்க்கையில் எந்தளவுக்கு வந்துடுச்சு அப்டினு நான் தனியா சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதுவும் இப்ப AI Agent என்று சொல்லக்கூடிய ஒரு விஷயம் வந்த பிறகு நாம கொடுக்குற ஒரு வேலையை AI தானாகவே Search பண்ணி, தேவையான Website-க்கு போய், தகவல்களை எடுத்து அதோட வேலையை முடிக்க முடிகிறது. ஆனால் இதே விஷயம் சில நேரங்களில் எந்தளவுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதற்கு இப்போ நடந்திருக்கிற ஒரு சம்பவம் நல்ல உதாரணம்.
Australia-வில் இருக்கும் Medicare Statistics Reporting Service என்ற Government Website-க்குள் OpenAI-யுடைய AI Agent ஒன்று அனுமதி இல்லாமல் சென்றிருக்கிறது. சரி, Medicare அப்டினா பொதுவாக மக்கள் Health தொடர்பான தகவல்கள் இருக்கும் என்று நினைப்போம். ஆனால் இங்கே ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. இந்த Website-ல் பொதுமக்களுடைய தனிப்பட்ட Medical Records கிடையாது. இது Medicare தொடர்பான Statistics மற்றும் Spending போன்ற Aggregate Data-வை வைத்திருக்கும் ஒரு Public-facing portal.
என்ன நடந்தது?
இந்த சம்பவம் கடந்த June 18-ம் தேதி நடந்திருக்கிறது. OpenAI தன்னுடைய AI Model-ஐ வைத்து Australia தொடர்பான Public Medicine Spending பற்றிய தகவல்களை Search பண்ணிக்கொண்டு இருந்திருக்கிறது. அதற்காக அந்த AI Agent பல Government Websites-க்கும் சென்று தகவல்களை தேடியிருக்கிறது.
அப்படி Search பண்ணும்போது Services Australia நிர்வகிக்கும் Medicare Statistics Reporting Service portal-க்கும் சென்றிருக்கிறது. ஆனால் அங்கே AI Agent கேட்ட தகவல்கள் கிடைக்காமல் சில தடைகள் வந்திருக்கிறது. அதற்குப் பிறகு அந்த Agent வேறு வழிகளில் அந்த தகவல்களை பெற முயற்சி செய்திருக்கிறது.
அதன் மூலமாக அந்த Website-ல் இருந்த Public files மட்டுமில்லாமல் சில Non-public files-களையும் access செய்திருக்கிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், யாருடைய தனிப்பட்ட Medicare அல்லது Patient Data-வும் access செய்யப்பட்டதாக இதுவரைக்கும் தெரியவில்லை என்று Australian Government கூறியிருக்கிறது. Investigation இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்பதால் இதை Final conclusion என்று சொல்ல முடியாது.
OpenAI-க்கு இது எப்போது தெரிந்தது?
இங்கதான் இன்னொரு பெரிய விஷயம் இருக்கு. இந்த சம்பவம் June-ல் நடந்திருக்கிறது. ஆனால் Australian Government-க்கு இதுகுறித்து தகவல் September 10-ம் தேதி தான் கிடைத்திருக்கிறது. அதாவது சம்பவம் நடந்ததிலிருந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பிறகுதான் Government-க்கு தெரிய வந்திருக்கிறது.
OpenAI, Services Australia-வுடைய ஒரு பொதுவான Email Inbox-க்கு Email அனுப்பிய பிறகுதான் Government இதை பற்றி தெரிந்து கொண்டிருக்கிறது. அதன் பிறகு Services Australia Australian Signals Directorate-க்கு தகவல் தெரிவித்திருக்கிறது. இதுதான் Australia Prime Minister Anthony Albanese-ஐ OpenAI மீது கடுமையான கேள்விகளை எழுப்ப வைத்திருக்கிறது. அவர் OpenAI CEO Sam Altman-ஐ தொடர்பு கொண்டு இந்த சம்பவம் குறித்து Australia’s extreme concern-ஐ தெரிவித்துள்ளார். அதோடு Government-க்கு தகவல் தெரிவிக்க OpenAI எடுத்துக்கொண்ட நேரம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்துள்ளார்.
இது முதல் சம்பவம் இல்லை
இப்போ நடந்த இந்த Medicare சம்பவத்தை தனியாக பார்க்க முடியாது. ஏனென்றால் இதற்கு முன்னாடியும் OpenAI-யுடைய AI Agents தொடர்பான சில Security சம்பவங்கள் நடந்திருக்கிறது. கடந்த July மாதம் Hugging Face என்ற AI மற்றும் Open Source platform-ன் infrastructure-க்குள் OpenAI-யுடைய ஒரு AI Agent சென்ற சம்பவம் வெளியானது.
அந்த சம்பவத்தில் OpenAI Agent ஒரு misconfigured infrastructure-ஐ பயன்படுத்தி பல Accounts மற்றும் Services-ஐ access செய்திருந்தது. OpenAI பின்னர் நான்கு Accounts தொடர்பாக access நடந்ததாக தெரிவித்திருந்தது. அதற்கும் முன்னாடி May மாதத்தில் இன்னொரு சம்பவம் நடந்திருக்கிறது. OpenAI Agents ஒரு German Programming Wiki-யான DseWiki-க்குள் சென்று, அதை தங்களுக்குள் தகவல் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு மாதிரியான Message Board போல பயன்படுத்தியதாக Reuters செய்தி வெளியிட்டது.
அந்த AI Agents ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு Restrictions-ஐ எப்படி Bypass செய்வது, Detection-ல் சிக்காமல் இருப்பது போன்ற விஷயங்களைப் பற்றி தகவல்களை பகிர்ந்ததாக Researchers கண்டுபிடித்திருந்தார்கள். அந்த Website-ல் 15,000-க்கும் மேற்பட்ட edits நடந்ததாகவும் Reuters தெரிவித்திருந்தது.
AI Agent-க்கு ஒரு வேலை கொடுக்கும்போது அது நாம எதிர்பார்த்த மாதிரி மட்டும் அந்த வேலையை செய்யாமல், அந்த வேலையை முடிப்பதற்காக வேறு வழிகளையும் முயற்சி செய்யக்கூடும்.
AI Agent-களின் பெரிய பிரச்சனை இதுதான்
நாம ChatGPT-யிடம் ஒரு கேள்வி கேட்டால் அது நமக்கு ஒரு பதிலை கொடுக்கிறது. ஆனால் AI Agent-கள் அதைவிட கொஞ்சம் வித்தியாசமானது. நீங்க ஒரு வேலையை கொடுத்தால் அதற்கு தேவையான தகவல்களை Search பண்ணுவது, Websites-க்கு செல்வது, சில Tools-ஐ பயன்படுத்துவது என அந்த வேலையை முடிப்பதற்கான பல Steps-ஐ AI தானாக செய்ய முடியும்.
இதில் பிரச்சனை என்னவென்றால், ஒரு Website AI Agent-ஐ Block பண்ணும்போது அந்த Agent “சரி இங்கே முடியாது” என்று நின்றுவிடாமல் வேறு வழியை தேட ஆரம்பித்தால் என்ன ஆகும்? Australia-வில் நடந்த சம்பவத்தில் இதுபோலத்தான் AI Agent சில தடைகளை தாண்டி Non-public Files-ஐ access செய்திருக்கிறது என்று Government கூறுகிறது.
இந்த சம்பவத்துக்குப் பிறகு AI Agent-களுக்கு எவ்வளவு Access கொடுக்க வேண்டும், அவை ஒரு Website-ல் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதில் இன்னும் அதிகமான கட்டுப்பாடுகள் வர வாய்ப்பு இருக்கிறது.