நாம iPhone அல்லது Mac பயன்படுத்துறோம் அப்டினா அதுல default-ஆ இருக்குற Browser Safari. Safariல போய் ஏதாவது Search பண்ணுனோம் அப்டினா பெரும்பாலும் நமக்கு Google Search தான் Results கொடுக்கும். சரி Google Search தான் நல்லா இருக்கு அதனால Apple Google-ஐ default Search Engine-ஆ வைத்திருக்காங்க என்று நினைச்சுட்டு இருப்போம்.
Safari-ல் Google-ஐ default Search Engine-ஆ வைத்திருப்பதற்காக Google, Apple-க்கு பெரிய தொகையை கொடுத்து வருகிறது. 2022-ல் மட்டும் Google Apple-க்கு சுமார் $20 Billion கொடுத்ததாக அமெரிக்காவில் நடந்த Antitrust வழக்கு தொடர்பான ஆவணங்களில் தெரியவந்தது. இந்த Deal-ல் Safari மூலம் Google Search செய்யப்படும் போது கிடைக்கும் Advertising Revenue-ல் Apple-க்கு 36% கிடைப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சரி இவ்வளவு பணம் கொடுத்து Google-ஐ Safari-ல் Default Search Engine-ஆ வைத்திருக்காங்கன்னா Google ஏன் Safari-ஐ விட்டுட்டு தன்னோட Chrome மற்றும் Google App-ஐ பயன்படுத்த சொல்லக்கூடாது என்று நினைக்கலாம்.
அதுதான் இப்ப Apple கவனிக்க ஆரம்பிச்சிருக்கிறது. சமீபத்தில் வெளியான தகவல்படி, iOS 27.2 Beta-வில் Safari-க்குள் Apple ஒரு புதிய Code-ஐ Test பண்ணிட்டு இருக்காங்க. Google Search Page-க்கு நாம Safari மூலமாக போகும்போது Google, Chrome அல்லது Google App-ஐ பயன்படுத்த சொல்லி ஏதாவது Banner அல்லது Promotion காட்டுகிறதா என்பதை Safari கண்டுபிடிக்க முடியும்.
அதுமட்டுமில்லாமல் அந்த Promotion-ஐ User பார்த்தாரா, அதை Click பண்ணினாரா, அதற்கு Response கொடுத்தாரா என்பதையும் Safari Track செய்யக்கூடிய வகையில் இந்த Code இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் புரியும் வகையில் சொல்லணும் அப்டினா நீங்க iPhoneல Safari Open பண்ணி Google Search போறீங்க. அங்கே Google, “Chrome பயன்படுத்திப் பாருங்க” அல்லது “Google App Download பண்ணுங்க” என்று ஒரு Promotion காட்டுது என்று வைங்க.
அந்த Promotion உங்களுக்கு காட்டப்பட்டதா, அதை நீங்க Open பண்ணீங்களா இல்ல Dismiss பண்ணீங்களா என்பதை Safari பதிவு செய்யக்கூடிய Feature-ஐ Apple இப்போது Test பண்ணிட்டு இருக்காங்க. ஆனால் இதை Apple எதற்காக கொண்டு வரப்போகிறது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
ஒரு காரணம் Google-ன் இந்த Promotions எப்படி Safari Users-ஐ Chrome அல்லது Google App பக்கம் கொண்டு செல்கிறது என்பதை Apple தெரிந்துகொள்ள விரும்பியிருக்கலாம். இன்னொரு பக்கம் Browser Competition தொடர்பாக Apple மற்றும் Google மீது Regulators தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக Google-ன் Search Agreement காரணமாக Safari மற்றும் Chrome இடையிலான Competition பாதிக்கப்படுகிறதா என்பதும் கேள்வியாக இருக்கிறது.
இங்கே தான் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் இருக்கு. Google, Safari-ல் Default Search Engine-ஆ இருப்பதற்காக Apple-க்கு பணம் கொடுக்கிறது என்பது நமக்கு தெரியும். ஆனால் இந்த பணம் கிடைக்கிறது என்பதற்காக Apple Google-ஐ எப்போதும் Default-ஆ வைத்திருக்க வேண்டும் என்ற நிலை இப்போது இல்லை.
Google-க்கு எதிரான Antitrust வழக்கில், Google Apple-க்கு பணம் கொடுத்து Safari-ல் Default Search Engine-ஆ இருக்கலாம் என்று நீதிமன்றம் அனுமதித்தாலும், அந்த Agreement முழுமையாக Exclusive ஆக இருக்கக்கூடாது என்றும் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அதனால் Apple மற்ற Search Engine அல்லது AI Search Services-ஐ promote செய்ய முடியும்.
அதோட இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், Google-ன் பணத்தை வாங்கிக்கொண்டே இருந்தாலும் Apple தன்னுடைய Users Google-ஐ விட்டு Chrome-க்கு போகிறார்களா, அல்லது Google App-ஐ பயன்படுத்த ஆரம்பிக்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டிய நிலை இருக்கிறது.
ஏன்னா Google Search Safari-க்குள் நடக்கும்போது Apple-க்கும் Revenue கிடைக்கிறது. அதே User Chrome அல்லது Google App-க்கு போயிட்டா அந்த Search Traffic எப்படி கணக்காகிறது, Apple-க்கு அதில் எவ்வளவு Revenue கிடைக்கிறது என்பதும் முக்கியமான விஷயம். Apple, Google-க்கு இடையிலான இந்த Revenue Sharing குறித்து ஏற்கனவே Regulators விசாரணை செய்து இருக்கிறார்கள்.
சரி இப்ப Apple Test பண்ணிட்டு இருக்குற இந்த Feature iOS 27.2 வந்தவுடன் எல்லாருக்கும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இது தற்போது Beta-வில் இருக்கும் Code மட்டுமே. Apple இதை Final Version-ல் கொண்டு வராமல் கூட இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.h பண்ணுற ஒரு விஷயத்துக்கு பின்னாடி கூட Apple, Google மாதிரியான பெரிய நிறுவனங்களுக்கு இடையில் பல Billion Dollar Business நடந்து கொண்டிருக்கிறது.
ஒரு பக்கம் Google, Safari-ல் Default Search Engine-ஆ இருக்க Apple-க்கு பணம் கொடுக்கிறது. இன்னொரு பக்கம் Google-வே Safari Users-ஐ Chrome மற்றும் Google App பக்கம் கொண்டு வர முயற்சி செய்கிறது.
இதையெல்லாம் Apple இப்போது கவனிக்க ஆரம்பிச்சிருக்கிறது. பொறுத்து இருந்து பார்ப்போம், இந்த புதிய Tracking Feature-ஐ Apple Final iOS Version-ல் கொண்டு வருகிறதா என்று.