Xல ஏதாவது ஒரு Profile பார்க்கணும் அப்டினா இப்ப Login பண்ண சொல்லி நிறைய இடத்துல கேக்கும். குறிப்பாக நமக்கு ஒரு குறிப்பிட்ட Person அல்லது ஒரு Companyயோட Profile மட்டும் பார்க்கணும் அதுக்காக எதுக்கு Account Create பண்ணணும் என்று நினைக்கிறவங்களுக்கு இந்த Website பயனுள்ளதாக இருக்கும். அதுதான் Twitter Viewer.
Twitter Viewer அப்டினு இருக்குற இந்த Website மூலமாக Xல இருக்கும் Public Profile மற்றும் Tweets எல்லாவற்றையும் எந்த ஒரு Account Loginம் இல்லாமல் பார்க்க முடியும். அதோட ஒரு குறிப்பிட்ட Tweetஐ தனியாக Open பண்ணி அதுல இருக்கும் Media மற்றும் Engagement Details எல்லாமே பார்க்க முடியும்.
சரி இதை எப்படி பயன்படுத்துவது அப்டினு பார்த்தோம்னா ரொம்ப Simple தான். முதலில் Twitter Viewer Websiteக்கு போக வேண்டும். அங்கே ஒரு Search Box இருக்கும் அதுல நாம பார்க்க வேண்டிய Twitter Username அல்லது Profile Linkஐ கொடுக்கலாம். உதாரணத்திற்கு @elonmusk என்று கொடுத்தாலும் சரி அல்லது X Profileல இருக்குற Linkஐ Copy பண்ணி Paste பண்ணினாலும் சரி. அதன் பிறகு View Profile கொடுத்தால் அந்த Public Profile நமக்கு காட்டப்படும்.
அந்த Profileல அவர்களுடைய Bio, Profile Picture, Banner, Followers போன்ற Account Details அதோட சமீபத்தில் அவர்கள் போட்ட Tweets போன்றவற்றை பார்க்க முடியும். அதனால் ஒரு Person அல்லது Company என்ன மாதிரியான Content Post பண்ணிக்கிட்டு இருக்காங்க அப்டினு Login பண்ணாமலேயே பார்க்க முடியும்.
இன்னொரு முக்கியமான Feature Tweet Viewer. நமக்கு ஒரு குறிப்பிட்ட Tweet மட்டும் பார்க்கணும் அப்டினா அந்த Tweetஐ Open பண்ணி அதன் URLஐ Copy பண்ணிக்கொள்ள வேண்டும். அந்த Linkஐ Twitter Viewer Websiteல கொடுத்தால் அந்த Tweetஐ தனியாக பார்க்க முடியும். அதுல Tweet Content மட்டும் இல்லாமல் அதோட Engagement Numbers மற்றும் Attach பண்ணி இருக்குற Images, Videos, GIFs போன்ற Mediaவையும் பார்க்க முடியும்.
அதோட இந்த Mediaகளை Download பண்ணிக்கொள்ளும் Optionம் இருக்கு. உதாரணத்திற்கு Xல ஒரு Video பார்த்தோம், அது நமக்கு தேவைப்படுகிறது ஆனால் அதை Download பண்ணுவதற்கு Login அல்லது வேறு ஒரு App பயன்படுத்த விரும்பவில்லை அப்டினா Tweet Viewer மூலமாக அந்த Tweet Linkஐ கொடுத்து Mediaவை Save பண்ணிக்கொள்ளலாம். சரி இந்த Website நமக்கு எதுக்கு useful அப்டினு பார்த்தோம்னா. உதாரணத்திற்கு ஒரு Company அல்லது ஒரு Content Creator பற்றி Research பண்ணுறோம் அப்டினா அவர்களுடைய Profile மற்றும் Recent Postsஐ சுலபமாக பார்க்க முடியும்.
அதேபோல Journalists, Researchers, Content Creators போன்றவர்களுக்கும் இது Useful ஆக இருக்கும் என்று சொல்லலாம். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட Tweetஐ Reference பண்ண வேண்டும் அல்லது ஒரு Tweetல இருக்கும் Image அல்லது Videoவை பார்க்க வேண்டும் என்றால் ஒவ்வொரு முறையும் X Accountக்குள் Login பண்ண வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் இங்கே ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் வைக்க வேண்டும். இது Public Contentஐ பார்க்க பயன்படும் Website மட்டுமே. Private அல்லது Protected Accountல இருக்கும் Tweetsஐ எந்த ஒரு Legitimate Viewer மூலமாகவும் பார்க்க முடியாது.
மொத்தமாக பார்த்தால் X Account இல்லாமல் ஒரு Public Profile பார்க்க வேண்டும், ஒரு குறிப்பிட்ட Tweetஐ Login இல்லாமல் Open பண்ண வேண்டும் அல்லது Public Tweetல இருக்கும் Image, Video போன்ற Mediaவை Save பண்ண வேண்டும் என்றால் Twitter Viewer ஒரு Simple ஆன Website ஆக இருக்கும். குறிப்பாக X Account இல்லாதவர்களுக்கு அல்லது ஒரு தகவலை மட்டும் Quickஆ பார்க்க வேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு Useful ஆக இருக்கும்.