Motorola போனில் இனி GrapheneOS!

Motorola போன்ல இனிமேல் Google இல்லாமல் பயன்படுத்த முடியுமா? அதுவும் GrapheneOS மூலமாக. சமீபத்தில் Motorola மற்றும் GrapheneOS இணைந்து வேலை செய்யப்போறாங்க என்ற செய்தி வந்த பிறகு இதை பற்றி நிறைய பேர் பேச ஆரம்பிச்சிட்டாங்க. சரி என்ன GrapheneOS, Motorola ஏன் இதை கொண்டு வராங்க, இது எப்ப வரும், நம்மை போன்ற சாதாரண Userகளுக்கு இது உண்மையிலேயே Usefulஆ இருக்குமா அப்டினு சுருக்கமாக பார்க்கலாம்.

முதலில் GrapheneOS அப்டினா என்ன அப்டினு பார்த்தோம்னா இது Android அடிப்படையில உருவாக்கப்பட்ட ஒரு Open Source Operating System. ஆனால் சாதாரண Android போல Google Services எல்லாமே Defaultஆ இதில் இருக்காது. Privacy மற்றும் Securityக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட OS தான் GrapheneOS.

இப்ப வரைக்கும் GrapheneOS அதிகாரப்பூர்வமாக Google Pixel போன்களில் தான் பயன்படுத்த முடியும். காரணம் ஒரு OSஐ ஒரு Phoneல Install பண்ணுறது மட்டும் கிடையாது அதற்கு தேவையான Hardware, Firmware, Security Features எல்லாமே சரியாக இருக்கணும். அதனால தான் GrapheneOS எந்த Phone வேண்டும்னாலும் Support பண்ணுறது இல்லை.

சரி இப்ப Motorola ஏன் இதுல வந்தாங்க அப்டினு பார்த்தோம்னா Privacy மற்றும் Security சம்மந்தமான விஷயங்களில் Motorola மற்றும் GrapheneOS இணைந்து வேலை செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. இதுல Motorolaவும் GrapheneOSஐ தங்களுடைய எதிர்கால Phonesக்கு கொண்டு வருவதற்கு தேவையான Development வேலைகளில் ஒரு பெரிய பகுதியை செய்து கொண்டு இருக்காங்க.

ஆனால் இது உடனே நம்முடைய Motorola Phoneக்கு Update மூலமாக GrapheneOS வந்துடும் என்று நினைக்காதீங்க. தற்போதைய தகவல்படி GrapheneOS Support கொண்ட Motorola Phones 2027 Lineupல தான் வரப்போகுது. அதுவும் முதலில் Foldable இல்லாத Phonesல Support கொடுக்க திட்டமிட்டு இருக்காங்க. அதன் பிறகு Razr Fold மற்றும் Razr Ultra போன்ற Foldable Phonesக்கும் கொண்டு வர முயற்சி செய்து கொண்டு இருக்காங்க. தற்போதைய Motorola Phones GrapheneOS-க்கான தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்று GrapheneOS தரப்பில் சொல்லி இருக்காங்க.

சரி ஏன் GrapheneOS இவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது அப்டினு பார்த்தோம்னா இதுக்கு முக்கிய காரணம் DeGoogle. நாம Android Phone வாங்குனோம் அப்டினா Google Search, Google Play Services, Google Play Store என நிறைய Google Services Operating Systemக்குள்ளேயே முக்கியமான ஒரு பகுதியாக இருக்கும். ஆனால் GrapheneOSல Google Apps மற்றும் Services Defaultஆ இருக்காது. இதன் மூலமாக Google Servicesஐ பயன்படுத்தாமல் Phoneஐ இயக்க முடியும். அதே நேரத்தில் உங்களுக்கு Google Play Store தேவைப்பட்டால் அதையும் Install பண்ணிக்கொள்ள முடியும். ஆனால் இங்க ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கு.

GrapheneOSல Google Play Servicesக்கு சாதாரண Android Phoneல கிடைக்குற மாதிரி Special Permission கிடையாது. அது ஒரு சாதாரண App போல Sandboxக்குள்ள தான் இயங்கும். அதனால் Google Services பயன்படுத்தினாலும் அது Operating System முழுவதற்கும் அந்தளவுக்கு Access வைத்திருக்காது.

அதோட Appsக்கு Network Access கூட தனித்தனியாக Control பண்ண முடியும். அதாவது ஒரு Applicationக்கு Internet Access தேவையில்லை அப்டினா அதை Block பண்ணலாம். Location, Sensors போன்ற Permissionsல கூட கூடுதல் Control கிடைக்கும். இதெல்லாம் Privacyயை கொஞ்சம் Seriousஆ எடுத்துக்கொள்பவர்களுக்கு ரொம்ப Usefulஆ இருக்கும்.

சரி இவ்வளவு சொல்றீங்களே இது நம்மை போன்ற Normal Userக்கு Usefulஆ அப்டினு கேட்டால் நிச்சயமாக சில விஷயங்களில் Useful தான். குறிப்பாக நம்முடைய Data எந்தெந்த Appsக்கு போகுது, எந்த Appக்கு Internet Access இருக்கு, Google Services எவ்வளவு Access வைத்திருக்கிறது போன்ற விஷயங்களை Control பண்ண விரும்புறவங்களுக்கு இது நல்ல Option.

ஆனால் எல்லாருமே உடனே GrapheneOSக்கு மாறணும் என்று சொல்ல முடியாது. ஏன்னா நாம தினமும் பயன்படுத்துற சில Apps Google Play Servicesஐ நம்பி இருக்கும். அப்படிப்பட்ட Appsல சில Features அல்லது Notifications சரியாக வேலை செய்யாமல் இருக்கலாம். GrapheneOS இதற்காக Sandboxed Google Play கொடுத்திருக்கிறது என்றாலும், Google இல்லாத Android Experienceக்கு முழுமையாக மாறுவது சில Usersக்கு மட்டும் தான் தேவையாக இருக்கும்.

என்னை பொறுத்தவரைக்கும் Motorola மற்றும் GrapheneOS இணைப்பு ஒரு பெரிய விஷயம். காரணம் இதுவரைக்கும் GrapheneOS பயன்படுத்தணும்னா பெரும்பாலும் Pixel Phone தான் முக்கியமான Optionஆ இருந்தது. இனிமேல் Motorola போன்ற இன்னொரு பெரிய Smartphone Brandல இருந்து இதற்கான Official Support வருவது Privacy மற்றும் Open Source Communityக்கு நல்ல விஷயம் தான்.

ஆனால் இதெல்லாம் எப்போது நம்ம கைக்கு வரும் அப்டினு பார்த்தோம்னா 2027 வரைக்கும் Wait பண்ண வேண்டியது தான். அதுவும் முதலில் எந்த Motorola Modelல வரும், எந்த Processor பயன்படுத்தும் Phones Support பண்ணும் என்பதெல்லாம் அந்தந்த Device Launch ஆகும்போது தான் முழுமையாக தெரியவரும். இப்போதைக்கு Current Generation Motorola Phonesக்கு GrapheneOS வரும் என்று எதிர்பார்க்க முடியாது.

பொறுத்து இருந்து பார்ப்போம்.

Leave a comment