இனி iosல் Ads இல்லை Mozillaவின் புதிய அப்டேட்

Firefox Browser பற்றி நிறைய பேருக்கு தெரியும், குறிப்பாக Privacyக்கு முக்கியத்துவம் கொடுக்குற ஒரு Browser அப்டினு சொன்னா Firefox தான் முதல்ல ஞாபகத்துக்கு வரும். இப்ப சமீபத்தில் iPhoneல Firefox பயன்படுத்துறவங்களுக்கு ஒரு புதிய Ad Blocking Feature கொடுக்க ஆரம்பிச்சு இருக்காங்க. சரி இதுல என்ன பெரிய விஷயம் அப்டினு பார்த்தோம்னா நாம இணையத்தளத்துக்கு போகும்போது வரக்கூடிய பல Adsஐ Firefox நேரடியாக Block பண்ணிடும்.

அதுவும் இது வெறும் Pop-up Ads மட்டும் Block பண்ணுறது கிடையாது, Third-party Advertising Networks, Ad-related Trackers, Websiteல வரக்கூடிய பல Third-party Ads மற்றும் Pop-ups, Overlays மாதிரியான Intrusive Ads எல்லாமே Block பண்ணும். இதை Firefox iOSல Ad Blocker மூலமாக Enable பண்ணிக்கொள்ளலாம்.

சரி அப்ப Firefox பயன்படுத்தினா எல்லா Ads-ம் Block ஆகிடுமா அப்டினு பார்த்தோம்னா அப்படி கிடையாது. இதுதான் இங்க முக்கியமான விஷயம். Firefox கூட எல்லா Ads-ஐயும் Block பண்ணவில்லை என்று தெளிவாக சொல்லி இருக்காங்க.

உதாரணத்துக்கு நாம Googleல ஏதாவது Search பண்ணும்போது மேல வரக்கூடிய Sponsored Search Ads எல்லாம் Block ஆகாது. அதேபோல Bing, DuckDuckGo போன்ற Search Engineகளில் வரும் Search Ads-ம் Block ஆகாது. Firefox Home அல்லது New Tab Pageல Mozilla காட்டும் Sponsored Content கூட Block ஆகாது.

இதற்கு காரணம் Websites ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான Advertising Technology பயன்படுத்துறாங்க. Firefox பயன்படுத்துற Filter Listல இருக்கும் Advertising Networks மற்றும் Ads Block ஆகும், ஆனால் அந்த Filter Listல இல்லாத சில Ads நமக்கு தொடர்ந்து தெரியலாம்.

இன்னொரு விஷயம் என்ன அப்டினு பார்த்தோம்னா இந்த Ad Blocking Feature தற்போது எல்லாருக்கும் ஒரே நேரத்தில் கிடைக்கவில்லை. Mozilla இதை Progressive Rollout மூலமாக Usersக்கு கொண்டு வந்து இருக்காங்க. அதோட இந்த Feature தற்போது Experimental ஆகவும் இருக்கிறது.

சரி இப்பதான் முக்கியமான கேள்வி. Firefox நமக்கு Freeஆ Browser கொடுக்குது, அதோட Adsஐயும் Block பண்ணுது. அப்ப Mozilla எப்படி சம்பாதிக்குது? இதுதான் Mozillaவோட Business Model கொஞ்சம் Interestingஆ இருக்குற இடம்.

நாம Firefox Install பண்ணி பயன்படுத்துறோம் பார்த்திங்களா, அதுல Search பண்ணுவதற்கு ஒரு Default Search Engine இருக்கும். அந்த Search Engine Partnership மூலமாக Mozilla Revenue சம்பாதிக்குது. Mozilla தானே சொல்லி இருக்குற தகவல்படி, Mozilla Corporationக்கு கிடைக்குற Revenueல பெரும்பகுதி Firefox Browserல இருக்கும் Search Partnerships மற்றும் Distribution Deals மூலமாக கிடைக்கிறது.

இன்னும் புரியும் வகையில் சொல்லணும் அப்டினா Google, Microsoft போன்ற Search நிறுவனங்களோடு Mozilla Partnership வைத்திருக்கிறது. Firefox பயன்படுத்துற Users Search பண்ணும்போது அந்த Search Engine வழியாக Search நடக்கும். இந்த Partnership மற்றும் அதனுடன் தொடர்புடைய Royalties தான் Mozillaவோட முக்கியமான Revenue Sourceகளில் ஒன்று.

அதனால Firefox ஒரு Free Browserன்னு சொன்னாலும் Mozillaக்கு அதிலிருந்து Revenue வரவில்லை என்று அர்த்தம் கிடையாது. அதோட Mozilla Search Revenue மட்டும் நம்பி இருக்காமல் VPN, Relay, Monitor போன்ற Paid Products மூலமாகவும் Revenue உருவாக்கிட்டு இருக்காங்க. Mozillaவோட Annual Reportல கூட Search Revenueவைத் தாண்டி புதிய Products மற்றும் வேறு Business Models மூலமாக Revenue-ஐ Diversify பண்ண வேண்டும் என்று சொல்லி இருக்காங்க.

அதோட Mozilla Privacy-friendly Advertising Technologyலயும் வேலை செய்து கொண்டு இருக்காங்க. அதாவது Ads காட்டவே கூடாது என்பது Mozillaவோட முழுமையான Business Model கிடையாது. User Dataவை தனிப்பட்ட முறையில் Track பண்ணாமல் Ads காட்ட முடியுமா என்பதையும் அவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

அதனால Firefox பயன்படுத்தும்போது Ads எல்லாமே மறைந்து போயிடும் என்று நினைக்க வேண்டாம். குறிப்பாக Google Search மாதிரியான இடங்களில் Search Ads தொடர்ந்து வரலாம். ஆனால் பல Third-party Ads மற்றும் Tracking Infrastructureஐ குறைக்க இந்த Feature உதவும்.

Leave a comment