மீண்டும் நீக்கப்பட்ட Bitchat Privacy Messaging Applicaiton

நம்மில் பலரும் WhatsApp, Telegram போன்ற Messaging Application-களை பயன்படுத்தி வருகிறோம். ஆனால், இவை எல்லாமே Internet மூலமாகத்தான் இயங்கும். ஒருவேளை Internet இல்லையென்றால் நம்மால் யாருக்கும் Message அனுப்ப முடியாது. ஆனால், Internet இல்லாமலேயே Message அனுப்பக்கூடிய ஒரு Application தான் Bitchat.

Twitter-ன் முன்னாள் CEO மற்றும் இணை நிறுவனர் Jack Dorsey உருவாக்கிய இந்த Bitchat Application தற்போது இந்தியாவில் App Store மற்றும் Google Play Store-ல் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது. இதற்கு இந்திய அரசாங்கம் பிறப்பித்த உத்தரவு தான் காரணம்.சரி, எதற்காக இந்த Application-ஐ இந்திய அரசு நீக்க சொல்லி இருக்கிறது என்று பார்க்கலாம்.Bitchat என்பது Internet Connection இல்லாமலேயே அருகில் இருக்கிற மற்றவர்களுக்கு Message அனுப்ப உதவும் ஒரு Messaging Application. குறிப்பாக, Internet Shutdown செய்யப்பட்ட இடங்களிலும் இதன் மூலமாக தொடர்பில் இருக்க முடியும்.

கடந்த ஜூலை மாதம் டெல்லியில் நடைபெற்ற போராட்டங்களின்போது Internet சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அந்த நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் Bitchat போன்ற Offline Messaging Application-களை பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து இந்திய அரசின் Cyber Crime பிரிவான I4C, Bitchat தொடர்பான GitHub Repositories-ஐ நீக்குமாறு உத்தரவிட்டது.

தற்போது அக்டோபர் 3ஆம் தேதி Jack Dorsey தனது X கணக்கில் வெளியிட்ட தகவலின்படி, இந்திய அரசு Bitchat-ஐ Apple App Store-ல் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளது. இந்த முறை Ministry of Electronics and Information Technology (MeitY), Information Technology Act-ன் Section 69A-ன் கீழ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், Internet சேவைகள் முடக்கப்பட்டாலும் Bitchat மூலமாக தொடர்ந்து தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும். ஆனால், Bitchat-ஐ நீக்குவதற்கான முழுமையான காரணத்தை இந்திய அரசு இதுவரை வெளிப்படையாக விளக்கவில்லை.

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், Bitchat ஒரு Open Source Application. இதன் Source Code-ஐ யார் வேண்டுமானாலும் பார்க்கவும் பயன்படுத்தவும் முடியும்.

TWICE WEEKLY

Tech Updates, Twice a Week

Get our latest tech reviews, guides, and industry news — delivered twice a week, straight to your inbox.

2 emails a week. Unsubscribe anytime.

Leave a comment