இந்தியாவிற்கு வந்தது ChatGpt Ads

ChatGPT பயன்படுத்தும் போது இனிமேல் Ads வருமா அப்டினு சில பேர் கேட்க ஆரம்பிச்சு இருப்பிங்க. காரணம் இப்ப OpenAI இந்தியாவிலும் ChatGPT Ads-ஐ கொண்டு வந்து இருக்காங்க. அதாவது இதுவரைக்கும் ChatGPT-யை Free-யாக பயன்படுத்திட்டு இருந்தோம், ஆனால் இனிமேல் நாம ChatGPT பயன்படுத்தும்போது சில Ads நமக்கு காட்டப்படும். முதலில் இந்த Ads எப்ப வந்தது அப்டினு பார்த்தோம்னா OpenAI இதை முதலில் அமெரிக்காவில் February 9, 2026 அன்று test பண்ண ஆரம்பிச்சாங்க. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வேறு நாடுகளுக்கும் கொண்டு வந்தாங்க. இப்ப இந்தியாவிலும் ChatGPT Ads rollout ஆகி இருக்கு. OpenAI-ன் தகவல்படி August 31 முதல் இந்தியாவில் advertisers-க்கு ChatGPT Ads platform கிடைக்க ஆரம்பிச்சு இருக்கு.

சரி Ads யாருக்கெல்லாம் வரும் அப்டினு பார்த்தோம்னா முக்கியமா Free மற்றும் Go Plan பயன்படுத்துற users-க்கு தான் Ads வரலாம். Plus, Pro, Business, Enterprise மற்றும் Edu users-க்கு Ads கிடையாது. அதோட 18 வயதுக்கு கீழ் இருக்குற users-க்கும் Ads காட்டப்படாது என்று OpenAI சொல்லி இருக்காங்க. இந்த Ads எங்க வரும் அப்டினு பார்த்தோம்னா நாம ChatGPT-க்கு ஒரு கேள்வி கேட்டு அதற்கான Answer வந்த பிறகு, அந்த Answer-க்கு கீழே Sponsored என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு Ad வரலாம். அதாவது நம்ம கேள்விக்கு ChatGPT கொடுக்குற Answerக்குள்ளேயே ஒரு நிறுவனத்தோட விளம்பரத்தை சேர்த்து Answer மாதிரி காட்டப்போறது கிடையாது.

இது தான் OpenAI சொல்லி இருக்குற முக்கியமான விஷயம். Ads மற்றும் ChatGPT Answer இரண்டும் தனித்தனியாக இயங்கும் என்று சொல்லி இருக்காங்க. அதாவது ஒரு நிறுவனம் பணம் கொடுத்து அவங்களோட Product-ஐ ChatGPT Recommendation-ல் மேலே கொண்டு வர முடியாது. Advertisers-க்கும் நம்ம Private Conversations-க்கு access கிடையாது என்று OpenAI தெரிவித்து இருக்காங்க

முதலில் ChatGPT பயன்படுத்தும்போது Ads வருவது சில பேருக்கு annoying ஆக இருக்கலாம். குறிப்பாக ஒரு முக்கியமான விஷயத்தை ChatGPT-கிட்ட கேட்டுக்கொண்டு இருக்கும்போது அதற்கு கீழே Advertisement வருவது மற்ற Websites-ல் இருப்பது போல பெரிய பிரச்சனை இல்லையென்றாலும், ChatGPT experience-ஐ கொஞ்சம் மாற்றும்.

அடுத்தது Privacy பற்றிய கேள்வி. நாம ChatGPT-கிட்ட கேட்குற கேள்விகளை வைத்து Ad காட்ட ஆரம்பிச்சா என்ன ஆகும் என்ற சந்தேகம் வருவது இயல்புதான். ஆனால் OpenAI-ன் தற்போதைய policy-படி advertisers-க்கு நம்ம conversations கொடுக்கப்படாது என்றும், Ads ChatGPT Answer-ஐ influence செய்யாது என்றும் சொல்லி இருக்காங்க. அதோட Ad personalization-ஐ control செய்யும் options-ம் users-க்கு கொடுக்கப்பட்டு இருக்கு.

இன்னொரு முக்கியமான விஷயம் என்ன அப்டினா Free users-க்கு Ads வேண்டாம் என்றால் அதற்கும் ஒரு Option இருக்கு. Free Plan-லேயே Ads-Free experience-க்கு switch பண்ண முடியும். ஆனால் அதற்கு பதிலாக Usage Limits குறையும், சில Features-ம் கிடைக்காமல் போகலாம். அதாவது Ads வேண்டாம் என்றால் குறைவான usage, Ads பார்த்தால் அதிகமான access என்ற மாதிரியான Trade-off இருக்கு.

இப்ப ChatGPT Ads OpenAI-க்கு எவ்வளவு முக்கியம் ஆகி இருக்கு அப்டினு பார்த்தோம்னா அது கொஞ்சம் பெரிய விஷயம் தான். OpenAI சொல்ற தகவல்படி ChatGPT Ads launch ஆன 200 நாட்களுக்குள்ளேயே Annualized Revenue Run Rate 1 Billion Dollar-ஐ தாண்டி இருக்கு. அதோட 40-க்கும் அதிகமான நாடுகளில் ChatGPT Ads available ஆகி இருக்கு.

TWICE WEEKLY

Tech Updates, Twice a Week

Get our latest tech reviews, guides, and industry news — delivered twice a week, straight to your inbox.

2 emails a week. Unsubscribe anytime.

Leave a comment