GTA 6 பெயரில் நடக்கும் பெரிய Scam

GTA 6 இன்னும் Release ஆகவில்லை ஆனால் அதற்கு முன்னாடியே GTA 6 பெயரை வைத்து ஒரு பெரிய Scam நடந்து கொண்டிருக்கிறது, அதுவும் சாதாரண Scam இல்லை நம்மளோட Password தொடங்கி Browserல Save பண்ணி வச்சு இருக்குற Data வரைக்கும் திருடக்கூடிய Malware மூலமா இந்த Scam நடக்குது. சரி GTA 6-ஐ வைத்து என்ன Scam நடக்குது அதோட ஏன் Hackers GTA 6-ஐ Target பண்ணுறாங்க அப்டினு பார்க்கலாம்.

முதலில் இந்த Scam எப்படி நடக்குது அப்டினு பார்த்தோம்னா GTA 6-க்கு Officialஆ எந்த ஒரு Demo-வும் கிடையாது, அதே போல Early Access அல்லது Beta Version என்று பொதுவாக Download பண்ணுவதற்கும் எதுவும் கிடையாது. ஆனால் Googleல GTA 6 Demo, GTA 6 PC Download, GTA 6 Early Access அப்டினு Search பண்ணும்போது ஒரு சில Fake Website எல்லாம் வருது. அதுவும் பார்க்குறதுக்கு அப்படியே Rockstar Games Website மாதிரியே இருக்கும்.

அதுல GTA 6-ஐ Download பண்ணலாம், Play Now கொடுத்தா Game Open ஆகும், Early Access கிடைக்கும் அப்டினு எல்லாம் சொல்லி இருப்பாங்க. அதுல Download கொடுத்தா ஒரு Installer Download ஆகும், ஆனால் அது GTA 6 Game கிடையாது. Malware.

சமீபத்தில் Malwarebytes கண்டுபிடித்த ஒரு Scam Websiteல gta6_installer.exe என்ற ஒரு File Download ஆகி இருக்கு. அது Game Demo கிடையாது, நம்முடைய Browserல இருக்கும் Password, Cookies, Login Session போன்ற தகவல்களை திருடுற Information Stealer Malware. இன்னும் சொல்லப்போனால் நாம ஒரு Websiteல Login பண்ணி வைத்து இருந்தால் அதற்கான Session Cookie கூட திருடப்பட்டால் சில நேரங்களில் Password கொடுக்காமலேயே அந்த Accountக்குள் Login பண்ண முடியும். அதனால் Two Factor Authentication Enable பண்ணி இருந்தாலும் சில சூழ்நிலைகளில் அது மட்டும் போதுமான பாதுகாப்பாக இருக்காது.

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு விதமான Scam கூட நடந்து இருக்கு. அதாவது GTA 6 Early Access வாங்கலாம் அப்டினு சொல்லி சில Websiteல $250 வரைக்கும் பணம் கேட்டு இருக்காங்க. அதுவும் சாதாரண Payment இல்லாமல் Bitcoin, USDT, Ethereum மாதிரியான Cryptocurrencyல Payment செய்ய சொல்லி இருக்காங்க. Payment பண்ணிய பிறகு ஒரு Payment Code கொடுத்து Download செய்யலாம் அப்டினு சொல்லுவாங்க ஆனால் உண்மையில் அங்க எந்த Game-மும் இருக்காது.

சரி Hackers ஏன் GTA 6-ஐ வைத்து இந்த மாதிரி Scam பண்ணுறாங்க அப்டினு பார்த்தோம்னா அதற்கு முக்கியமான காரணம் GTA 6 மேல இருக்குற மிகப்பெரிய Hype தான். GTA 5 வெளிவந்து கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு பிறகு GTA 6 வரப்போகுது. அதோட Game பல முறை Delay ஆனதாலும், ஒவ்வொரு புதிய Trailer அல்லது Update வந்தாலும் Internetல மிகப்பெரிய அளவுக்கு Attention கிடைக்குது. அதனால GTA 6 சம்மந்தமாக ஒரு புதிய செய்தி வந்தாலே அதை பார்க்கவும், Download பண்ணவும் நிறைய பேர் உடனே முயற்சி பண்ணுவாங்க. Hackersக்கு இதுதான் சரியான வாய்ப்பு.

இன்னும் புரியும் வகையில் சொல்லணும்னா ஒரு சாதாரண Malware Fileயை யாராவது Download பண்ண வைக்கணும்னா அதற்கு ஒரு காரணம் தேவைப்படும். ஆனால் GTA 6 அப்டினு Fileக்கு பெயர் வைத்துட்டு GTA 6 Demo, GTA 6 Leaked Version, GTA 6 Early Access அப்டினு சொன்னால் அதை Download பண்ணுவதற்கு மக்கள் தானாகவே தயாராக இருக்காங்க.

அதோட இப்ப GTA 6 தொடர்பான உண்மையான தகவல்களும், Leaks-ம் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் GTA 6 Gameplay Footage மற்றும் Game தொடர்பான சில தகவல்கள் Leak ஆனதையடுத்து Fake GTA 6 Files பரவுவதற்கும் இது இன்னும் நல்ல வாய்ப்பாக மாறி இருக்கு. ஒரு சில இடங்களில் 113GB GTA 6 ISO என்று கூட ஒரு File பரவி இருக்கு. அதை ஆய்வு செய்தவர்கள் அது உண்மையான Game Build இல்லை, Malware மறைத்து வைக்கப்பட்ட Fake File என்று தெரிவித்திருக்காங்க.

அதனால் இப்போது GTA 6 பெயரில் வரும் எந்த ஒரு Download Link-ஐயும் நம்பக்கூடாது. குறிப்பாக GTA 6 PC Version, Android APK, Beta, Demo, Early Access என்று ஏதாவது வந்தால் இன்னும் கவனமாக இருக்கணும். Rockstar அதிகாரப்பூர்வமாக வெளியிடாத ஒரு Fileயை Download பண்ணுவதால் Game கிடைக்காமல் நம்முடைய Data மட்டும் Hackersக்கு போகலாம். GTA 6 அதிகாரப்பூர்வமாக November 19, 2026 அன்று PS5 மற்றும் Xbox Series X|Sக்கு Release ஆகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கு. அதுவரைக்கும் GTA 6 பெயரில் வரும் Early Access, Demo, Leaked Build என்று எதையும் Download பண்ணாமல் இருக்கிறது தான் பாதுகாப்பானது.

ஒரு Gameக்காக இவ்வளவு பெரிய Scam நடக்குறதுக்கு முக்கியமான காரணம் அந்த Game எவ்வளவு பெரிய Hype உருவாக்கி இருக்கிறது என்பதுதான். GTA 6-ஐ Hackers Target பண்ணுறாங்க என்று சொல்வதை விட GTA 6 மீது இருக்கும் நம்முடைய ஆர்வத்தையே Hackers Target பண்ணுறாங்க என்று சொன்னால் தான் சரியாக இருக்கும்.

Leave a comment