நாம X-ல ஏதாவது ஒரு Post போடுறோம் அப்டினா அது நம்ம Followers-க்கு போகணும், அதேபோல அதிகமான பேருக்கு அது சென்றடையணும் என்று தான் எதிர்பார்ப்போம். ஆனால் சில நேரங்களில் நாம Post பண்ணியிருந்தாலும் அது சரியாக Reach ஆகாமல் இருக்கலாம்.
இதற்கு முன்னாடி இதுபோல நடந்தால் X நம்முடைய Post-ஐ ஏதாவது ஒரு காரணத்துக்காக Downrank பண்ணி இருக்குமா, அதாவது நம்ம Post-ஐ குறைவான பேருக்கு காட்டுகிறார்களா என்று நம்மால் தெரிந்து கொள்ள முடியாது. அதனால் தான் பல பேர் தங்களுடைய Account-ஐ X Shadow ban பண்ணிவிட்டதாக கூட சொல்லி வந்தார்கள்.
இப்ப இதற்கெல்லாம் ஒரு அளவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக X ஒரு புதிய Update கொண்டு வந்திருக்கிறது.
Under The Hood
X ஏற்கனவே Under The Hood என்ற ஒரு Transparency Feature-ஐ அறிமுகப்படுத்தி இருந்தது. இதன் மூலமாக நம்முடைய Account அல்லது Posts-க்கு X ஏதாவது Labels கொடுத்திருக்கிறதா, அது நம்முடைய Post-ன் Visibility-ஐ பாதித்திருக்கிறதா போன்ற தகவல்களை பார்க்க முடியும். இப்போது இதில் இன்னொரு முக்கியமான தகவலையும் X சேர்த்திருக்கிறது.
அதாவது, ஒரு நாட்டில் இருக்கும் Local Law-ஐ X Follow பண்ண வேண்டிய கட்டாயம் காரணமாக உங்களுடைய Post-ஐ Downrank செய்திருந்தாலோ அல்லது அந்த Post-ஐ குறிப்பிட்ட ஒரு நாட்டில் மட்டும் பார்க்க முடியாதபடி செய்திருந்தாலோ இனி அந்த தகவலும் உங்களுக்கு தெரிய வரும்.
அதோட எந்த Post-க்கு இந்த restriction கொடுக்கப்பட்டது, எந்த நாட்டிலிருந்து அந்த Legal Request வந்தது போன்ற தகவல்களும் இந்த Data-வில் இருக்கும்.
ஏன் Government ஒரு Post-ஐ Remove செய்ய சொல்லும்?
Hate Speech, Terrorism தொடர்பான Content, Election Rules போன்ற சட்டங்களின் அடிப்படையில் ஒரு Post-ஐ Remove செய்யவோ அல்லது குறிப்பிட்ட நாட்டில் அந்த Post-ன் Visibility-ஐ குறைக்கவோ Government ஒரு Social Media நிறுவனத்திடம் கேட்கலாம்.
அப்படி Government-ல் இருந்து வரும் Legal Request-ஐ X ஏற்றுக்கொண்டு ஒரு Post-ஐ குறிப்பிட்ட நாட்டில் மட்டும் Restrict செய்தால், இனி அதை User-களிடமிருந்து மறைக்காமல் அந்த தகவலை Under The Hood மூலம் காட்டப் போகிறது.
இதை எப்படி பார்க்கலாம்?
X App-ல் இருக்கும் Under The Hood Option மூலமாக இந்த தகவல்களை பார்க்க முடியும். இதற்காக X உங்களுடைய கடந்த கால Account மற்றும் Post தொடர்பான சில தகவல்களை ஒரு JSON File ஆக Download செய்யும் வசதியை கொடுக்கிறது.
இந்த Feature-ஐ பயன்படுத்துவதற்கு அந்த மாதத்தில் குறைந்தது 10 Posts செய்திருக்க வேண்டும் என்றும் X-ன் தற்போதைய system குறிப்பிடுகிறது. Technical விஷயங்கள் தெரியாதவர்கள் கூட அந்த JSON File-ஐ ஏதாவது ஒரு AI Chatbot-ல் கொடுத்து அதில் என்ன இருக்கிறது என்று எளிமையாக புரிந்து கொள்ளலாம். முக்கியமாக, Government Request காரணமாக உங்களுடைய Account அல்லது Post-ன் Visibility குறைக்கப்பட்டிருந்தால் அதுவும் இனி அந்த தகவலில் தெரியும்.
முன்னாடி ஒரு Post-க்கு Reach குறைந்தால் உண்மையில் என்ன காரணம் என்று நமக்கு தெரியாது. ஆனால் இப்போது குறைந்தபட்சம் Government-ன் Legal Request காரணமாக அந்த Post-க்கு restriction கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். X ஏற்கனவே தங்களுடைய For You Algorithm மற்றும் Codebase-ன் சில பகுதிகளை Open Source செய்து Transparency-க்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதனுடைய தொடர்ச்சியாகத்தான் இந்த புதிய Update-ஐயும் பார்க்கலாம்.