இன்று Apple நிறுவனத்தோட இந்த வருடத்துக்கான மிகப்பெரிய Event நடக்கப்போகுது. ஒவ்வொரு வருடமும் புதிய iPhone அறிமுகமாகும் இந்த Event இந்த முறை கொஞ்சம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றிருக்கு. காரணம் இந்த Event-ஐ நடத்தப்போகிறவர் Apple-ன் புதிய CEO John Ternus.
இந்த Event இந்திய நேரப்படி இன்று இரவு 10:30 PM மணிக்கு தொடங்கப்போகுது. Apple-ன் Official Website, Apple TV App மற்றும் YouTube மூலமாக இந்த Event-ஐ Live-ஆ பார்க்க முடியும். Tim Cook CEO பதவியில் இருந்து விலகி Executive Chairman ஆக சென்ற பிறகு, கடந்த செப்டம்பர் 1ம் தேதி John Ternus Apple-ன் புதிய CEO ஆக பொறுப்பேற்றுக்கொண்டார். அதனால் CEO ஆன பிறகு அவர் தலைமையில் நடக்கும் முதல் பெரிய Product Launch இதுதான்.
சரி, இந்த Eventல என்னென்ன வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பார்க்கலாம்.

iPhone 18 Pro மற்றும் Pro Max
முதலில் எல்லாரும் எதிர்பார்க்கிறது புதிய iPhone தான். இந்த முறை iPhone 18 Series-ல் iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max ஆகிய இரண்டு Models முக்கியமாக அறிமுகமாகும் என்று Rumours வெளியாகி இருக்கிறது.
ஆனால் இந்த முறை வழக்கம்போல எல்லா iPhone 18 Models-ம் ஒரே நேரத்தில் வராது என்று சொல்லப்படுகிறது. Base iPhone 18 மற்றும் iPhone 18 Air ஆகியவை அடுத்த வருடம் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
அதோட Pro Models-ல் Camera சம்மந்தமான சில முக்கியமான Changes, Battery improvements, Dynamic Island இன்னும் கொஞ்சம் சிறியதாக மாறுவது போன்ற விஷயங்கள் Rumour-ஆக சொல்லப்படுகிறது.
இதெல்லாம் எவ்வளவு உண்மை என்று இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்துவிடும்.
iPhone Ultra – Apple-ன் முதல் Foldable Phone?
இந்த Event-ல் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருப்பது இதுதான். Apple பல வருடங்களாக Foldable iPhone-ல் வேலை செய்து வருவதாக செய்திகள் வந்துகொண்டே இருந்தது. இப்போது அது உண்மையாகி Apple-ன் முதல் Foldable iPhone இந்த Event-ல் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு iPhone Ultra என்ற பெயர் பயன்படுத்தப்படலாம் என்று Rumours இருக்கிறது. இது வழக்கமான Foldable Phone போல இல்லாமல் ஒரு Passport மாதிரி திறந்து மூடும் Design-ல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. Samsung, Google, Motorola என பல நிறுவனங்கள் ஏற்கனவே Foldable Phone வெளியிட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது.
அதனால் Apple இப்போது Foldable Phone வெளியிடுவது வெறும் இன்னொரு புதிய Product Launch கிடையாது. Apple ஒரு Technology-க்கு வரும்போது அந்த Technology-யை Mainstream ஆக்கக்கூடிய அளவுக்கு Market-ல் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கும்.
அதனால்தான் இந்த Foldable iPhone மீது இவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறது.
Apple Watch மற்றும் AirPods
iPhone மட்டும் இல்லாமல் புதிய Apple Watch மற்றும் AirPods பற்றியும் Rumours இருக்கிறது. Apple Watch Series 12 மற்றும் Apple Watch Ultra 4 அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல புதிய AirPods பற்றியும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆனால் Camera உள்ள AirPods போன்ற பெரிய மாற்றம் இந்த வருடம் வராது என்றும், அது 2027ல் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் இருக்கிறது.
அதனால் Watch மற்றும் AirPods விஷயத்தில் பெரிய Surprise இருக்குமா அல்லது வழக்கமான Hardware Update மட்டும் இருக்குமா என்பதை Eventல் தான் பார்க்க வேண்டும்.
John Ternus-க்கு இந்த Event ஏன் முக்கியம்?
Tim Cook சுமார் 15 வருடங்கள் Apple-ஐ CEO-வாக வழிநடத்தி இருக்கிறார். அவருடைய காலகட்டத்தில் Apple-ன் Supply Chain, Services Business மற்றும் Hardware Business எல்லாமே மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்தது.
இப்போது அந்த இடத்திற்கு வருவது John Ternus. John Ternus 2001ம் ஆண்டு Apple-ல் Join பண்ணியவர். Hardware Engineering துறையில் பல வருடங்கள் பணியாற்றி Senior Vice President ஆக இருந்தவர். AirPods மற்றும் Apple Silicon-க்கு Mac-ஐ மாற்றியதில் Hardware Engineering குழுவில் முக்கியமான பங்கு வகித்திருக்கிறார்.
அதனால் Tim Cook போல Business மற்றும் Operations பக்கம் அதிகமாக அறியப்பட்ட ஒருவருக்கு பதிலாக, Product மற்றும் Engineering பின்னணி கொண்ட ஒருவர் Apple-ன் CEO ஆக வந்திருக்கிறார்.
இதனால் Apple-ன் அடுத்த சில வருடங்களில் Product Innovationக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கிடைக்குமா என்பதையும் பார்க்க வேண்டும். John Ternus CEO ஆன முதல் நாளிலேயே Apple Employees-க்கு அனுப்பிய Memo-ல் அடுத்த வாரம் மிகப்பெரிய Launch ஒன்று இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார். அதோட ஏற்கனவே வேலை நடந்து கொண்டிருக்கும் Products மட்டுமில்லாமல், இன்னும் நாம் நினைத்துக்கூட பார்க்காத Products பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இப்போதைக்கு இவை எல்லாமே Rumours தான். Apple அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை iPhone Ultra, iPhone 18 Pro, புதிய Apple Watch அல்லது AirPods குறித்து வெளியாகியிருக்கும் தகவல்களை Confirmed என்று சொல்ல முடியாது.
இன்றைய Event முடிந்த பிறகு உண்மையில் என்னென்ன அறிமுகமாகி இருக்கிறது என்று பார்த்தால்தான் Apple-ன் புதிய CEO John Ternus-ன் முதல் பெரிய Product Launch எப்படி இருந்தது என்று தெரியும்.