Apple நிறுவனத்தை Steve Jobs இல்லாமல் நினைத்து பார்க்க முடியாது அப்டினு ஒரு காலத்துல இருந்தது, அதேபோல Steve Jobsக்கு பிறகு Apple நிறுவனத்தை இவ்வளவு பெரிய அளவுக்கு கொண்டு போனது யார் அப்டினு கேட்டால் கண்டிப்பாக Tim Cook என்று சொல்லலாம். கிட்டத்தட்ட 15 வருடங்களாக Apple நிறுவனத்தின் CEOவாக இருந்த Tim Cook இப்போது அந்த பதவியில் இருந்து விலகி இருக்காரு. ஆனால் முழுமையாக Apple நிறுவனத்தை விட்டு போகவில்லை, Executive Chairman ஆக தொடர்ந்து Apple உடன் இருக்கப்போறாரு. அதோட புதிய CEOவாக John Ternus பொறுப்பேற்று இருக்காரு.
Tim Cook Apple நிறுவனத்தோடு 1998லேயே இணைந்தவர், அதன் பிறகு Steve Jobsக்கு கீழ் வேலை பார்த்து வந்தவர். குறிப்பாக Apple நிறுவனத்தோட Supply Chain மற்றும் Operationsல அவருக்கு இருந்த அனுபவம் தான் அவரை Steve Jobsக்கு அடுத்த CEOவாக கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. 2011 ஆம் ஆண்டு Steve Jobs CEO பதவியில் இருந்து விலகிய பிறகு Tim Cook அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டாரு.
அப்ப Tim Cook CEO ஆன போது Apple ஏற்கனவே மிகப்பெரிய நிறுவனம்தான். அதனால Steve Jobs மாதிரி புதுசு புதுசா Product உருவாக்கி Apple-ஐ வளர்ப்பார் என்று எல்லாரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் Tim Cook Apple-ஐ வேறு ஒரு விதத்தில் வளர்த்தாரு. குறிப்பாக Apple நிறுவனத்தோட Operations, Supply Chain, Services Business இதையெல்லாம் மிகப்பெரிய அளவுக்கு கொண்டு வந்தாரு.
Tim Cook காலத்தில் Apple-ன் Market Capitalization சுமார் 350 Billion Dollarல இருந்து 4 Trillion Dollarக்கு மேல போயிருக்கு. அதோட Apple-ன் வருடாந்திர Revenue 2011ல் இருந்த 108 Billion Dollarல இருந்து 2025ல் 416 Billion Dollarக்கு மேல போய் இருக்கு. அவருடைய காலத்துல Apple Watch, AirPods போன்ற புதிய Products வந்தது. Apple Silicon Chips மூலமாக Macல பயன்படுத்தப்பட்ட Intel Processorsல இருந்து Apple சொந்தமாக உருவாக்கிய Chipsக்கு மாறியது ரொம்ப முக்கியமான ஒரு மாற்றம். அதோட Apple Pay, Apple Music, Apple TV+, iCloud+ போன்ற Services எல்லாமே மிகப்பெரிய Business ஆக மாறியது. Apple-ன் Services Business மட்டும் 2025ல் 100 Billion Dollarக்கு மேல Revenue கொண்டு வந்து இருக்கிறது.
குறிப்பாக Services தான் Tim Cook-ன் காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்தது என்று சொல்லலாம். முன்னாடி Apple என்றாலே iPhone, Mac, iPad என்று Products தான் நினைவுக்கு வரும். இப்போது அந்த Products மட்டுமில்லாமல் அதற்கு மேல Apple Music, iCloud, Apple TV+, Apple Pay, App Store போன்ற Services மூலமாகவும் Apple தொடர்ந்து Revenue generate பண்ணிக்கிட்டு இருக்கு.
அதோட Privacy விஷயத்திலும் Tim Cook Apple-க்கு ஒரு தனி Identity கொடுத்தாரு. User Privacy ஒரு முக்கியமான விஷயம் என்று தொடர்ந்து சொல்லி வந்ததோட App Tracking Transparency போன்ற Features-ஐ கொண்டு வந்தாங்க. அதனால் Apple-ஐ Privacyக்கு முக்கியத்துவம் கொடுக்குற ஒரு Tech Companyவாக பல பேர் பார்க்க ஆரம்பிச்சாங்க.
சரி இவ்வளவு பெரிய Legacyயை விட்டுட்டு Tim Cook ஏன் இப்போது CEO பதவியில் இருந்து விலகுறாரு அப்டினு பார்த்தோம்னா, Apple அதிகாரப்பூர்வமாக இது ஒரு நீண்ட கால Succession Planningன் ஒரு பகுதியாகத்தான் நடக்கிறது என்று சொல்லி இருக்காங்க. அதாவது திடீரென்று நடந்த ஒரு விஷயம் கிடையாது. Tim Cook CEO பதவியில் இருந்து விலகி Executive Chairman ஆக இருக்கப்போறாரு. அதனால் Appleல அவரோட அனுபவம் தொடர்ந்து பயன்படுத்தப்படும்.
இப்ப Apple நிறுவனத்தின் புதிய CEO யார் அப்டினு பார்த்தோம்னா அது John Ternus. 2001ஆம் ஆண்டு Apple நிறுவனத்தில் சேர்ந்தவர். தற்போது Senior Vice President of Hardware Engineering ஆக இருந்த இவர் Apple-ன் Hardware Products உருவாக்கும் Team-ஐ Lead பண்ணிட்டு இருந்தாரு. iPad, AirPods உள்ளிட்ட பல முக்கியமான Apple Products உருவாக்கத்தில் இவருடைய Team முக்கிய பங்கு வகித்து இருக்கு.
Tim Cook மாதிரி Operations Background உள்ள ஒருவருக்கு பதிலாக Hardware Engineering Background உள்ள ஒருவரை Apple CEOவாக கொண்டு வந்து இருப்பது தான் இப்போது பலருடைய கவனத்தையும் ஈர்த்து இருக்கு. குறிப்பாக Apple அடுத்ததாக AI காலத்துக்குள் இன்னும் வேகமாக செல்ல வேண்டிய சூழ்நிலையில் John Ternusக்கு மிகப்பெரிய பொறுப்பு காத்திருக்கிறது.
ஏனென்றால் AI விஷயத்தில் Apple மற்ற நிறுவனங்களை விட கொஞ்சம் பின்தங்கி இருக்கிறது என்ற விமர்சனம் இருக்கிறது. Apple Intelligence வந்திருந்தாலும் அதோட முக்கியமான AI Features மற்றும் புதிய Siri போன்ற விஷயங்களில் ஏற்பட்ட Delay பற்றி ஏற்கனவே நிறைய பேசப்பட்டு இருக்கு. அதனால் John Ternus தலைமையில் Apple Hardware மட்டுமில்லாமல் AI பக்கமும் எப்படி முன்னேறப்போகிறது என்பதுதான் இனிமேல் பார்க்க வேண்டிய முக்கியமான விஷயம்.
Steve Jobsக்கு பிறகு Apple-ஐ 15 வருடங்களாக வழிநடத்திய Tim Cook இப்போது CEO பதவியில் இருந்து விலகி இருக்காரு. Steve Jobs மாதிரி ஒரு Product Visionary ஆக இல்லாமல் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தை எப்படி Operations, Supply Chain, Services மற்றும் Business மூலமாக வளர்க்க முடியும் என்பதை Tim Cook காட்டி இருக்காரு என்று சொல்லலாம். இனி Apple-க்கு Tim Cook காலம் முடிந்து John Ternus காலம் ஆரம்பிக்கிறது. Apple-ன் அடுத்த மிகப்பெரிய Product என்னவாக இருக்கும் என்பதை விட, AI காலத்தில் Apple-ஐ John Ternus எப்படி வழிநடத்தப்போறாரு என்பதுதான் இப்போ முக்கியமான கேள்வி. பொறுத்து இருந்து பார்ப்போம்.