Pixel போன்களில் Zero-Day Attack

Google Pixel போன் வைத்திருக்கிறீங்க அப்டினா இந்த செய்தியை கொஞ்சம் கவனமாக படிக்க வேண்டியது அவசியம். காரணம் Google Pixel போன்களில் இருந்த ஒரு Security Bug-ஐ பயன்படுத்தி சில Pixel போன்கள் Hack செய்யப்பட வாய்ப்பு இருந்து இருக்கலாம் என்று Google சொல்லி இருக்காங்க. அதுவும் இந்த Bug கண்டுபிடிக்கப்பட்ட பிறகு Hack செய்யப்பட்டதில்லை, Security Update வருவதற்கு முன்பே Attackers இதை பயன்படுத்தி இருக்காங்க. இதை Zero Day Attack என்றும் கூட சொல்லுவாங்க

pixel_phones

சரி முதலில் Zero-Day Attack என்றால் என்ன என்று பார்த்துவிடலாம்.

ஒரு Softwareல ஒரு Security Bug இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த Bug-ஐ பயன்படுத்தி Attack செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கிறது, ஆனால் அந்த Bug-க்கு இன்னும் ஒரு Security Update அல்லது Patch வெளியாகவில்லை என்றால் அதை பொதுவாக Zero-Day Vulnerability என்று சொல்வாங்க. இங்கே Pixel விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது.

இந்த Vulnerabilityக்கு CVE-2026-58704 என்று பெயர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது Pixel போனில் இருக்கும் Cellular Modem தொடர்பான ஒரு Security Bug. அதாவது நம்முடைய Phone Network-க்கு Connect ஆக உதவும் அந்த Modem பகுதியில் தான் இந்த பிரச்சனை இருந்திருக்கிறது.

இதில் இன்னும் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த Bug-ஐ பயன்படுத்தி Attack செய்ய Phone Owner எந்த ஒரு Link-ஐயும் Click செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எந்த ஒரு File-ஐயும் Download செய்ய வேண்டியதில்லை. App ஒன்றையும் Install செய்ய வேண்டியதில்லை. அதாவது User-க்கு தெரியாமலேயே Attack செய்யக்கூடிய Zero-Click Attack ஆக இது இருந்திருக்கிறது.

சரி, Modemல இருந்த Bug வைத்து என்ன செய்ய முடியும்?

இந்த Vulnerability மூலம் Modem-க்கு இருக்கும் Permission-ஐ தாண்டி கூடுதல் Access பெற முடியும் என்று Google-ன் Security Bulletin குறிப்பிடுகிறது. இதை Privilege Escalation என்று சொல்வாங்க.எளிமையாக சொல்லணும்னா, ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் Access இருக்கும் ஒரு Attack-க்கு அதைவிட அதிகமான Permission கிடைப்பது போல. இதன் மூலம் Phone-ல் இருக்கும் மற்ற Data-வுக்கும் Access கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.

இதனால் தான் இந்த Security Bug-ஐ Google சாதாரண Bug ஆக பார்க்காமல், limited and targeted exploitation என்று குறிப்பிட்டு இருக்கிறது. அதாவது எல்லா Pixel User-களையும் குறிவைத்து நடந்த ஒரு பெரிய Attack என்று Google சொல்லவில்லை. குறிப்பிட்ட சில Devices மீது Targeted Attack நடந்திருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் இருப்பதாகத்தான் தெரிவித்திருக்கிறது.

இந்த Bug-ஐ Google இப்போது Patch செய்துவிட்டது. September 2026 Pixel Security Update-ல் இந்த Vulnerabilityக்கான Fix கொடுக்கப்பட்டு இருக்கிறது. Google-ன் தகவல்படி 2026-09-05 Security Patch Level அல்லது அதற்கு பிறகு உள்ள Update இந்த பிரச்சனையை சரி செய்கிறது.

அதனால் Pixel Phone பயன்படுத்துறீங்க அப்டினா உங்கள் Phone-ல் Security Update வந்திருக்கிறதா என்பதை ஒருமுறை Check பண்ணிக்கொள்ளுங்கள்.

Settings → Security & privacy → System & updates → Security update

என்று சென்று Update இருக்கிறதா என்று பார்க்கலாம். Update வந்திருந்தால் Install செய்து Phone-ஐ Restart பண்ணிக்கொள்ளுங்கள். இந்த September Update-ல் இந்த ஒரு Bug மட்டும் இல்லை. Pixel Devicesக்காக பல Security Vulnerabilities-க்கு Fix கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதனால் Security Update-ஐ Ignore பண்ணாமல் Install செய்வது முக்கியம்.

TWICE WEEKLY

Tech Updates, Twice a Week

Get our latest tech reviews, guides, and industry news — delivered twice a week, straight to your inbox.

2 emails a week. Unsubscribe anytime.

Leave a comment