இனி Google Play Storeல் Vibe Code செய்யலாம்

நம்மளுக்கு ஏதாவது ஒரு தேவை இருக்கிறது அப்டினா அதற்கு ஏற்ற மாதிரி ஒரு Application பயன்படுத்துவோம். ஆனால் நமக்கு தேவையான எல்லா வசதிகளும் ஒரே Application-ல் இருக்குமா அப்டினு பார்த்தால் அது கொஞ்சம் கஷ்டம் தான். இதற்காகவே ஒரு Application உருவாக்கினால் எப்படி இருக்கும்? அதுவும் நமக்கு Coding எதுவும் தெரியாமல் AI உதவியுடன் உருவாக்க முடிந்தால் எப்படி இருக்கும்.

இதை சாத்தியப்படுத்தும் வகையில் தான் Google ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்திருக்காங்க. அதாவது இனி நீங்க AI பயன்படுத்தி உருவாக்கும் உங்களுக்கான Personal Apps-ஐ Google Play மூலமாகவே பயன்படுத்திக்கொள்ள முடியும். இதற்கு நீங்கள் ஒரு Professional Developer ஆக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

Vibe Coding என்றால் என்ன?

முதலில் Vibe Coding என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வோம். பொதுவாக ஒரு Application உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு Programming தெரிந்திருக்க வேண்டும். எந்த Programming Language பயன்படுத்த வேண்டும், எப்படி Code எழுத வேண்டும் என்று பல விஷயங்கள் இருக்கிறது.

ஆனால் இப்போது AI வந்த பிறகு நமக்கு தேவையான Application எப்படி இருக்க வேண்டும் என்று சாதாரணமாக நம்முடைய தேவையை சொன்னாலே AI அதற்கான Code-ஐ உருவாக்கி கொடுக்கிறது. இதன் மூலமாக நமக்கு Coding தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் ஒரு Application உருவாக்க முடியும். இதைத்தான் Vibe Coding என்று சொல்கிறார்கள்.

உதாரணமாக, உங்களுடைய தினசரி செலவுகளை கணக்கு வைக்க ஒரு Application வேண்டும் அல்லது உங்களுடைய வேலைகளை பட்டியலிட்டு வைத்துக்கொள்ள ஒரு App வேண்டும் அப்டினா அதை AI உதவியுடன் உருவாக்கிக்கொள்ளலாம்.

Google Play-ல் என்ன புதிய வசதி?

இதற்கு முன்னர் Google AI Studio போன்ற Tools மூலமாக நம்மால் Android Application உருவாக்க முடிந்தது. ஆனால் அதை நம்முடைய Phone-ல் பயன்படுத்துவதற்கு சில கூடுதல் வேலைகளை செய்ய வேண்டியிருந்தது.

இப்போது Google அறிமுகம் செய்துள்ள இந்த புதிய வசதி மூலமாக, AI உதவியுடன் உருவாக்கிய Application-ஐ Google Play வழியாகவே நம்முடைய Android Phone-ல் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த Application-ஐ எல்லோருக்கும் Public-ஆக வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. நமக்காக மட்டும் உருவாக்கிய App-ஐ நமக்கான Personal Library-ல் வைத்துக்கொள்ள முடியும்.

இந்த Apps எல்லாம் Google Play Store-ல் மற்றவர்கள் Search செய்யும்போதோ அல்லது சாதாரணமாக Apps Browse செய்யும்போதோ தெரியாது. அதை உருவாக்கிய நபர் மட்டுமே பயன்படுத்தும் வகையில் தனிப்பட்டதாக இருக்கும்.

இதற்காக தனியாக ஒரு Developer Account உருவாக்க வேண்டிய அவசியமும் இல்லை. உங்களுடைய வழக்கமான Google Account இருந்தாலே போதும்.

யாரெல்லாம் இதை பயன்படுத்தலாம்?

இதில் இன்னொரு சிறப்பான விஷயம் என்னவென்றால், ஒரு Application உருவாக்குவதற்கு Professional Developer ஆக இருக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக, உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தேவைக்காக மட்டும் ஒரு App வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அதற்காக Play Store-ல் ஏற்கனவே இருக்கும் Application-ஐ பயன்படுத்தினால் அதில் தேவையில்லாத பல Features இருக்கலாம். சில நேரங்களில் உங்களுக்கு தேவையான Feature இருக்காது.

அதற்கு பதிலாக உங்களுடைய தேவையை மட்டும் வைத்து ஒரு Application உருவாக்கிக்கொள்ளலாம். இதை ஒரு Developer தன்னுடைய Project-க்கான Prototype உருவாக்குவதற்கும் பயன்படுத்தலாம். அதேபோல Coding கற்றுக்கொண்டு இருப்பவர்களும் தங்களுடைய ஐடியாவை ஒரு Application-ஆக மாற்றிப் பார்க்கலாம்.

இந்த Apps-ஐ மற்றவர்களுடன் Share செய்ய முடியுமா?

தற்போதைக்கு இந்த வசதி முக்கியமாக நமக்காகவே Application உருவாக்கி பயன்படுத்துவதற்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் நம்முடைய Friends மற்றும் Family-யுடன் இந்த Apps-ஐ Share செய்வதற்கான வசதியையும் கொண்டுவர Google திட்டமிட்டிருக்காங்க.

அதாவது ஒரு சிறிய Group-க்காக மட்டும் ஒரு Application உருவாக்கி பயன்படுத்த முடியும். உதாரணமாக, உங்களுடைய குடும்பத்தினர் பயன்படுத்துவதற்காக ஒரு குறிப்பிட்ட App அல்லது நண்பர்களுடன் சேர்ந்து பயன்படுத்துவதற்கான ஒரு App உருவாக்கிக்கொள்ளலாம்.

ஒருவேளை நீங்கள் உருவாக்கிய Application நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை எல்லோருமே பயன்படுத்தும் வகையில் Public-ஆக Google Play Store-ல் வெளியிடுவதற்கும் எதிர்காலத்தில் வழிவகை செய்ய Google திட்டமிட்டிருக்கிறது.

ஆனால் Public-ஆக வெளியிடும்போது மற்ற Developer-களுக்கு இருக்கும் Trust & Safety Review மற்றும் Quality Standards போன்ற விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும்.

இந்த வசதி இந்தியாவில் எப்போது கிடைக்கும்?

Google இந்த வசதியை 2026 அக்டோபர் 13 அன்று அறிவித்திருக்காங்க. முதற்கட்டமாக அமெரிக்கா உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சில சந்தைகளில், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்தியாவில் எப்போது முழுமையாக கிடைக்கும் என்பது குறித்து தெளிவான அறிவிப்பு இல்லை. எனவே இந்தியாவில் இருக்கும் அனைவரும் இப்போதே இந்த வசதியை பயன்படுத்த முடியும் என்று சொல்ல முடியாது.

TWICE WEEKLY

Tech Updates, Twice a Week

Get our latest tech reviews, guides, and industry news — delivered twice a week, straight to your inbox.

2 emails a week. Unsubscribe anytime.

Leave a comment