Online Shopping இனி ரொம்ப Easy Google Gemini மூலம் நேரடியாக பொருட்கள் வாங்கலாம்

நாம ஏதாவது ஒரு Product வாங்க வேண்டும் அப்டினா பொதுவாக Google போய் அந்த Product-ஐ Search பண்ணுவோம், அதன் பிறகு Amazon, Flipkart என பல்வேறு இணையதளங்களில் அந்த Product எவ்வளவு விலைக்கு இருக்கிறது என்று பார்த்து அதில் நமக்கு தேவையானதை வாங்குவோம். இப்போ இதையே Google கொஞ்சம் மாற்றி அமைக்க பார்க்கிறது. அதாவது இந்தியாவில் Gemini மற்றும் Google-ன் AI Mode மூலமாகவே Flipkart-ல் இருக்குற சில Products-ஐ நேரடியாக வாங்கும் வசதியை Google Test பண்ண ஆரம்பிச்சிருக்காங்க.

இது எப்படி வேலை செய்யும் அப்டினு பார்த்தோம்னா, நீங்க Gemini-ல ஏதாவது ஒரு Product பற்றி Search பண்ணும்போது Flipkart-ல இருந்து அந்த Product-க்கான Listing உங்களுக்கு காட்டப்படும். அதில் சில Products-க்கு Buy என்ற Button-ம் காட்டப்படும். அந்த Buy Button-ஐ Click பண்ணினால் நேரடியாக Flipkart-ன் Checkout Page-க்கு கொண்டு செல்லும். அதாவது Product-ஐ தேடுவதற்கு Gemini-யை விட்டு வேறு Website-க்கு போக வேண்டிய அவசியம் இருக்காது.

ஒரு சில பயனாளர்களுக்கு மட்டும் Testing கொடுத்து இருக்காங்க அதேபோல எல்லா Products-க்கும் இந்த Buy Button வருவதில்லை. தற்போதைக்கு Smartphones, Electronics மற்றும் Mobile Accessories போன்ற சில Products-ல் தான் இந்த வசதி Test பண்ணப்பட்டு வருகிறது.

இதை Google எப்போது எல்லாருக்கும் கொண்டு வரப்போகிறது அப்டினு பார்த்தோம்னா, அக்டோபர் மாதத்தில் இதை இன்னும் அதிகமான Users-க்கு கொண்டு வர Google திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் Festival Shopping தொடங்கும் நேரத்தை கணக்கில் வைத்துதான் இந்த Rollout இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் Gemini மற்றும் AI Mode-ல் Amazon போன்ற மற்ற Shopping Websites-ன் Products-ம் காட்டப்படுகின்றன. ஆனால் இப்போதைக்கு Flipkart Products-க்கு மட்டுமே இந்த Buy Button கொடுக்கப்படுகிறது. இதற்கு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது.

Google ஏற்கனவே Flipkart-ல் Investment செய்து இருக்கிறது. 2024-ம் ஆண்டு Flipkart-ன் Funding Round-ல் Google சுமார் $350 Million முதலீடு செய்து அந்த நிறுவனத்தில் Minority Stake எடுத்திருக்கிறது. அதோடு Google AI மூலமாக Shopping செய்வதை இன்னும் பெரிய அளவில் கொண்டு வருவதற்காக Universal Commerce Protocol (UCP) என்ற Technology-யையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இதன் மூலமாக AI Agents நமக்காக ஒரு Product-ஐ கண்டுபிடிப்பதில் இருந்து அதை வாங்குவது வரைக்கும் Shopping Process-ல் உதவ முடியும். சரி, இதனால் நமக்கு என்ன பயன் என்று பார்த்தால், இனிமேல் ஒரு Product வாங்க வேண்டும் என்றால் முதலில் Google-ல் Search பண்ணி, அதன்பிறகு Website-க்கு போய் Product-ஐ தேடி, அதன் பிறகு வாங்க வேண்டும் என்ற Process கொஞ்சம் கொஞ்சமாக மாறப்போகிறது.

நீங்க Gemini-கிட்டே எனக்கு இந்த Phone வேண்டும், இதோட Price என்ன, எந்தெந்த Options இருக்கு என்று கேட்டு, பிடித்த Product-ஐ அங்கிருந்தே வாங்கக்கூடிய நிலை வரப்போகிறது.

இது இப்போதைக்கு ஒரு Test மட்டும்தான். அக்டோபரில் இதை இன்னும் அதிகமான Users-க்கு Google கொண்டு வருமா, அதன்பிறகு Amazon உள்ளிட்ட மற்ற Shopping Platforms-க்கும் இதே மாதிரி Buy Option கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

TWICE WEEKLY

Tech Updates, Twice a Week

Get our latest tech reviews, guides, and industry news — delivered twice a week, straight to your inbox.

2 emails a week. Unsubscribe anytime.

Leave a comment