AI புகைப்படமா? உண்மையான புகைப்படமா? இனி எளிதில் கண்டுபுடிக்கலாம் Google SynthID Detector உதவியோடு

நாம இப்ப AI பயன்படுத்தி ஒரு Image அல்லது Video உருவாக்குவது ரொம்பவே சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. அதுவும் உண்மையான புகைப்படம் போலவே இருக்கும் அளவுக்கு AI Images வந்துவிட்டதால், நாம Internetல பார்க்குற ஒரு Image உண்மையானதா அல்லது AI மூலம் உருவாக்கப்பட்டதா என்று கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயமாகத்தான் இருக்கு.

இப்படி AI மூலம் உருவாக்கப்பட்ட Fake Images மற்றும் Videos அதிகமாகிக்கொண்டே இருக்கும் நிலையில், Google இப்ப ஒரு புதிய Website-ஐ அறிமுகப்படுத்தி இருக்காங்க. அதுதான் SynthID Detector. இந்த Website மூலமாக நாம ஒரு Image, Video அல்லது Audio File-ஐ Upload செய்து அது AI மூலம் உருவாக்கப்பட்டதா என்று Check பண்ணிக்கொள்ள முடியும்.

SynthID என்றால் என்ன?

முதலில் SynthID என்றால் என்ன என்று பார்த்துவிடலாம். Google கடந்த 2023ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய ஒரு Technology தான் SynthID. AI மூலம் உருவாக்கப்படும் Content-க்குள் கண்ணுக்குத் தெரியாத ஒரு Digital Watermark-ஐ இது சேர்க்கும்.

அதாவது நாம ஒரு AI Image-ஐ பார்க்கும்போது அந்த Imageக்குள் ஏதாவது ஒரு Logo அல்லது Mark இருப்பது போல நமக்கு தெரியாது. ஆனால் SynthID Technology அதை கண்டுபிடிக்கக்கூடிய வகையில் அந்த Contentக்குள் ஒரு Invisible Watermark இருக்கும்.

இதுதான் அந்த Content AI மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை பின்னர் Verify செய்ய உதவுகிறது. Google-ன் Gemini, Imagen, Veo, Lyria போன்ற AI tools மூலம் உருவாக்கப்படும் Content-ல் SynthID பயன்படுத்தப்படுகிறது. இப்போது Google மட்டும் இல்லாமல் OpenAI, NVIDIA, Kakao போன்ற நிறுவனங்களும் SynthID-ஐ support செய்கின்றன.

புதிய SynthID Website எப்படி வேலை செய்கிறது?

synth_id_detector

இது ரொம்பவே Simple. நீங்க சந்தேகப்படும் ஒரு Image, Video அல்லது Audio File இருந்தால் அதை புதிய SynthID Website-ல் Upload பண்ணலாம். அதன் பிறகு அந்த File-ல் SynthID Watermark இருக்கிறதா என்று அது Check பண்ணும். Watermark இருந்தால், அந்த Content AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதை நமக்கு தெரிவிக்கும்.

இதில் Image மட்டும் இல்லாமல் Video மற்றும் Audio-வையும் Check பண்ண முடியும் என்பது தான் கூடுதல் சிறப்பு.

Journalists-க்கு இது எப்படி உதவும்?

இந்த Tool-ல் எனக்கு முக்கியமாக தெரிகிற ஒரு விஷயம் Journalists-க்கு இது ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும் என்பது தான். உதாரணத்துக்கு ஒரு பெரிய சம்பவம் நடந்திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். உடனே Social Media-ல் அதற்கான Photos மற்றும் Videos வர ஆரம்பிக்கும். அதில் சில உண்மையான Photos ஆக இருக்கலாம். அதே நேரத்தில் AI மூலம் உருவாக்கப்பட்ட Fake Images-ம் இருக்கலாம்.

அப்படி ஒரு Photo-வை வைத்து ஒரு செய்தி வெளியிடுவதற்கு முன்பு அதை SynthID மூலம் Check பண்ணிக்கொள்ளலாம். குறிப்பாக Breaking News நேரத்தில் Social Media-ல் பரவும் ஒரு Fake Image-ஐ உண்மையான Photo என்று நினைத்து செய்தியில் பயன்படுத்துவதை குறைக்க இது உதவும்.

அதுமட்டுமில்லாமல் ஒரு Photo அல்லது Video-வின் Source குறித்து சந்தேகம் இருந்தாலும் அதை Verify செய்ய ஒரு கூடுதல் வழியாக Journalists இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

AI Fake Images-ஐ தடுக்க இது உதவுமா?

இப்போது AI மூலம் உருவாக்கப்படும் Fake Images தான் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஒரு அரசியல் தலைவர் ஏதாவது ஒரு இடத்தில் இருந்தது போலவோ, ஒரு பெரிய சம்பவம் நடந்தது போலவோ AI மூலம் ஒரு Fake Image உருவாக்கி Social Media-ல் Share செய்வது இப்போது பெரிய விஷயமே இல்லை.

அதை பார்க்கும் ஒருவர் அது உண்மையான Photo என்று நினைத்து மீண்டும் Share செய்துவிட்டால், கொஞ்ச நேரத்தில் அந்த Fake Image ஆயிரக்கணக்கான பேரிடம் போய்விடும். இதுபோன்ற நேரத்தில் அந்த Image-ல் SynthID Watermark இருந்தால் அதை Check செய்து AI மூலம் உருவாக்கப்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியும்.

இதனால் Fake AI Images-ஐ உருவாக்குவதை முழுமையாக தடுக்க முடியாது. ஆனால் அந்த Fake Image-ஐ உண்மையானது என்று நம்பி Share செய்வதை குறைக்க உதவும்.

Google மட்டும் இல்லாமல் மற்ற AI நிறுவனங்களும் support

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் SynthID இப்போது Google-ன் Technology ஆக மட்டும் இல்லாமல் மற்ற AI நிறுவனங்களிடமும் support கிடைக்க ஆரம்பித்து இருக்கிறது. OpenAI, NVIDIA, Kakao ஆகிய நிறுவனங்கள் SynthID-ஐ support செய்கின்றன. Apple-ம் எதிர்காலத்தில் இதற்கு support கொடுக்க இருப்பதாக Google தெரிவித்திருக்கிறது.

இதனால் ஒரே இடத்தில் பல AI tools மூலம் உருவாக்கப்பட்ட Content-ஐ Verify செய்ய முடியும் என்பது பயனுள்ளதாக இருக்கும். Google ஏற்கனவே Search, Gemini மற்றும் Chrome ஆகியவற்றிலும் SynthID verification-ஐ கொண்டு வந்திருக்கிறது. Google-ன் தகவல்படி, இந்த verification features-க்கு தினமும் 1 million-க்கும் அதிகமான requests வருகின்றன.

AI மூலம் உருவாக்கப்படும் Content இன்னும் அதிகமாகிக்கொண்டே போகும் நிலையில், அது AI மூலம் உருவாக்கப்பட்டதா இல்லையா என்பதை தெரிந்து கொள்வதும் முக்கியமாகிக்கொண்டே இருக்கிறது. அதனால் Journalists மட்டும் இல்லாமல் Social Media பயன்படுத்தும் நாமும் சந்தேகப்படும் Photos, Videos ஆகியவற்றை Verify செய்து பார்த்துவிட்டு Share செய்வது நல்லது. SynthID இதற்கான ஒரு பயனுள்ள Tool தான்.

ஆனால் இது எல்லா AI Content-ஐயும் கண்டுபிடிக்கும் ஒரு Tool கிடையாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

TWICE WEEKLY

Tech Updates, Twice a Week

Get our latest tech reviews, guides, and industry news — delivered twice a week, straight to your inbox.

2 emails a week. Unsubscribe anytime.

Leave a comment