Google Gemini-யை நாம இத்தனை நாளா பயன்படுத்தணும் அப்டினா Browser Open பண்ணி அதுல Gemini websiteக்கு போய்தான் பயன்படுத்திட்டு இருந்தோம். இப்ப அதை இன்னும் சுலபமாக்கும் வகையில் Windowsக்கே Gemini-க்கான ஒரு தனி App-ஐ Google வெளியிட்டு இருக்காங்க. இதுல என்ன புதுசு இருக்கு அப்டினு பார்த்தோம்னா, நாம Computerல வேற ஏதாவது ஒரு வேலை பார்த்துக்கிட்டு இருக்கும்போது Gemini-யை பயன்படுத்த வேண்டும் என்றால் Browser-க்கு போக வேண்டிய அவசியம் இல்லை. Keyboardல Alt + Space கொடுத்தாலே Gemini உடனே Open ஆகும்.
உதாரணத்துக்கு நாம ஒரு Document எழுதிட்டு இருக்கோம் அப்டினா அதுல இருக்குற ஒரு விஷயத்தை Fact Check பண்ணணும் அல்லது ஒரு Presentationக்கு நல்ல Title வேணும் அப்டினா, அந்த வேலையை விட்டுட்டு Browserக்கு போக வேண்டிய அவசியம் இல்லை. Alt + Space கொடுத்து Gemini-யை Open பண்ணி அங்கேயே கேட்கலாம். அதோட Gemini-ல ஏற்கனவே இருக்குற சில Features-ம் இந்த Windows Appல கொடுக்கப்பட்டு இருக்கு. குறிப்பாக Gemini Spark மூலமாக பல Stepகள் கொண்ட Tasks-ஐ செய்ய சொல்ல முடியும். அதோட Gmail, Google Drive போன்ற Google Apps-களோடும் Gemini-யை Connect பண்ணி பயன்படுத்த முடியும்.
அதாவது நம்முடைய வேலைக்காக ஒரு Information Gmailல இருக்கிறது அல்லது ஒரு File Google Driveல இருக்கிறது அப்டினா அதை வைத்து Gemini-யிடம் வேலை செய்ய சொல்லும் வகையில் இந்த Integration பயன்படும். அதோட Images மற்றும் Videos கூட Gemini மூலமாக Generate பண்ணிக்கொள்ள முடியும். Google சொல்லி இருக்குறதுபடி Nano Banana மூலமாக Images-ம், Gemini Omni மூலமாக Videos-ம் உருவாக்க முடியும்.
இந்த App Windows 10 மற்றும் Windows 11 இரண்டிலுமே கிடைக்கிறது. அதோட இது Globalஆக வெளியிடப்பட்டு இருக்கிறது. Google இதை Lightweightஆக உருவாக்கி இருப்பதாகவும், நாம வேற வேலை பார்த்துக்கிட்டு இருக்கும்போது Computer-ஐ Slow பண்ணாமல் இயங்கும் வகையில் உருவாக்கி இருப்பதாகவும் சொல்லி இருக்காங்க.
ஆனால் இப்ப வந்திருக்குற Windows App-ஐ பார்த்தால், Browserல நாம பயன்படுத்துற Gemini-யை அப்படியே ஒரு Desktop Appக்குள் கொண்டு வந்தது போலத்தான் இருக்கு. அதே நேரத்தில் இன்னும் நிறைய Native Desktop Features கொண்டு வரப்போறோம் என்று Google சொல்லி இருக்காங்க.
Microsoft ஏற்கனவே Windowsக்குள்ளேயே Copilot-ஐ கொண்டு வந்துட்டு இருக்காங்க. அந்த வகையில Google-வும் Windows Usersக்காக Gemini-யை Desktopல இன்னும் எளிமையாக பயன்படுத்தும் வகையில் கொண்டு வந்து இருக்காங்க.
Nice