Opera Browser மூலம் இலவச Data பெறுங்கள்

நாம வெளிநாட்டுக்கு Travel பண்றோம் அப்டினா அங்க போனதும் முதல்ல நமக்கு தேவைப்படுறது Internet தான். Airport-ல இறங்குனதும் வீட்டுக்கு Message பண்ணுறதா இருக்கட்டும், Hotel எங்க இருக்கு என்று Google Mapsல தேடுறதா இருக்கட்டும், எதுவாக இருந்தாலும் Internet இல்லாமல் ரொம்பவே கஷ்டம்.அதற்காக Airportல SIM Card வாங்குறது அல்லது நம்மளோட SIM-க்கு Roaming activate பண்ணுறது என்று சில வழிகள் இருக்கு. இப்ப இதற்கு இன்னொரு சுலபமான வழியை Opera கொண்டு வந்திருக்காங்க.அதாவது Opera for Android Browser-க்குள்ளேயே eSIM வசதியை கொண்டு வந்திருக்காங்க. 

சரி eSIM என்றால் என்ன என்று முதலில் பார்ப்போம்.

நாம இப்ப பயன்படுத்துற SIM Card ஒரு Physical Card. அதை Phoneக்குள்ள போட்டு தான் Network பயன்படுத்துறோம். ஆனால் eSIM அப்டினா Phoneக்குள்ளேயே இருக்கும் ஒரு Digital SIM. அதை Software மூலமாக Activate பண்ணிக்கலாம். அதனால் வெளிநாடு போகும் போது Airportல SIM Card வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. Travel பண்ணுவதற்கு முன்னாடியே வீட்டில் இருந்தபடியே eSIM Setup பண்ணி வைக்கலாம். Destinationக்கு போய் அங்க Networkக்கு Connect ஆனதும் அது Activate ஆகும்.

இப்ப Opera இதையே தங்களுடைய Android Browserக்குள்ள கொண்டு வந்திருக்காங்க.அதாவது Opera Browserலேயே eSIM வாங்கலாம், எந்த Countryக்கு போறீங்க என்பதை Select பண்ணலாம், Data Plan வாங்கலாம் என்று எல்லாவற்றையும் Browserக்குள்ளேயே செய்ய முடியும். இதற்காக தனியாக இன்னொரு App Download பண்ண வேண்டிய அவசியம் இல்லை.

free_esim_opera

அதோட இவங்க ஒரு Free Data-வும் கொடுக்குறாங்க. 3GB Data இலவசமாக, 3 நாட்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இதை Claim பண்ணுவதற்கு Credit Card details அல்லது Email Address கூட கொடுக்க வேண்டியதில்லை என்று Opera சொல்லி இருக்காங்க. இதை பயன்படுத்த Opera for Android-ஐ Latest Versionக்கு Update பண்ணிட்டு, Browserல கீழே இருக்கும் Profile Icon-ஐ Click பண்ணி eSIM optionக்கு போக வேண்டும். அங்க Claim Now என்பதை கொடுத்து, நாம Travel பண்ணப்போகும் Country-ஐ Select பண்ணி Confirm பண்ணினால் போதும்.

free_esim

அதன் பிறகு eSIM-ஐ Phoneல Install பண்ணிக்கலாம். முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த Free Data-வை Travel பண்ணுவதற்கு முன்னாடியே Claim பண்ணி வைத்துக்கொள்ளலாம். அது உடனே 3 நாட்களை Count பண்ண ஆரம்பிக்காது. நாம Destination Countryக்கு போய் அங்க Networkக்கு Connect ஆன பிறகு தான் அந்த காலம் கணக்கில் வரும்.

இப்ப 3GB முடிஞ்சுடுச்சு அப்டினா என்ன பண்ணுவது?

மறுபடியும் Opera Browserலேயே eSIM Sectionக்கு போய் Data வாங்கிக்கொள்ளலாம். 3GB, 5GB, 10GB என்று Data Plans இருக்கு. ஒரு eSIM-ஐ வைத்துக்கொண்டே வேறு வேறு Countryக்கு போகும் போது அந்த Countryக்கான Data Plan-ஐ வாங்கிக்கொள்ளலாம்.உதாரணத்திற்கு நீங்க Thailand போயிட்டு அங்கிருந்து Malaysia, அதுக்கப்புறம் Singapore போறீங்க அப்டினா ஒவ்வொரு Countryக்கும் புதுசா eSIM Install பண்ண வேண்டியதில்லை. அதே eSIM-ஐ வைத்துக்கொண்டு தேவையான Data Plan-ஐ மட்டும் வாங்கிக்கொள்ளலாம்.

இந்த eSIM 47 destinations-ல் பயன்படுத்த முடியும். இதில் UAE, United States, United Kingdom, France, Germany, India அருகிலுள்ள Sri Lanka, Singapore, Thailand, Malaysia, South Korea என்று நிறைய நாடுகள் இருக்கிறது. ஆனால் ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. இது Phone Call அல்லது SMSக்கான SIM கிடையாது. இது Data மட்டும் கொடுக்குற eSIM. அதனால் உங்களுடைய Existing Phone Number அப்படியே இருக்கும்.இதற்கு சில Requirements-ம் இருக்கு. Latest Opera for Android இருக்க வேண்டும், Phone Android 10 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். அதோடு உங்கள் Phone eSIM Support பண்ண வேண்டும் மற்றும் Carrier Locked ஆக இருக்கக்கூடாது.

இந்த Free 3GB offer தற்போது US, UK, Germany, France, Canada, UAE, Brazil, Netherlands, Norway, Sweden மற்றும் Poland ஆகிய நாடுகளில் உள்ள Opera users-க்கு கிடைக்கிறது. ஆனால் eSIM-ஐ வாங்கி பயன்படுத்துவது உலகம் முழுவதும் supported destinations-க்கு கிடைக்கும் என்று Opera சொல்லி இருக்காங்க. இதை Opera மட்டும் புதுசா கண்டுபிடிச்சது என்று சொல்ல முடியாது. Travel eSIM services ஏற்கனவே நிறைய இருக்கு. ஆனால் ஒரு Browserக்குள்ளேயே eSIM-ஐ நேரடியாக கொண்டு வந்திருப்பது தான் Opera-வின் இந்த புதிய feature-ல் சுவாரசியமான விஷயம்.

அதுவும் Travel பண்ணுறவங்களுக்கு Internet என்பது இப்ப ரொம்ப முக்கியமான விஷயம். Airport போய் SIM தேடுவது, Roaming Charges பற்றி கவலைப்படுவது போன்ற விஷயங்களை கொஞ்சம் சுலபமாக்குவதற்காக இந்த Feature கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்த eSIM service-ஐ Holiday.com power பண்ணுகிறது.நீங்க அடிக்கடி வெளிநாடு Travel பண்றவங்க அப்டினா Opera-வோட இந்த புதிய Feature பயனுள்ளதாக இருக்கலாம்.

TWICE WEEKLY

Tech Updates, Twice a Week

Get our latest tech reviews, guides, and industry news — delivered twice a week, straight to your inbox.

2 emails a week. Unsubscribe anytime.

Leave a comment