இந்தியாவில் நாளை வெளியாகிறது Googleன் Fitbit Air

நாம பொதுவா ஒரு Smartwatch வாங்குறோம் அப்டினா அதுல Notifications, Calls, Apps என ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கும். ஆனால் இவை எதுவுமே இல்லாமல் நம்முடைய உடல்நலம் மற்றும் Fitness தொடர்பான விஷயங்களை மட்டும் Track செய்யும் ஒரு Device இருந்தால் எப்படி இருக்கும்? அப்படியான ஒரு Device தான் Google அறிமுகப்படுத்தியுள்ள Fitbit Air.

இந்த Fitbit Air-ஐ Google கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தியது. தற்போது இந்தியாவிலும் இதை அறிமுகம் செய்திருக்காங்க. ஆனால் இதன் விலைதான் கொஞ்சம் ஆச்சரியப்பட வைக்கிறது. அமெரிக்காவில் $99-க்கு விற்பனை செய்யப்படும் இந்த Device இந்தியாவில் ₹13,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

சரி, அப்படி என்னதான் இந்த Fitbit Air-ல் இருக்கிறது என்று சுருக்கமாகப் பார்ப்போம்.

என்ன இந்த Fitbit Air?

முதலில் இந்த Fitbit Air ஒரு Smartwatch கிடையாது. இது ஒரு Screenless Fitness Tracker. அதாவது இதில் எந்த ஒரு Display-வும் கிடையாது. நம்முடைய கையில் ஒரு சிறிய Band போல இதை அணிந்து கொள்ளலாம். அதன் பிறகு நம்முடைய உடல்நலம் தொடர்பான பல்வேறு தகவல்களை தொடர்ந்து Track செய்து கொண்டே இருக்கும்.

fitbit_air

இதில் Heart Rate Monitoring, Heart Rhythm Monitoring, Blood Oxygen (SpO2), Resting Heart Rate, Heart Rate Variability போன்ற பல Features இருக்கின்றன. அதோடு நம்முடைய தூக்கத்தையும் Track செய்யும். அதாவது எவ்வளவு நேரம் தூங்கினோம், எந்தெந்த Sleep Stages-ல் இருந்தோம் போன்ற தகவல்களை Google Health App மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், இதை அணிந்து கொண்டு Workout செய்யும்போது தனியாக ஒவ்வொரு முறையும் Tracking-ஐ Start செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பொதுவான சில Activities-ஐ இது தானாகவே கண்டுபிடித்து Track செய்யும்.

Google Health Coach உடன் இணைந்து செயல்படும்

இந்த Fitbit Air-ஐ Google Health App உடன் இணைத்து பயன்படுத்தலாம். அதோடு Google Health Coach மூலமாக நம்முடைய உடல்நலம் மற்றும் Fitness தொடர்பான தனிப்பட்ட ஆலோசனைகளையும் பெற முடியும்.இதில் Guided Workout போன்ற வசதிகளும் இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் Gym-ல் பயன்படுத்தும் Equipment அல்லது Workout Routine-ஐ Photo எடுத்து அதன் மூலமாகவும் நம்முடைய Exercise-களை Log செய்ய முடியும்.

sleep tracking_google_fitbit

ஆனால் Google Health Coach மற்றும் அதனுடைய Premium Features-ஐ பயன்படுத்துவதற்கு Subscription தேவைப்படலாம். Fitbit Air வாங்கும்போது முதல் மூன்று மாதங்களுக்கு Google Health Premium இலவசமாக வழங்கப்படுகிறது.

Battery Life எப்படி?

இதில் Display இல்லாததால் Battery Life கொஞ்சம் கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். Google தரப்பில் ஒரு முறை Charge செய்தால் ஏழு நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்று தெரிவித்து இருக்காங்க. அதோடு Fast Charging வசதியும் இருக்கிறது. வெறும் ஐந்து நிமிடங்கள் Charge செய்தாலே ஒரு நாள் முழுவதும் பயன்படுத்துவதற்கான Battery கிடைக்கும் என்று Google கூறுகிறது.

fitbit air

இந்தியாவில் விலை மற்றும் விற்பனை

இந்தியாவில் Fitbit Air-ன் விலை ₹13,999. அமெரிக்காவில் இதன் விலை $99. இந்தியாவில் இதன் விலை அமெரிக்க விலையை விட கணிசமாக அதிகமாக இருக்கிறது. அக்டோபர் 2 முதல் Google Store, Flipkart, Croma, Reliance Digital, போன்ற தளங்களில் இதை வாங்கிக் கொள்ளலாம். இதில் Obsidian, Berry, Lavender, Fog என நான்கு நிறங்கள் கிடைக்கின்றன.

யாருக்கு இந்த Fitbit Air பயன்படும்?

நீங்கள் ஒரு Smartwatch பயன்படுத்தும்போது வரும் Notifications, Calls போன்றவற்றால் கவனம் சிதறுகிறது என்று நினைத்தால் இந்த Fitbit Air ஒரு மாற்றாக இருக்கலாம். குறிப்பாக தூங்கும்போது Smartwatch அணிவது சிரமமாக இருப்பவர்களுக்கும், தொடர்ந்து தங்களுடைய Health Data-ஐ Track செய்ய விரும்புபவர்களுக்கும் இது பயன்படலாம்.

ஒரு பக்கம் Screen இல்லாத Fitness Tracker-களுக்கு வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், Google-ன் இந்த புதிய Device இந்தியாவில் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறுகிறது என்பது சுவாரசியமான விஷயம்தான்.

TWICE WEEKLY

Tech Updates, Twice a Week

Get our latest tech reviews, guides, and industry news — delivered twice a week, straight to your inbox.

2 emails a week. Unsubscribe anytime.

Leave a comment