Gmail-ல் தேவையில்லாத Emails-ஐ எளிதாக Delete செய்யலாம்

நாம Gmail பயன்படுத்த ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே நம்முடைய Inbox முழுவதும் நிறைய Promotional Emails வந்து குவிய ஆரம்பிச்சுடும். ஏதாவது ஒரு Websiteல Register பண்ணி இருப்போம், ஒரு Newsletterக்கு Subscribe பண்ணி இருப்போம் அல்லது ஏதாவது ஒரு Shopping Websiteல இருந்து Offer Mail வந்து கொண்டே இருக்கும். ஆரம்பத்தில் ஒன்று இரண்டு Mail வருவது பெருசா தெரியாது. ஆனால் நாளாக நாளாக பார்த்தோம்னா நம்முடைய Inboxல தேவையில்லாத Emails தான் அதிகமாக இருக்கும்.

இதையெல்லாம் ஒவ்வொரு முறையும் Delete பண்ணிட்டு இருப்பதற்கு பதிலாக Gmailலேயே அந்த Emailsக்கு Unsubscribe பண்ண முடியும்.

எல்லா Subscriptions-ஐயும் ஒரே இடத்தில் பார்க்கலாம்

Gmail Open பண்ணி இடதுபக்கத்தில் இருக்கும் More என்பதை Click பண்ணி அதற்குள் Manage subscriptions என்ற Option இருக்கிறதா என்று பாருங்க.அதில் உங்களுக்கு தொடர்ந்து Emails அனுப்பிக்கொண்டிருக்கும் Senders எல்லாம் காட்டப்படும். எந்த Sender அதிகமாக Emails அனுப்பி இருக்கிறார்கள் என்பதையும் பார்க்க முடியும். தேவையில்லாத Sender அருகில் இருக்கும் Unsubscribe Optionஐ Click பண்ணி அந்த Subscriptionல இருந்து வெளியேறலாம்.

இந்த Feature Web மட்டுமில்லாமல் Android மற்றும் iOSலயும் Rollout செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் எல்லா Accountகளிலும் இந்த Option ஒரே நேரத்தில் கிடைக்காமல் இருக்கலாம் என்று Google சொல்லி இருக்கிறது.

Unsubscribe பண்ணிய பிறகும் Mail வந்தால்?

Unsubscribe பண்ணிய உடனே அடுத்த நிமிடமே Emails வருவது நிற்கும் என்று சொல்ல முடியாது. அந்த Request Process ஆக சில நாட்கள் ஆகலாம். அந்த நேரத்தில் சில Emails தொடர்ந்து வர வாய்ப்பு இருக்கிறது. அதோட ஒரு முக்கியமான விஷயம். Unsubscribe மற்றும் Block இரண்டும் ஒன்றல்ல.

ஒரு Senderஐ Block பண்ணினால் அவர்களிடம் இருந்து வரும் அடுத்த Emails Spam Folderக்கு போகும். ஆனால் அது அந்த Mailing Listல இருந்து உங்களை Unsubscribe செய்துவிடாது. அதனால் உண்மையிலேயே அந்த Newsletter அல்லது Promotional Mail வேண்டாம் என்றால் முதலில் Unsubscribe பண்ணுவது தான் சரியான வழி.

இப்படி கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு தேவையில்லாத Subscriptions எல்லாம் Remove பண்ணிட்டீங்க அப்டினா நம்முடைய Gmail Inboxஐ ரொம்ப Cleanஆ வைத்துக்கொள்ள முடியும்.

TWICE WEEKLY

Tech Updates, Twice a Week

Get our latest tech reviews, guides, and industry news — delivered twice a week, straight to your inbox.

2 emails a week. Unsubscribe anytime.

Leave a comment